For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (16.05.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தம் கணிசமாக உயரக்கூடும்…

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 16th May 2021 Sunday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

நீண்ட காலத்திற்குப் பிறகு, உங்கள் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லா மன அழுத்தத்தையும் மறந்து இந்த வாய்ப்பை முழுமையாக அனுபவிப்பது நல்லது. குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளை தனித்தனியாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இது உங்களுக்கு மிகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்பாக உணர வைக்கும். மேலும் உங்கள் உறவையும் இது பலப்படுத்தும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கு வேடிக்கைக்காக கொஞ்சம் பணம் செலவிடுவீர்கள். இன்று பயணம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால், கடைசி நேரத்தில் உங்கள் திட்டத்தை மாற்றி பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று குடும்பப் பொறுப்புகளின் சுமை அதிகமாக இருக்கும். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இது உங்கள் சுமையை இலகுவாக்குவது மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் அன்பையும் மரியாதையையும் அதிகரிக்கும். குழந்தையின் மூலமாக இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை குறித்த கவலையிலிருந்து இன்று விடுபடலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்ய நல்ல நாள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். மேலும், உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். வணிகர்களின் நிதி சிக்கல்களை இன்று தீர்க்க முடியும். உடல்நிலையைப் பற்றி பேசினால், உடல் ரீதியாக நீங்கள் மிகவும் வலிமையாகவும், மன அமைதியையும் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதகமான நாள். இன்று உடல்நலப் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும், நீங்கள் நன்றாக உணருவீர்கள். மிகவும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை குறைக்க முடியும். உங்கள் எல்லா பணிகளையும் முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள் தங்கள் கடின உழைப்பின் சரியான பலனை இன்று பெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முயற்சிக்கும் வேலை இன்று உங்களை தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடனான உங்கள் உறவுகள் நன்றாக இருக்கும். இன்று வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், உங்களிடையே பரஸ்பர புரிதல் நன்றாக இருக்கும். பொருளாதார நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்

கடகம்

காதல் விஷயத்தில் இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலையில் பரபரப்பாக இருப்பதால், வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம். அதனை சரிசெய்ய இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், வாழ்க்கைத் துணையுடன் உங்கள் மனகசப்பு நீங்கும். வீட்டின் சூழ்நிலை இன்று அமைதியாக இருக்கும். பெற்றோரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். சில சாதகமான விஷயங்கள் அலுவலகத்தில் நடக்கலாம். உங்கள் கடின உழைப்புக்கு நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் மறைக்கப்பட்ட திறமை அனைவருக்கும் வெளிப்படும். தொழிலதிபர்கள் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். மன கவலைகளிலிருந்து நீங்கி நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இந்த நாட்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்க நேரிடும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அது ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவை ஏற்படுத்தலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நிறைய விமர்சிக்க நேரிடும். எனவே, வேலையுடன் சேர்த்து உங்கள் நடத்தையையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இணக்கமாக இருக்கும். ஒன்றாக இணைந்து வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள் இல்லை. உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் இருக்கலாம். எனவே, வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் முன்னேற வாய்ப்புள்ளது. இன்று வணிகர்களுக்கு அதிக நன்மை கிடைக்காது. புதிய ஒப்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். தந்தையுடனான உங்கள் உறவு சற்று சிக்கலாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இன்று எந்த சமூக நிகழ்விலும் பங்கேற்கலாம். இருப்பினும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 9:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் மற்றும் கௌரவங்களைப் பெறுவீர்கள். வணிகர்கள் இன்று எந்த முடிவை எடுத்தாலும் கவனமாக இருக்கவும். இன்று வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்கவும். இல்லையெனில், உங்களிடையே பிரிவு ஏற்படலாம். குடும்பம் தொடர்பான சில விஷயங்கள் இன்று உங்களைத் தொந்தரவு செய்யலாம். நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவிடுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தின் முன்னேற்றத்தால் நீங்கள் மன ரீதியாக நன்றாக இருப்பீர்கள். திடீரென்று நீங்கள் இன்று ஒரு குறுகிய பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 33

