Just In
- 8 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 20 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 23 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 23 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
- Sports
தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி!
- News
தாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!
- Finance
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் திருடு போக வாய்ப்பிருக்கு.. ஜாக்கிரதை!
இன்றைக்கு உங்க உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும். இன்றைய தினம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா? வெற்றியா? தோல்வியா? என்று யோசிக்கிறீங்களா? வேலை செய்யும் இடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொம்ப நல்ல நாளாக இருக்கும். அதேபோல கடகம், கன்னி, மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை சூப்பராக இருக்கும். மொத்தத்தில் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னைக்கு உங்க மூத்த சகோதரர் உடல் நலத்தில கவனமாக இருக்கச் சொல்லுங்க. வேலை செய்யிற இடத்தில கவனமாக இருங்க, ஹார்ட் ஒர்க் பண்ணுங்க சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும். உங்க வேலையில டிரான்ஸ்பர் உடன் கூடிய புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில செலவும் அதிகமாக இருக்கும். சிட்சுவேசனுக்கு தகுந்த மாதிரி நீங்க நிலைமையை சமாளிப்பீங்க. கல்யாணம் ஆன தம்பதிளுக்கு லவ் ரொம்ப அதிகமாகும். உங்க வாழ்க்கைத்துணையோட ஆதரவு கிடைக்கும். உங்க பிசினஸ்ல நீங்க இன்னைக்கு ஜெயிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம் :

ரிஷபம்
இன்னைக்கு நீங்க பட்ட பாட்டுக்கு பலன் கிடைக்கும். ஹார்ட் ஒர்க் பண்றவங்களுக்கு எப்பவுமே நல்ல பலன் கிடைக்கும். உங்க வாழ்க்கை துணையோட சப்போர்ட் இன்னைக்கு கிடைக்கும். ஏன்னா இன்னைக்கு அவங்க நல்ல மூடுல இருப்பாங்க. உங்க இரண்டு பேருக்கு இடையே லவ் அபெக்சன் அதிகமாகவே இருக்கும். உங்க உறவு ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும். உங்க உடல் ஆரோக்கியமும் இன்றைக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மிதுனம்
இன்றைக்கு நீங்க வேலை செய்யும் இடத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உங்க கனவுகளை நனவாக்க உங்க லட்சிய பயணத்தை நோக்கி நடைபோடுவீர்கள். உங்க ட்ரீம் சீக்கிரம் நிறைவேறும். பிசினஸ் செய்யிறவங்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். உங்க முதலீடுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. இந்த ராசிக்கார மாணவர்கள் படிப்பில முழு கவனம் செலுத்துங்க வெற்றியை ருசிப்பீங்க. சுயநலவாதிகள் கிட்ட எப்பவுமே நட்பு பாராட்டாதீங்க. அது எப்பவுமே உங்களுக்கு டேஞ்சர்தான். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் ரொம்ப எனர்ஜியா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

கடகம்
கல்யாண வாழ்க்கையில எப்பவுமே ஒரு சந்தோஷம் இருக்கும். பழைய நினைவுகளை அசைபோடுவீங்க. உங்க துணையோட நீங்க உங்களுக்கு பிடிச்ச பகுதிக்கு விசிட் பண்ணுவீங்க. பணம் வரும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். மதியத்திற்கு மேல உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில நீங்க எதிர்வாதம் பண்ணாதீங்க. தப்பை யாராவது சுட்டிக்காட்டினா அதை ஏத்துக்கங்க. அமைதியா இருந்தா இந்த நாளை அற்புதமாக கடத்திடலாம். வியாபாரம் பண்றவங்களுக்கு இன்றைக்கு ரொம்ப நல்ல நாள். நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் இன்றைக்கு அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.15 மணி மாலை 5 மணி

சிம்மம்
நீங்க எப்பவுமே பாசிட்டிவ் ஆக திங்க் பண்ணுவீங்க. வேலை செய்யிற இடத்திலயும் ஹார்ட் ஒர்க் பண்ணுவீங்க. அந்த வேலையே உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். நிதி நிலைமை உங்களுக்கு சுமாராத்தான் இருக்கும். பணத்தை பத்திரமாக வச்சிக்கங்க இல்லாட்டி திருடு போயிரும். குடும்ப வாழ்க்கையில மன அமைதி ஏற்படும். உங்க பெற்றோர்கள் ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். காதல் துணையோட ரொம்ப ஸ்வீட்டான ரொமான்ஸ் ஆன அன்பை அனுபவிப்பீங்க. மொத்தத்தில காதல் உறவுக்கு அற்புதமான நாளாக இன்றைக்கு அமையும். நீங்க இன்னைக்கு அவங்க கூட செலவு பண்ற நேரம் உங்க சந்தோஷத்தை அதிகப்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட நம்பர் 22
அதிர்ஷ்ட நேரம் : காலை 6.15 மணி பிற்பகல் 1.40 மணி

