Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்கள பணம் தேடிவரப்போகுது தெரியுமா? உங்க ராசி இதுல இருக்கா?
தினமும் அன்றைய நாளை தொடங்கும்போது காலண்டரில் ராசிபலன் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அன்றைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது.
12 கோள்களின் நகர்வும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.ராசிபலன்கள் என்பது நமக்கு அன்று நடக்கப்போவதை முன்கூட்டியே கூறுபவையாகும்.

இது நம்முடைய நாளை வெற்றிகரமாக கடப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நமது எதிர்காலத்தை கணக்கிடுவதில் நம்முடைய ராசி முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் உங்களின் ராசிப்படி உங்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
உங்கள் அன்புக்குரியவருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திப்பது உங்களுக்கு உற்சாகத்தை வழங்கும். விலைமதிப்பான பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும், பணவிஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். வணிகர்கள் நாள் இறுதிக்குள் பெரும் லாபம் ஈட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கடின உழைப்பு, வேலையில் விஷயங்களை பிரகாசமாக்கும். உங்கள் சகாக்கள் தங்கள் பிஸியான கால அட்டவணையைப் பொருட்படுத்தாமல் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும், ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம், அதிர்ஷ்டமான எண் 2.

ரிஷபம்
எதிர்பாராத விஷயங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும் என்பதால் நீங்கள் கவலைப்படுவீர்கள். நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும் என்பதால், இது ஒரு கடினமான நாளாக இருக்கும். தம்பதியினரிடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படக்கூடும், இது நிலைமையை மோசமாக்கும். உங்கள் கோபத்தையும் வார்த்தைகளையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் எதிர்மறையான அணுகுமுறை உடன்பிறப்புகளுக்கிடையேயான பிளவுக்கு முக்கிய காரணமாக இருக்கும். நீங்கள் முதலீட்டிற்குத் திட்டமிடலாம் என்பதால், நிதி விஷயங்கள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை, அதிர்ஷ்டமான எண் 4.

மிதுனம்
காலை நடைப்பயணத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள், இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும், எனவே நாள் முழுவதும் கவலையாக இருப்பார்கள். ஒருசில சூழ்நிலைகள் உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செல்லும், உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்பது பிரச்சினைகளை விரைவில் முடிக்க உதவும், குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடவில்லை என்று புகார் செய்யலாம். உங்கள் கூடுதல் வருமான ஆதாரத்தைத் திட்டமிடுவது பயனுள்ளதாக இருக்கும். பெற்றோரின் உடல்நலம் உங்களைத் தொந்தரவு செய்யும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு, அதிர்ஷ்டமான எண் 3.

கடகம்
இன்று உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும், உங்கள் மனைவி உங்களுக்கு அனைத்து விஷயத்திலும் உறுதுணையாக இருப்பார்கள். சட்டரீதியான சிக்கல்களில் உங்கள் குடும்பத்தின் உதவியுடன் நல்ல முடிவை எடுப்பீர்கள். உங்கள் செயல்திறனை நீங்கள் நிரூபிக்க வேண்டியிருப்பதால், இது ஒரு போட்டி நாளாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியில் பிஸியாக இருப்பார்கள். இது வணிகர்களுக்கு ஒரு சவாலான நாளாக இருக்கும். சுற்றியுள்ளவர்களை நம்புவதைத் தவிர்க்கவும். உங்கள் கூட்டாளர்களை சிறப்பான நாளாக உணர செய்வீர்கள். மாலை முடிவில் நீங்கள் சோர்வாக உணரலாம். அன்புக்குரியவர்களுடன் ஒரு திரைப்படத்திற்கு செல்வது மனநிலையை அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் கருநீலம், இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான எண் 6.

சிம்மம்
நீங்கள் திட்டமிட்டதிலிருந்து விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவிஷயத்தில் இது எதிர்பாராத நாளாக இருக்கும். அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கும், முதலீடுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். பங்குச் சந்தையில் இருப்பவர்கள் நாளின் அற்புதமான தொடக்கத்தைக் கொண்டிருப்பார்கள். கல்வித்துறையில் வெற்றியை அடைய மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வதந்திகள் பரப்புவதைத் தவிர்க்கவும், மற்றவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை தவிர்க்கவும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 9.

