For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரியனின் ஆசியால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு வரும்...

ஞாயிறு கிழமை சூரியனின் ஆதிக்கமும், ஆசியும் நிறைந்த நல்ல நாள். அரசு வேலை வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் இந்த நாளில் சூரிய ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

|

ஞாயிறு கிழமை சூரியனின் ஆதிக்கமும், ஆசியும் நிறைந்த நல்ல நாள். அரசு வேலை வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள் இந்த நாளில் சூரிய ஹோரையில் விளக்கேற்றி வழிபடலாம். ஞாயிறு கிழமை யாருக்கெல்லாம் பணவரவு வரும் யாருடைய நோய்கள் தீரும், யாருக்கெல்லாம் திடீர் மருத்துவ செலவு வரும் என்று யோசிக்கிறீர்களா? உங்களின் கேள்விகளுக்கு விடை தருகிறது இன்றைய ராசிபலன்கள். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்துல அநாவசிய பிரச்சனைகள் உண்டாகலாம். பேச்சில் கவனமா இருக்குறது நல்லது. வெளியூர் பிரயாணத்துனால வெட்டி அலைச்சலும், உடம்புக்கு கேடும் தான் வரும் வெளியே வெட்டியா அலையாதீங்க. இன்னிக்கு திடீர்னு தேவையில்லாத தண்டச் செலவும் விரயச் செலவும் வந்துடலாம். அதனால பணத்தை பத்திரமா பாத்துக்கோங்க. அதனால ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்துல அநாவசிய பிரச்சனைகள் உண்டாகலாம். பேச்சில் கவனமா இருக்குறது நல்லது. வெளியூர் பிரயாணத்துனால வெட்டி அலைச்சலும், உடம்புக்கு கேடும் தான் வரும் வெளியே வெட்டியா அலையாதீங்க. இன்னிக்கு திடீர்னு தேவையில்லாத தண்டச் செலவும் விரயச் செலவும் வந்துடலாம். அதனால பணத்தை பத்திரமா பாத்துக்கோங்க. அதனால ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்களால நல்லது நடந்துடும். இது வரைக்கும் எதிரியா இருந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம், இப்போ நெருங்கின சொந்தக்காரங்களா மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பிள்ளைங்களோட இருந்து வந்த மனஸ்தாபமும் மறையும். பண வரத்தும இன்னிக்கு கூடுதலா இருக்கும். வீட்டுல இருந்து உத்தியோகம் பாக்குறவங்க ரொம்ப உற்சாகமா வேலையை பாப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருக்கறவங்களுக்கு எதிர்பாத்த சலுகைகள் கிடைக்கும். கூடவே வருமானமும் கூடும். கூடப்பொறந்தவங்களும் இன்னிக்கு ரொம்பவே அனுகூலமா இருப்பாங்க. குடும்பத்துலயும் ஒத்துமை கூடிடும். பிசினஸ்ல தொந்தராவ இருந்த கடன் பிரச்சனையும் குறையும். இன்னிக்கு ரொம்ப கஷ்டமான வேலையை கூட ரொம்ப திறமையோட செஞ்சி முடிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. புதுசா பிசினஸ் ஆரம்பிக்கற முயற்சிகள்ல தடை, தாமதம்னு ஏற்படலாம். அதனால மன அமைதி கெடுறதுக்கான வாய்ப்புகள் இருக்கு. கவனமா இருந்துக்கோங்க. இன்னிக்கு பண வரத்தும் உங்களுக்கு சுமார் ரகம் தான். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம் : காலை 4.15 மணி மாலை 5 மணி

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல, இன்னிக்கு எந்த காரணத்துக்காகவும் வெளிய போகாம வீட்டுலயே முடங்கி கிடக்குறது நல்லது. குடும்பத்துல தேவையில்லாத வீண் வாக்குவாதங்கள் நேரலாம். எச்சரிக்கையா இருந்தா அதை அவாய்ட் பண்ணலாம். பிசினஸ்ல யாருக்கும் பரிதாபப்பட்டு கடன் கொடுத்துடாதீங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மனசு சஞ்சலப்படும். அமைதியில்லாம தவிக்கும். அதனால எந்த விஷயத்துலயும் நிதானமா நடந்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட நம்பர் 22

அதிர்ஷ்ட நேரம் : காலை 6.15 மணி பிற்பகல் 1.40 மணி

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைகள் காணாம போயி நிம்மதி உண்டாகும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும். புது ஆடை, நகை நட்டுன்னு வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடிடும். சொந்தக்காரங்க வர்றதுனால மகிழ்ச்சி கூடும். இன்னிக்கு சுபச் செலவுங்களும் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

துலாம்

துலாம்

துலா ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம் கூடிடும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க மூலமா நல்லது நடக்கும். பிசினஸுக்கு புதுசா இயந்திரங்கள், கருவிகள் வாங்குறதுக்கு ப்ளான் பண்ணுவீங்க. சுப காரிய முயற்சிகள்ல இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கிடும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். இன்னிக்கு நீங்க தொட்ட காரியம் எல்லாம் துலங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : காலை 10.35 மணி இரவு 7 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு எந்த காரியத்திலும் கொஞ்சம் நிதான போக்கோட நடந்துக்குறது நல்லது. நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு சொந்தக்காரங்க சப்போர்ட்டும் ஒத்தழைப்பும் கொடுப்பாங்க. பிள்ளைங்களால நல்லது நடந்துடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்ணலாம். அதனால கூடுதல் அக்கறை எடுத்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி இரவு 8.30 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல வேலைச் சுமை கொஞ்சம் கூடிடும். இருந்தாலும் அப்பப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறது நல்லது. சொந்தக்காரங்க மூலமா தண்டச்செலவுங்க வந்துடும். ஃப்ரண்ட்ஸுங்க கூட சின்னச் சின்னதா கருத்து மோதல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இன்னிக்கு எந்த வேலையையும் மந்தமா தான் செய்விங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுற்து நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 மணி இரவு 7 மணி

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். வீட்டுல இருந்து வேலை பாக்குறவங்களுக்கு அக்கம் பக்கம் அற்புதமா இருக்கும். அதனால வேலையையும் உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க. பிள்ளைங்களால சந்தோஷம் கொடுக்குற நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். நீங்க எடுக்குற முயற்சிகள் எல்லாமே வெற்றிகரமா முடியும். நிதி நிலைமையும் சூப்பரா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம் : காலை 5 மணி மாலை 5 மணி

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துகிட்டா லாபம் வரும். சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களோட சின்னச் சின்னதா மன வருத்தங்கள் உண்டாகலாம். இன்னிக்கு உங்களுக்கு பண வரத்து இருந்தாலும், அதைவிட செலவுங்க இரட்டிப்பா வந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 35

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி 9.30 இரவு

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமா சில பேருக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இருந்தாலும் கொரோனா பீதி இருக்குற இந்த நேரத்துல நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. பிசினஸ் சம்பந்தமா புதுசா போட்டுருக்குற ப்ளான் வெற்றியை கொடுக்கும். பிள்ளைங்களோட படிப்புல நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்துலயும் மகிழச்சியான சம்பவங்கள் நடந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3 மணி இரவு 9 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 17th May 2020 Sunday In Tamil

Check out the daily horoscope for 17th may 2020 sunday in tamil. Read on...
Story first published: Saturday, May 16, 2020, 16:13 [IST]
Desktop Bottom Promotion