Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சனிபகவானால் இன்றைக்கு இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம் அடிக்கப் போகுது...
சனி பகவான் சிலருக்கு சந்தோஷத்தை தருவார் சிலருக்கு சங்கடங்களை தருவார். வைகாசி 3ஆம் தேதி சனிக்கிழமை இன்று சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம் வரப்போகிறது. சிலருக்கு அதிர்ஷ்டமும் பணவருமானமும் வரும்.
சனி பகவான் சிலருக்கு சந்தோஷத்தை தருவார் சிலருக்கு சங்கடங்களை தருவார். வைகாசி 3ஆம் தேதி சனிக்கிழமை இன்று சில ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம் வரப்போகிறது. சிலருக்கு அதிர்ஷ்டமும் பணவருமானமும் வரும். வேலை வாய்ப்பு, வருமானம் எப்படி இருக்கும் என்று யோசிப்பவர்களுக்கு இன்றைய ராசி பலன் மூலம் விடை கிடைக்கப் போகிறது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு வெளியூர் பிரயாணத்துனால வெளிவட்டாரத்துல புதுசா நட்பு கிடைக்கும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு உழைக்குறதுக்கு தகுந்த மாதிரி தான் சம்பளமும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளும் இன்னிக்கு கைகூடும். குடும்பத்துல கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகிடும். பிசினஸ்ல இன்னிக்கு லாபம் அமோகமா கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க உதவியால வரவிருந்த பிரச்சனைகள் குறையலாம். நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு இன்னிக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு நல்லதொரு அனுகூலம் உண்டாகும். குடும்பத்துல ஒத்துமையும் அமைதியும் நிலவிடும். பிசினஸ்ல கூட்டாளியோட ஐடியாவை கேட்டு நடந்துகிட்டா வியாபாரம் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு எந்த வேலையையும் நிதானமா சிந்திச்சி செய்யுறது நல்லது. பெத்தவங்களோட அன்பும், சப்போர்ட்டும், மனசுக்கு புது தெம்பும் நம்பிக்கையையும் கொடுத்துடும். இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும் கூட வீட்டோட தேவைகள் எல்லாமே பூர்த்தியாகிடும். குடும்பத்துல பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்துடும். பிசினஸ்ல இன்னிக்கு வியாபாரம் மந்தமா தான் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணி வரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, சுப காரியம் சம்பந்தமான முயற்சிங்களை கொஞ்சம் அவாய்ட் பண்றது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல வீட்டுக்குள்ளயே இருக்க பாருங்க. பேச்சுலயும், பணம் கொடுக்கல் வாங்கல்லயும் கூடுதல் கவனத்தோட இருக்குறது அவசியம். மத்தவங்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீங்க. இன்னிக்கு தேவையில்லாத மனக்கஷ்டம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களுக்கு சந்தோஷம் கொடுக்குற நல்ல தகவல்கள் வீடு தேடி வந்துடும். வெளியிடத்துல புதுசா ஃப்ரண்ட்ஷிப் கிடைக்கும். உத்தியோகத்துல எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பிள்ளைங்க உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. கல்யாணம் சுப காரிய முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப அற்புதமா இருக்கும். ரொம்ப நாள் கழிச்சி ஃப்ரண்ட்ஸுங்களை சந்திச்சி மனசு விட்டு பேசி சந்தோஷப்படுவீங்க. புதுசா பிசினஸ் ஆரம்பிக்குறதுக்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடிஞ்சிடும். விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி சந்தோஷப்படுவீங்க. மொத்தத்துல இன்னிக்கு உங்க திறமைகளை வெளிப்படுத்துற நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா நல்லது நடந்துடும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல கைக் காசை ரொம்பவே யோசிச்சி சிக்கனமா செலவழிச்சா, கடன் வாங்காமா தப்பிக்கலாம். சுப காரிய முயற்சிகள்ல இடைஞ்சல் உண்டாகலாம். குடும்பத்துலயும் இன்னிக்கு மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த மறைமுக எதிரிங்களோட இம்சை காணாம போயி வியாபாரம் விருத்தியாகும். வீடு, வண்டி வாகனத்தை பராமரிப்பு பண்ணுவீங்க. ஃப்ரண்ட்ஸுங்க கூட வீண் வாக்குவாதம் உண்டாகலாம். கூடப்பொறந்தவங்க மூலம் உதவி, ஒத்தாசை கிடைக்கும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல பாதிப்பு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலையில திறமைக்கு தகுந்த மாதிரியான புது வசதி வாய்ப்புகள் கிடைக்கலாம். சுப காரிய முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைச்சுடும். வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு போட்ட ப்ளான் வெற்றிகரமா முடியும். இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்பவே மனமகிழ்ச்சியோட செய்வீங்க. மொத்தத்துல இன்னிக்கு உங்க முயற்சிகள் அனைத்துமே வெற்றிகரமா முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸுக்கு தேவையான உதவிகள் கவர்மெண்ட் மூலமா கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்ல கூடுதல் கவனத்தோட இருக்கணும். இன்னிக்கு ஃபைனான்ஸ பிரச்சனையால திடீர் நெருக்கடி உண்டாகலாம். சொந்தக்காரங்க ஒத்தாசையால பணப்பிரச்சனைங்க ஓரளவுக்கு குறையலாம். குடும்பத்துல பெத்தவங்க கூட சின்னதா மனஸ்தாபம் உண்டாகலாம். இன்னிக்கு யார் கூடவும் பேசும்போது கோவப்படாம தன்மையா பேசி பழகுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு தெய்வீக காரியங்கள்ல கூடுதல் ஈடுபாடு உண்டாகம். வெளிய கொடுத்த கடன்களும் இன்னிக்கு வசூலாகும். ரொம்ப நாள் கழிச்சி வெளியூர் போறதுனால நல்லது நடந்துடும். சொந்தக்காரங்க மூலமா சுபச் செலவுகளும் வந்துடும். உத்தியோகத்துல வேலைச் சுமை குறையலாம். குடும்பத்துலயும் இன்னிக்கு சந்தோஷம் தாண்டவமாடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா இனிப்பான செய்திகள் உங்களை தேடி வரும். பிள்ளைங்க மூலமா நல்லது நடந்துடும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாத்த உதவி, ஒத்தாசையும் எளிதா கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க சப்போர்ட்டால வேலைச் சுமையும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை



Click it and Unblock the Notifications