கன்னி
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவது உங்களை உற்சாகப்படுத்தும். ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றம் உங்களின் ஆற்றலை அதிகரிக்கும். உங்களின் நாள் நேர்மறையான எண்ணத்துடன் தொடங்கும், உங்களின் முதலாளி இன்று உங்களை அனைவரின் முன்னரும் பாராட்டுவார். வியாபாரத்தில் இருப்பவர்கள் இன்று அதிக லாபத்தை ஈட்டுவார்கள். பணவிஷயத்தில் உங்களின் பெற்றோரரை ஆலோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் ஊதா, அதிர்ஷ்டமான எண் 7.

துலாம்
இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் மனைவியின் ஆரோக்கியம் குடும்பத்திற்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும். மாணவர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். நெருங்கிய உறவினர் ஒருவர் மாலைக்குள் உங்களை சந்திக்கலாம். அலுவலகப்பணிகள் உங்களை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருக்கும். இது வணிகர்களுக்கு ஒரு சாதாரண நாளாக இருக்கும், ஆனால் மாலை நேரம் லாபகரமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும். உங்கள் நாளை தியானத்துடன் தொடங்குவது பலனளிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை, அதிர்ஷ்டமான எண் 4.

விருச்சிகம்
வணிகர்களுக்கு இது சிறந்த நாளாக இருக்கும், ஏனெனில் நீங்கள் நீண்டநாளாக விரும்பியதை இன்று சாதிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையால் அனைவரும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். திருமணம் ஆனவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். கார்ப்பரேட் துறையில் இருப்பவர்கள் மகிழ்ச்சியான வார இறுதிக்குப் பிறகு ஒரு பரபரப்பான தொடக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அதிகப்படியான அழுத்தம் காரணமாக மாணவர்கள் கல்வி குறித்து கலக்கமடையக்கூடும். சேமிப்பு விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 3.

தனுசு
புதுமணத் தம்பதியினருக்கு இது ஒரு சாகச நாளாக இருக்கும், ஏனெனில் நீங்கள் வெளிநாட்டு பயணத்திற்குத் திட்டமிடுவீர்கள். உங்கள் மனைவியின் ஆக்ரோஷமான தன்மை மற்றும் வெறித்தனமான வார்த்தைகள் நிலைமையை மோசமாக்கும் என்பதால், திருமண விஷயத்தில் விஷயங்கள் மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் சாதாரணமாக அணுகினாலே போதும் பிரச்சினை தீர்ந்துவிடும். பேசுவதற்கு முன் யோசித்து பேசவும், வாகனம் ஓட்டும்போது கவனமாகா இருக்க வேண்டியது அவசியம். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை, அதிர்ஷ்டமான எண் 1.

மகரம்
இன்று சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும், பணவிஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். கூச்சலிடுவதையும் மற்றவர்களிடம் கோபப்படுவதையும் தவிர்க்கவும். உங்கள் மனைவியின் அணுகுமுறை உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நெருங்கிய நண்பர்களை சந்திப்பது உங்களை உற்சாகமாக்கும். குடும்பத்தினர் மாலை நேரத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். சர்க்கரை நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருங்க வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் ஊதா, அதிர்ஷ்டமான எண் 4.

கும்பம்
மாணவர்கள் நண்பர்களுடன் இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். காலை நேரத்தை நல்ல செய்தியுடன் தொடங்குவீர்கள். மனைவியுடன் நேரம் செலவழிப்பது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். மாலை நேர பயணம் உற்சாகத்தை ஏற்படுத்தும். வணிகர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு பெரும் லாபம் ஈட்டுவார்கள். அமைதியைக் காக்க நெருங்கிய உறுப்பினர்களுடன் வாதங்களைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். வேலை / அலுவலகத்திற்கு புதியவர்களுக்கு இது ஒரு அற்புதமான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 6.

மீனம்
குடும்பத்தில் இன்று உற்சாகமும், சுவாரஸ்யமும் நிறைந்திருக்கும். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு இது ஒரு சாதகமான நாளாக இருக்கும், ஏனெனில் ஒரு பயணம் உங்கள் வழியில் வரக்கூடும், இதனால் நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.உங்கள் முயற்சி பாராட்டப்படும் என்பதால், விஷயங்கள் வேலையில் இணக்கமாக இருப்பேர்கள். நெருங்கிய ஒருவரிடமிருந்து நீங்கள் நிதி சலுகைகளைப் பெறலாம். உங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடவும். நடக்கும்போது கவனமாக இருங்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மெரூன், அதிர்ஷ்டமான எண் 9.



Click it and Unblock the Notifications











