Just In
- 1 hr ago
இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா?
- 15 hrs ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 18 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 18 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
Don't Miss
- News
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. முக்கிய கட்சியை உள்ளே இழுக்க பிளான் .. அமித் ஷா ஆடும் நம்பர் கேம்!
- Technology
13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.!
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Movies
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிக்காரங்களுக்கு நாக்கு நம்பியார் மாதிரி வில்லத்தனம் பண்ணும்.. கவனம் தேவை..
இன்றைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும். வெற்றியா அல்லது தோல்வியா? இன்றைய ராசி பலன்களை படிங்க உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் இன்றைய பலன்களை தீர்மானிக்கிறது.

மேஷம்
இன்னிக்கு உங்களுக்கு பொழுது நல்லாவே விடிஞ்சிருக்கு. காலங்காத்தாலயே ஒரு சந்தோசமான செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களோட உறுதியான மெண்டாலிட்டியோட, தன்னம்பிக்கையும் சேர்ந்ததுனால, இன்னிக்கு எல்லா வேலையையும் பாக்கி வைக்காம முடிச்சிடுவீங்க. வேலை பாக்குற இடத்துலயும் உங்களுக்கு ஃபேவராதான் நடக்கும். உங்களோட டேலன்ட்டை பாத்து உங்க சீனியர் திருப்தி படுறதோட, உங்களையும் பாராட்டி தள்ளுவார். பிசினஸ் பண்றவரா இருந்தால் இன்னிக்கு சரியான நேரத்துல, உங்களோட வியாபரா யுக்திக்கு பலன் கிடைக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப ஸ்ட்ராங்கவே இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப அமோகமா இருக்கும். உங்களோட பாட்டன் காலத்து சொத்து பிரச்சனையில உங்களுக்கு ஃபேவராவே எல்லாம் நடக்கும். அத்தோட ஃபைனான்ஸ் மேட்டர்ல, உங்க பேரன்ட்ஸ்கிட்ட இருந்தும் உங்களுக்கு தேவையான சப்போர்ட் கிடைக்கும். ஏதாவது புதுசா வீடு அல்லது வீட்டு மனை வாங்க ப்ளான் பண்ணி வச்சிருந்தீங்கன்னா, அதுக்கான டாக்குமெண்ட்ஸை இன்னிக்கு நீங்க சரிபாத்துக்கலாம். ஃபேமிலி லைஃப் இன்னிக்கு நல்லா இருக்கும். நேத்துவரைக்கும் உங்களுக்கும் உங்க வீட்டுக்காரம்மாவுக்கும் ஏதாச்சும் மனத்தாங்கல் இருந்ததுன்னா, இன்னிக்கு அதெல்லாம் சரியாகிடும். அதோட அவங்களோட சாஃப்ட் கார்னர் பக்கத்தையும் நீங்க பாக்கலாம். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு சந்தோஷமான செய்தி காத்துக்கிட்டிருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல லவ் ரொம்ப ஸ்ட்ராங்கா வேர் விட்டு வளந்திருக்கும். ஆஃபீஸ்லயும் இன்னிக்கு உங்களுக்கு ஃபேவராவே இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் நல்லாதான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்களோட மேரேஜ் லைஃப்ல எதிர்பாராத விதமா சில வாய்த்தகராறு ஏற்படலாம். அதனால, நம்பியாரா இருக்குற நாக்கை கண்ட்ரோல் பண்ணி வச்சிக்கோங்க. இல்லாட்டி உங்க லைஃப் பார்ட்னர் கூட சண்டை முத்திபோய் பிரச்சனை தான் வரும். அதனால ஜாக்கிரதையா இருங்க. ஆஃபீஸ்லயும் நல்ல மெண்டாலிட்டியோட வேலைய பாருங்க. குடும்ப விஷயத்தை ஆஃபீஸ் விஷயத்தோட போட்டு