For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 2 ராசிக்காரங்களுக்கு கோபம் வந்தா, அத கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா?

|

இன்றைய கிரகங்களின் நிலைகளைப் பார்க்கும் போது, மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால், இன்று யாரிடமும் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. மேலும் எந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேறுவதற்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கப் போகிறது, யாரைத் தேடி பணம் வரப் போகுது, இன்றைய தினம் யாருக்கு சாதகமாக உள்ளது போன்ற பல கேள்விகளுக்கு இன்றைய ராசிப்பலனைப் படியுங்கள். இப்போது மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கான தினசரி ராசிப்பலனைப் பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். உங்கள் கோபத்தை மற்றவர்கள் மீது செலுத்துவதைத் தவிர்க்கவும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சகாக்களுடன் மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்வீர்கள். இந்த நாளில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.35 மணி முதல் மதியம் 3 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள சிக்கலை தீர்க்கலாம். மேலும், நிலுவையில் உள்ள சில வழக்குகள் இன்று தீர்க்கப்படும். சொத்து தொடர்பான விஷயத்தில் உங்களுக்கு ஆதரவாக முடிவு வர வாய்ப்புள்ளது, இது உங்களுக்கு ஒரு பெரிய நன்மையைத் தரும். வேலை என்று வரும் போது, ரிஸ்க் எடுக்க வேண்டாம் அல்லது அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். இன்று, உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கும். அது பரஸ்பர பிரிவை ஏற்படுத்தும். உங்கள் காதலியுடனான உரையாடலின் போது, நீங்கள் சிந்திக்காமல் உங்கள் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், உங்கள் இருவருக்கும் இடையே ஒரு பெரிய சர்ச்சை ஏற்படலாம். இன்று உங்கள் உடல்நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.30 மணி முதல் மாலை 6 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்கள் உறவில் நல்லிணக்கம் இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், இன்று மிகவும் கடினமான நாளாக இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகளுடன் உங்கள் சகாக்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறலாம். இந்த நாள் வணிகர்களுக்கு சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நீங்கள் எந்த சிறப்பான லாபத்தையும் பெற முடியாது. நிதி பற்றி பேசுகையில், உங்கள் போராட்டம் இன்றும் தொடரும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் சில தீவிர முடிவுகளை எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் காரணமாக உங்கள் உடல் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று நீண்ட காலமாக செய்யப்படாத உங்கள் சில வேலைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நிறைவடையும். இது உங்களுக்கு நிதி நன்மைகளைத் தர வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். எந்தவொரு முக்கியமான விஷயத்திலும், உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். உங்கள் அனைத்து பணிகளையும் முழு உற்சாகத்துடன் முடிப்பீர்கள். எனவே, இன்று உல்லாசமாக இருப்பதற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும் அமைதியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் கோபத்தின் மீது நீங்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டை வைத்திருந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனான உங்கள் சண்டைகள் கொஞ்சம் குறையும். பெற்றோரை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால், அது உங்கள் சொந்த நலனுக்காகவே. அவர்களின் உணர்வுகளை நீங்கள் காயப்படுத்தாமல் இருப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசும் போது, உங்கள் அலுவலக சூழல் இன்று மிகவும் பதட்டமாக இருக்கும். உங்கள் முதலாளிகளின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவிதமான அலட்சியத்தையும் தவிர்க்கவும். பணத்தின் அடிப்படையில் நாள் சாதாரணமாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மாலை 6.30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று எந்தவொரு வாக்குறுதியையும் அளிப்பதற்கு முன், நீங்கள் அதை நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இன்று நாள் முழுவதும் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் பயணம் மற்றும் பொழுதுபோக்குக்காக நிறைய பணம் செலவிடலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அமைதி இருக்கும். உங்கள் உறவினர்களுடனான நல்லுறவு காரணமாக, உங்கள் வீட்டுச் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவும் இருக்கும். இன்று நீண்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். வேலையைப் பற்றி பேசினால், வேலை செய்யும் நபர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்று சில பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெளிரிய பச்சை

அதிர்ஷ்ட எண் : 41

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 4.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று பல வகையான எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் வரக்கூடும். இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக அதிகப்படியான கோபம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். இல்லையெனில் உங்கள் வேலை போகலாம். மறுபுறம், வணிகர்கள் இன்று கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று புதிதாக எதையும் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். உங்கள் திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் தந்தையின் உடல்நிலை மோசமாக இருக்கும். ஆனால் உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். இன்று யோசிக்காமல் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் பணம் எங்காவது சிக்கிக் கொள்ளக்கூடும். இன்று நீங்கள் தவறான சொற்களைப் பயன்படுத்தினால் அது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகுந்த மரியாதையுடன் பேசுவது நல்லது. இன்று வணிகர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். யாராவது உங்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறார்கள் என்றால் அவர்களை ஏமாற்ற வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 27

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் சகாக்கள் கூட இன்று நல்ல மனநிலையில் இருப்பார்கள். உங்கள் வேலையை வேகமாக முடிப்பீர்கள். வணிகர்கள் இன்று அதிர்ஷ்டசாலிகள். எந்த பெரிய பரிவர்த்தனைக்கும் சாதகமான நாள். உங்கள் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். பொருளாதார முன்னணியில், நாள் நன்மை பயக்கும். அன்றாட வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : காலை 10.10 மணி முதல் மாலை 4 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் அதிர்ஷ்டம் வலுவாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் அதிகரித்த நம்பிக்கை உங்கள் இலக்கை அடைய உதவும். இன்று நீங்கள் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். நீங்கள் இன்னும் சிங்கிளாக இருந்தால், உங்களை ரகசியமாக நேசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்பதை இன்று அறிவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இன்று பொருளாதார முன்னணியில் ஒரு சிறந்த நாளாக இருக்கும். இன்று, நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.40 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று, உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கலாம், குறிப்பாக வணிகர்கள் தங்கள் திட்டங்களில் வெற்றியைப் பெற இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இன்று வேலை செய்வோருக்கு மிகவும் புனிதமான நாளாக இருக்கும். நட்சத்திரங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளன. எனவே கடினமாக உழைத்தால், விரைவில் நீங்கள் நிதி ரீதியாக பயனடையலாம். இன்று நீங்கள் கொஞ்சம் பணம் செலவழிக்க நினைத்தால், ஒரு புதிய சொத்தை வாங்குங்கள், எதிர்காலத்தில் அதன் நன்மை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆலோசனை வழங்கினால், அதை மனதில் ஏற்று நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களின் அலுவலக சூழல் சற்று பதற்றமாகவே இருக்கும். அலுவலகத்தில் கவனக்குறைவுடன் செயல்படாதீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். இன்று அதிக செலவு செய்வீர்கள். அன்பின் அடிப்படையில் நாள் நன்றாக இல்லை. உங்கள் உறவு குறித்து உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 18th January 2020 Saturday In Tamil

Check out the daily horoscope for 18th january 2020 saturday. Read on...
Story first published: Saturday, January 18, 2020, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more