Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்களுக்கு வேலையில புரமோசனும் சம்பள உயர்வும் வருமாம்...
சார்வரி வருடம் சித்திரை 3ஆம் நாள். இந்த வேலை நீடிக்குமா? சம்பளம் ஒழுங்கா வருமா என்ற கேள்வி வரும். இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு வேலை போய்க்கொண்டிருக்கிறது. நிறைய நபர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய
சார்வரி வருடம் சித்திரை 3ஆம் நாள். இந்த வேலை நீடிக்குமா? சம்பளம் ஒழுங்கா வருமா என்ற கேள்வி வரும். இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு வேலை போய்க்கொண்டிருக்கிறது. நிறைய நபர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்கின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டவசமாய் புரமோசனும் சம்பள உயர்வும் வருகிறது. இன்றைய ராசிபலனை படிங்க யாருக்கு புரமோசன் வரும்னு தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல வர்த்தகம் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். வருமானமும் ரெட்டிப்பாகும். அதனால உங்களோட தேவைகளும் பூர்த்தியாகிடும். ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்றதுனால மனசு இதமாகிடும். பாக்குற உத்தியோகத்தையும் மனதிருப்தியோட செய்வீங்க. கல்யாண பேச்சுவார்த்தை முன்னெடுக்குறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும் சம்பள உயர்வும் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:45 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு வீட்டுல பிள்ளைங்களால பெருமை வந்து சேரும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி ஸ்டாக் வைப்பீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியில அலைய வேணாம். அப்புறம் பிரச்சனையில கொண்டு போய் விட்டுடும். இன்னிக்க எந்த வேலையையும் ரொம்பவே துணிச்சலா செஞ்சி முடிப்பீங்க. உத்தியோகத்துல வேலைக்கு ஏத்த சம்பளமும் வெகுமதியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 7:55 முதல் காலை 10:30 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உத்தியோகத்துல மத்தவங்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேணாம். சிக்கல் உண்டாகிடும். அதனால எந்த வேலையையும் செய்யுறதுக்கு முன்னாடி நல்ல ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சி செய்யுங்க. குடும்பத்துலயும் உங்களால இன்னிக்கு அநாவசிய பிரச்சனைகள் முளைக்கலாம். கவனமா இருக்க பாருங்க. தேவையில்லாத வாக்குவாதத்தை அவாய்ட் பண்ணிடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : மாலை 6:0 முதல் இரவு 8:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களோட ஒத்தாசை கிடைக்கும். அதனால வேலைச் சுமையும் குறைஞ்சிடும். லேவா தேவி மேட்டர் திருப்திகரமா இருக்கும். புதுசா எடுக்குற முயற்சிங்களுக்கு குடும்பத்துல இருக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். குடும்பத்துல சுபகாரிய செலவுங்களும் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 7:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க கூட இருந்துவந்த பிரச்சனைங்க காணாம போகும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்ட விட்டு வெளியில போயிறாதீங்க. அப்புறம் வம்போடதான் வீட்டுக்கு வரவேண்டியது இருக்கும், எச்சரிக்கையா இருக்க பாருங்க. பிசினஸ்ல இன்னிக்கு லாபம் பெருகிடும். கூடப்பொறந்தவங்க கூட இருந்த மனஸ்தாபங்கள் மறைஞ்சிடும். இன்னிக்கு சுப காரிய செலவுங்களும் வந்து கையை கடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை

கன்னி
இன்னிக்கு பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்ணலாம். கவனமா இருக்க பாருங்க. பிசினஸ்ல கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனா பிரச்சனை குறைஞ்சி லாபம் கூட வாய்ப்பிருக்கு. கணவன் மனைவிக்குள்ளாற இருந்து வந்த அந்நியோன்யம் மறைஞ்சி ஊடல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, கவனமா வாயை கொடுத்து வம்புல மாட்டிக்காதீங்க. இன்னிக்கு உங்க நிதி நிலைமை சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதனால செலவை கண்ட்ரோல் பண்ணுங்க. வேலையில இறக்கிறவங்களுக்கு புரமோசன் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : அதிகாலை 4:05 முதல் காலை 10:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு உழைக்குறதுக்கு ஏத்த மாதிரி பலன் கிடைக்குறதுல கொஞ்சம் கால தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கு. பொறுமையா இருக்க பாருங்க. பிள்ளைங்களால இன்னிக்கு மனசு சங்கடப்படுற மாதிரி நிலைமை வந்துடும். அதனால குடும்பத்துலயும் நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும. இன்னிக்கு எந்த வேலையையும் ஒரு தடவைக்கு மூணு தடவை யோசிச்சி செய்ய பாருங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை எடுத்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:45 முதல் நண்பகல் 1:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு குடும்பத்துல ஒற்றுமை கூடிடும். பிள்ளைங்களாலயும் மனசுக்கு சந்தோஷம் கொடுக்கக்கூடிய செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். பெண்களும் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல பார்ட்னர் கூட மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க. குடும்பத்துலயும் அநாவசியமான வார்த்தையை விட்டுட்டு அவஸ்தை படக்கூடும். அதனால கொஞ்சம் விட்டுக்கொடுத்து போக பாருங்க. பூர்வீக சொத்துபத்து சம்பந்தமா இன்னிக்கு உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். பணவரத்தும் நார்மலா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை எடுத்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும். சுபகாரிய பேச்சுவார்த்தையை இன்னிக்கு ஆரம்பிக்கலாம். பிசினஸ்ல இன்னிக்கு லாபம் அமோகமா இருக்கும். இன்னிக்கு நீங்க எந்த வேலையை தொட்டாலும் அது துலங்கிடும். வெற்றியில தான் முடியும். வேலை பார்க்கிறவங்களுக்கு புரமோசனும் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 32
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்களோட பழைய கடன்கள் எல்லாமே வசூலாகிடும். அதனால கையிலயும் பணம் எக்கச்சக்கமா புரளும். இருந்தாலும் எதிர்பாக்காம திடீர் செலவும் வந்துடும். குடும்பத்துல இருக்குறவங்க கூட சின்னச் சின்னதா மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எச்சரிக்கையோட இருங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புதுசா ஃப்ரண்ட் அறிமுகமாகலாம். அவங்க மூலம் வருமானம் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு பிள்ளைங்களால உங்களுக்கு பெருமை வந்து சேரும். குடும்பதுதுலயும் எல்லோருமே ஒத்துமையா இருப்பீங்க. அதனால வீட்டுலயும் சந்தோஷமான தரமான சம்பவங்கள் நடந்துடும். பிசினஸ்லயும் வியாபாரம் கூடி லாபம் பெருகிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. சம்பள உயர்வும் வரும். வீட்டுக்கு புதுசா சாமான்கள் வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை



Click it and Unblock the Notifications