குழப்பிக்காதீங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் சொல்லிக்கிடறது மாதிரி இல்லை. செலவுகளும் கைக்கு அடங்காம போகும். இன்னிக்கு நீங்க ரொம்பவே மனக்குழப்பத்துல இருக்குறதுனால, ஆஃபீஸ் வேலையையும் அது பாதிக்கும். அந்த சிச்சுவேஷன்ல நீங்க டக்குனு எந்த முடிவும் எடுத்துடாதீங்க. இதனால உங்க முதலாளியும் உங்க மேல கடுப்பாகலாம். அதனால. உங்க முதலாளி கடுப்பாகுறது மாதிரி நடந்துக்காதீங்க பாஸ்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு வேணும்னுட்டே சில பேர் உங்களை கடுப்பேத்தலாம். அவங்க என்னதான் கடுப்பேத்துறது மாதிரி நடந்துகிட்டாலும், நீங்க செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி கண்டுக்காம கம்முன்னு பொறுமையா இருங்க. இந்த நாளை ஜம்முன்னு கடத்திடலாம். உங்களைப் பார்த்து அவங்க தான் கடுப்பாவாங்க. அநாவசியமான மேட்டருக்கெல்லாம் தேவையில்லாம டென்ஷனாகி உங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. ஃபேமிலி லைஃப் ரொம்ப ஹேப்பியா நகரும். அதனால வீட்டுலயும் எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க. நீங்க யாரையாச்சும் லவ் பண்ணுனீங்கன்னா, அந்த லவ்வுக்கு உங்க வீட்டுலயும் சப்போர்ட் பண்றதுக்கு நிறையவே சான்ஸ் இருக்குது. ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு ஏத்த இறக்கமா தான் இருக்கும். பெருசா ஏதாவது பணத்தை செலவு பண்றதுக்கு ப்ளான் பண்ணி இருந்தீங்கன்னா அதைப்பத்தி வெளியில யார் கிட்டேயும் மூச்ச விடாதீங்க. இல்லாட்டி, உங்களுக்கு தான் பெரிய அளவுல இழப்பு உண்டாகும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்
கொஞ்ச நாளாகவே உங்களுக்கு ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தியா இருந்ததுனால, வீட்டு ஆளுங்களோட சரியா பேசக்கூட முடியாம தவிச்சிட்டு இருந்தீங்க. ஆனா, இன்னிக்கு அந்த நிலைமை மாறி, உங்க ஃபேமிலியோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ண வாய்ப்பு இருக்கு. ஒருவேளை நீங்க புதுசா வேலை ஏதாவது தேடிகிட்டு இருந்தீங்கன்னா, இன்னிக்கு நல்ல சேதி வந்து உங்க வீட்டு கதவை தட்ட சான்ஸ் இருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. அதுக்காக கவலைப்படாதீங்க. இதெல்லாம் எல்லாம் நாளைக்கு சரியாகிடும்னு நம்புங்க. மேரேஜ் லைஃப் ரொம்ப ஹேப்பியா நகரும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு சாதாரணமா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு நீங்க முக்கியமான ஒருத்தரை மீட் பண்றதுக்கு சான்ஸ் இருக்கு. அவரோட பேச்சுலயம் வசீகரமான முகத்தையும் பாத்து நீங்க அப்படியே மெர்சலாகிடுவீங்க. இந்த சந்தர்ப்பத்துல முக்கியமான முடிவு ஏதாவது எடுக்குறதா இருந்தா கூட, நிதானமா யோசிச்சி முடிவெடுங்க. இல்லாட்டி தேவையில்லாத பிரச்சனைதான் ஏற்படும்கிறதை மறந்துடாதீங்க. கல்யாணம் ஆனவங்க, இன்னிக்கு லைஃப் பார்ட்னர் கூட சின்னதா வாய் தகராறு பண்றதுக்கு வாய்ப்பு இருக்குது. ஆனாலும், அதனால பெருசா ஒண்ணும் பிரச்சனை ஏற்படாது. அந்த வகையில நீங்க சந்தோஷப்பட்டுக்கலாம். ஃபைனான்ஸ் மேட்டர்ல இன்னிக்கு நல்ல முடிவு காத்துக்கிட்டு இருக்குது. ஏற்கனவே போட்டிருக்குற இண்வெஸ்ட்மென்ட்ல இருந்து இன்னிக்கு உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால உங்களோட