கன்னி
ஆபிஸ்ல உங்க வேலையை பார்த்து உங்க சீனியர்ஸ் கடுப்பாயிருவாங்க, அந்த அளவுக்கு நீங்க தப்பு பண்ணியிருப்பீங்க. இன்னைக்கு வேலையில ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் அப்பத்தான் நீங்க வேலை செய்யிற இடத்தில ஜெயிக்க முடியும். திருமண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருப்பீங்க. சின்ன சண்டையோ வாக்குவாதமோ வேண்டாம். உங்க துணையே நீங்க கட்டுப்படுத்த நினைக்காதீங்க அதுவே பிரச்சினையாயிரும். பொருளாதார நிலை உங்களுக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும். சின்ன அளவில மன அழுத்தம் ஏற்படும். உங்க உடல் ஆரோக்கியத்தில நீங்க கவனமாக இருங்க நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

துலாம்
கல்யாணமான தம்பதிகளுக்கு இன்னைக்கு ரொம்ப நல்ல நாளாக விடியும். பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு இன்னைக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கும். உங்க நேர்மறை எண்ணமே உங்களை சந்தோஷப்படுத்தும். மனைவி சொல்லே மந்திரம்னு இருந்தாலும் அவங்க சொல்ல வர்ற வார்த்தைகளை கவனமாக புரிஞ்சு பதில் சொல்லுங்க இல்லாட்டி சிக்கலாயிரும். பண விசயத்தில கவனமாக இருங்க இல்லாட்டி பணத்தை திருடிட்டு போயிருவாங்க. கொஞ்சம் சோம்பேறியா இருப்பீங்க எதையும் அலட்சியப்படுத்தாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.35 மணி இரவு 7 மணி

விருச்சிகம்
உங்க உடல் ஆரோக்கியம் இன்னைக்கு ரொம்ப பெர்பெக்ட் ஆக இருக்கும். ரொம்ப எக்ஸைட் ஆகவும் எனர்ஜியாகவும் ஃபீல் பண்ணுவீங்க. சின்ன சின்ன சவால்களை சந்திப்பீங்க. வேலை செய்யிற இடத்தில உங்க வேலையை பார்த்து சீனியர்ஸ் ரொம்ப சந்தோஷ படுவாங்க. உங்க பெற்றோர்களாக ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமை இன்றைக்கு ரொம்ப உற்சாகத்தை கொடுக்கும் பழைய கடன்களை பைசல் பண்ணுவீங்க. புது வேலை கிடைக்கும். சிலர் புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுவீங்க. உங்க ஆரோக்கியம் இன்றைக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி இரவு 8.30 மணி

தனுசு
இன்னைக்கு நீங்க சில சவால்களை சந்திப்பீங்க. இதனால உங்களுக்கு ஸ்டெர்ஸ் ஆக ஃபீல் பண்ணுவீங்க. வீட்ல சூழ்நிலை எடக்கு மடக்கா இருந்தாலும் அதை நீங்க ஈஸியாக சால்வ் பண்ணுவீங்க. பண பிரச்சினையில ஜாக்கிரதையாக இருங்க. அதிகமாக முதலீடு பண்ணாதீங்க சிக்கலாயிரும். வேலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் அதுவே உங்களை டயர்ட் ஆக மாற்றிடும். உடல் ஆரோக்கியம் இன்னைக்கு நல்லா இருக்கும். ஆன்மீக பயணம் அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 மணி இரவு 7 மணி

மகரம்
இன்னைக்கு உங்க திருமண வாழ்க்கையில சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். கம்முன்னு இருந்துட்டா இன்னைக்கு ஜம்முன்னு கடத்திடலாம். பணம் வருவதற்கு முக்கியமான வழி கிடைக்கும். உங்களோட செலவுகளைப் பற்றி வீட்ல விமர்சனம் பண்ணுவாங்க. உங்க வேலையில கவனம் செலுத்துங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. பயணம் உங்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும் நிதி நிலைமை உங்களுக்கு சுமாராத்தான் இருக்கும். வேலையும் சாதாரணமாகவே இருக்கும். உங்க பெற்றோர்களின் ஆரோக்கியம் நல்லா இருக்கும் அவங்க ஆதரவு கிடைக்கும். உங்க எனர்ஜி லெவல் அதிகமாகனும்னா நீங்க இன்னைக்கு ரெஸ்ட் எடுத்தே ஆகணும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம் : காலை 5 மணி மாலை 5 மணி

கும்பம்
இன்னைக்கு நீங்க உங்க மன அமைதியை கண்டினியூ பண்ணுங்க. உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய மக்கள் கிட்ட நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. உங்க பணப்பிரச்சினை இன்னைக்கு தீர்வுக்கு வரும். நிறைய பணம் வரும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஈஸியாக சால்வ் பண்ணுங்க. இல்லாட்டி அதுவே பெரிய பிரச்சினையில கொண்டு போய் விட்ரும் மன அழுத்தத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 31
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி 9.30 இரவு

மீனம்
இன்னைக்கு உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க நிதி நிலைமை உங்களுக்கு கை கொடுக்கும். உங்க துணையோட உறவு அற்புதமாக இருக்கும் வீட்ல முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. அன்பும் ஆதரவும் உங்களுக்கு அற்புத மாற்றத்தை தரும். உங்க பார்ட்னரை பற்றி அடுத்தவங்க கிட்ட கமெண்ட் பண்ணாதீங்க. வேலை செய்யிற இடத்தில சூழ்நிலை ரொம்ப நல்லா இருக்கும். சீனியர்ஸ் உங்க வேலையை மதிப்பாங்க. தட்டிக்கொடுப்பாங்க. இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3 மணி இரவு 9 மணி