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் 6:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

எந்தவொரு நல்ல செய்தியையும் குழந்தைகள் வாயிலாக பெறலாம். இது வீட்டில் உற்சாகமான சூழ்நிலையை உருவாக்கும். குழந்தைகளால் நீங்கள் இன்று பெருமைப்படுவீர்கள். இன்று, வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் அன்றாட பணிகளை சுலபமாக முடிக்கலாம். இது உங்கள் இருவருக்கும் ஒன்றாக நேரம் செலவிட நல்ல வாய்ப்பளிக்கும். அலுவலகத்தில் சற்று வித்தியாசமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் மனநிலையால் மகிழ்ச்சியடையமாட்டார்கள். எனவே, நேரத்தை கவனித்துக்கொள்வது நல்லது. இன்று சோம்பலைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் மற்றும் கூட்டு வியாபாரிகள் இன்று அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நாளின் இரண்டாம் பகுதியில், நீங்கள் ஒரு நண்பரை திடீரென சந்திக்கலாம். உங்கள் கோபத்தை இன்று கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் பொருளாதார நிலை மேம்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் வெற்றிபெற விரும்பினால் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். இந்த பணத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். இன்று யாரும் உதவி கோரினால், அவருக்கு தன்னலமின்றி உதவுங்கள். இதன் பொருத்தமான முடிவை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள். உங்கள் வீட்டின் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உடல்நலம் பற்றிப் பேசும்போது, இன்று சற்று சோம்பலாக உணருவீர்கள். உங்களை உற்சாகமாகவும், புதியதாகவும் வைத்திருக்க, தினசரி உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வணிகர்களின் எந்தவொரு முக்கியமான வேலையிலும் பெரிய தடை ஏற்படலாம். எனவே, பொறுமையாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் கலக்கப்படும். சிந்தனையுடன் செலவிடுவது நல்லது. இன்று வீட்டிலும் வெளியேயும் எந்தவிதமான தகராறையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தடையிடுவதை தவிர்த்திடவும். மேலும் யாரை பற்றியும் கருத்துத் தெரிவிக்காதீர்கள். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பரபரப்பான வழக்கத்தின் காரணமாக, உங்கள் உடல்நலம் குறைய வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் இரவு 7:05 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று திடீரென்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரக்கூடும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். பொருளாதார முன்னணியில், இன்று மிகவும் நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதோடு, உங்கள் செலவுகளும் குறையும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணை உங்களுக்கு வித்தியாசமாகவும் அற்புதமாகவும் ஏதாவது செய்ய நினைக்கலாம். அன்புக்குரியவரின் அன்பையும் தோழமையையும் பெறுவதன் மூலம் நீங்கள் மிகவும் நிம்மதியடைவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தினருடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி உங்களை முழுமையாக ஆதரிப்பார். இது உங்கள் வேலையை இன்னும் எளிதாக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இரவில் தாமதமாக தூங்குவதைத் தவிர்க்கவும். இது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 6:20 மணி வரை

மீனம்

மீனம்

பொருளாதார முன்னணியில், இன்று நல்ல நாள். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். மேலும் நிதி குறித்த கவலையிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இன்று வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மன அழுத்தத்தை உணருவீர்கள். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முயற்சிக்கவும். இல்லையெனில், உங்களது சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். சில்லறை வணிகர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். வணிகம் வளர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் ஒற்றுமை மேலோங்கும். உங்கள் வாழ்க்கைத் துணை நன்றாக இருப்பார். அன்பான தம்பதிகளுக்கு இன்று மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பொய் சொல்வதைத் தவிர்த்து, அவரின் உணர்வுகளை மதிக்கவும். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 16th May 2021 Sunday In Tamil

Check out the daily horoscope for 16th may 2021 sunday in tamil. Read on.
Story first published: Saturday, May 15, 2021, 22:54 [IST]
Desktop Bottom Promotion