பணப் பிரச்சனையும் தீர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆஃபீஸ்லயும் சிச்சுவேஷன் உங்களுக்கு சாதகமாதான் இருக்கு. உங்களோட எல்லா வேலைங்களையும் பெண்டிங்க வைக்காம முழு மூச்சா கஷ்டப்பட்டு முடிச்சிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு உங்க டார்கெட்டை அச்சீவ் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, உங்களோட முயற்சிகளையும், டெடிகேஷனையும் இன்னும் கொஞ்சம் தீவிரப்படுத்துங்க. அதோட, நீங்க வேலை செய்யுற முறையையும் கொஞ்சம் மாத்திக்கிறது நல்லது. ஒரு வேலைய செய்ய ஆரம்பிச்சா, அதை முடிச்சிட்டு மறு வேலைய பாருங்க. இல்லாட்டி அது உங்களோட வேலைய தான் பாதிக்கும். ஃபைனான்ஸ் மேட்டர்ல அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. ஏதாவது வாங்கணும்னு நெனச்சா கூட தயவு செய்து அந்த முடிவை மாத்திக்கோங்க. உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லை. மெண்டல் டிப்ரஷனா இருக்குறதுனால, எதையோ பறிகொடுத்தது மாதிரியே இருப்பீங்க. அதனால கொஞ்சம் பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போய்ட்டு வர்றது நல்லது
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு நீங்க உங்க ஃப்ரண்ட்ஸ்களோட ஜாலியா இருப்பீங்க. கை காசை தாராளமா செலவழிப்பீங்க. இப்பிடியே செலவழிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா, உங்க பாக்கெட் சீக்கிரமே காலியாகிடும். வீட்டு நிலமையும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. ஃபேமிலி மெம்பர்ஸ் கூட இன்னிக்கு அவ்வளாவ ஒட்டுறவு இருக்காது. சின்னதா வாய் தகராறு உண்டாகலாம். நிலமை எப்படி இருந்தாலும் நம்பியாரா இருக்குற நாக்கை அடக்கி வச்சிக்கிறது நல்லது. லைஃப் பார்ட்னர் கூட இன்னிக்க ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. வீட்டு நிலமை மோசமா இருந்தாலும் கூட, உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு ரொம்ப அனுசரனையா இருப்பாங்க. இருந்தாலும், உங்களோட ஆஃபீஸ் பிசியில, ஒஃப் கூட சரியா பேச கூட நேரம் இருக்காது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சாதாரண நாளாதான் இருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க எல்லா வேலைகளையும் பாக்கி வைக்காம முடிச்சி காட்டுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு
இன்னிக்கு உங்களுக்கு நாள் ரொம்ப அமோகமா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் கொட்டும். பழைய ஸ்டாக் எல்லாமே வித்து காலியாகிடும். அதோட, புதுசா பிசினஸை டெவலப் பண்றதுக்கும் நல்ல சான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு, முதலாளிங்க கிட்ட இருந்து பாராட்டு கிடைக்கும். வீட்டு நிலவரமும் ரொம்ப அமைதியாவே இருக்கும். கூடப்பிறந்தவங்க உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா நடந்துக்குவாங்க. உங்களை நேசிக்கிறவங்க உங்க பக்கத்துல இல்லாதது, உங்களுக்கு எவ்வளவு நட்டம்னு இன்னிக்கு நீங்க புரிஞ்சிக்குவீங்க.ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ரொம்ப நல்லாவே இருக்கும்.பெருசா ஏதாவது செலவு பண்றதுக்கு ப்ளான் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷனை பொருத்த வரைக்கும், நாள்பட்ட நோய் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்குது. அதனால ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்கோங்க சார்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு உங்க மேரேஜ் லைஃப்ல பெரிய ப்ராப்ளம் ஒண்ணு முளைக்குறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க. உங்க ஒய்ஃப் பெரிய ருத்ரதாண்டவமே ஆடுறதுக்கு காத்துக்கிட்டு இருக்காங்க. வீட்டுலயும் நிம்மதி இருக்காது. மொத்தத்துல குடும்பமே சோகமயமா தான் இருக்கும். அதனால, இன்னிக்கு நீங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது நல்லது. இந்த நிலைமையில பெத்த அம்மாவ நீங்க மறந்துடாதீங்க. ஃபைனான்ஸ் பொசிஷனை பொருத்த வரைக்கும், ரொம்ப நாளா எதிர்பாத்திருந்த பணம் வராததுனால, நீங்க கொஞ்சம் கடுப்பாகுறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு உங்களுக்கு ஃபேவராதான் எல்லாமே நடக்குங்க. உங்களோட வேலைய பாத்து உங்க சீனியர் கூட ரொம்ப மெர்சலாகிடுவார். அதனால, கூடுதல முக்கியமான பொறுப்பு ஒண்ணை உங்ககிட்ட ஒப்படைக்கலாம். உங்களோட தனிப்பட்ட டேலண்ட்டால அந்த வேலையை முடிச்சீங்கன்னா, உங்களுக்கு ப்ரமோஷன் காத்துக்கிட்டு இருக்குங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்க ஹெல்த்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுங்க. அதுக்கு டெய்லி எக்ஸர்ஸைஸ், யோகா, வாக்கிங் பண்ணுங்க. உங்க ஃப்ரண்ட்ஸ் கூட ஏதாவது விளையாடுங்க. உங்க ஃபேமிலியில ஏதாச்சும பிரச்சனை இருந்திச்சின்னா, இன்னிக்கு அது சால்வ் ஆகிடும். உங்க வேலையில ரொம்ப கவனமா, சின்ஸியரா இருங்க. மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும். புதுசா கல்யாணம் ஆனவங்களா இருந்தீங்கன்னா, இன்னிக்கு நைட் எங்காவது ஹோட்டலுக்கு போய் டின்னர் சாப்பிட்டு, என்ஜாய் பண்ணுவீங்க. இருந்தாலும் நீங்க கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. திடீர்னு ஏதாச்சும் பிரச்சனை வந்து இடைஞ்சல் பண்ணலாம். இதனால குடும்பத்துலயும் பிரச்சனையை கொடுக்கலாம். இருந்தாலும், நீங்க ரொம்ப அமைதியா இருக்குறது ரொம்பவே நல்லது. ஃபேமிலி மெம்பர்ஸுக்கு எதிரா எதுவும் பண்ணாம இருங்க. பிரச்சனை அதுவா சால்வ் ஆகிடும். சரியான சந்தர்ப்பத்துக்காக வெய்ட் பண்ணுங்க. கண்டிப்பா நீங்க ஜெயிச்சி காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்
இன்னிக்கு உங்க ஃபேமிலி லைஃப் ரொம்ப சந்தோஷமா கழியும். அதோட உங்க ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு சப்போர்டிவா பாசமா இருப்பாங்க. ரொம்ப நாளைக்கு அப்புறமா அவங்களோட ரொம்ப அமைதியா டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கு உங்களுக்கு சான்ஸ் கிடைக்கும். இன்னிக்கு உங்க அப்பாவோட ரொம்ப முக்கியமான விஷயத்தை டிஸ்கஷ் பண்ணலாம். உங்க ஒய்ஃப் கூட நீங்க ஜாலியா ஒரு வாக் போவீங்க. பிள்ளைங்க கிட்ட இருந்து ஒரு நல்ல செய்தியை நீங்க எதிர்பார்க்கலாம். ஆஃபீஸ் விஷயமா இன்னிக்கு நீங்க முக்கியமான ஒருத்தரை மீட் பண்றதுக்கு சான்ஸ் இருக்குங்க. அந்த மீட்டிங்கனால உங்களுக்கு நல்ல காலம் பிறக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அம்சமா இருக்குங்க. ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்கு. உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்குது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை