Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
குரு வக்ரமடையும் நாளில் இந்த 5 ராசிக்காரங்களுக்கு 'டாப்' தான்...
வைகாசி மாதத்தின் முதல்நாள் குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமை மகரம் ராசிக்கு அதிசாரமாக சென்ற குருபகவான் இப்போது வக்ரமடைந்து பின்நோக்கி தனுசு ராசிக்கு திரும்புகிறார்.
வைகாசி மாதத்தின் முதல்நாள் குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமை மகரம் ராசிக்கு அதிசாரமாக சென்ற குருபகவான் இப்போது வக்ரமடைந்து பின்நோக்கி தனுசு ராசிக்கு திரும்புகிறார். குருவின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சிலருக்கு சாதகமாக இருந்தால் சிலருக்கு பாதகத்தை தரும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கு வியாபாரத்தில லாபம் அதிகமாக கிடைக்கும். உங்க தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகும். ரொம்ப நாளைக்கு பிறகு பழைய ஃப்ரண்ட்ஸுங்க கூட மனசு விட்டு பேசுவீங்க. பழைய நினைவுகளை அசை போட்டு சந்தோஷப்படுவீங்க. பிசினஸ்ல கூட்டாளியோடு ஒத்துமையா வேலை பாத்தா லாபம் பெருகும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனம் ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல உங்க உழைப்புக்கு ஏத்தமாதிரியான இன்க்ரீமெண்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு. வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்கணும்னு ஆசை உண்டாகும். வீட்டுல பிள்ளைங்களால பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் இன்னிக்கு ரொம்ப துணிச்சலா செஞ்சி முடிப்பீங்க. ரொம்ப உற்சாகமான நாளா இன்னிக்கு விடியும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்கு. வீணா பேசி பிரச்சினையை இழுத்து வைக்காதீங்க முடிஞ்சா மவுன விரதம் இருங்க. குடும்பத்துல தேவையில்லாம பிரச்சனை உண்டாகலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. உத்தியோகத்துல மத்தவங்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீங்க. இன்னிக்கு பணம் கொடுக்கல் வாங்கல்ல எச்சரிக்கையா இருங்க. அப்புறம் கொடுத்த பணம் திரும்ப வரவே வராது.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்களுக்கு சுப காரிய செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவிக்குள்ள சந்தோஷமும் அந்நியோன்யமும் கூடிடும். இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் ரொம்ப திருப்திகரமா இருக்கும். உங்க முயற்சிகளுக்கு வீட்டுல இருக்குறவங்களும் சப்போர்ட் பண்ணுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : லைட் பிங்க்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே உங்களுக்கு இன்னைக்கு பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபமும் கூடும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். வரவே வராதுன்னு நினைச்ச பணம் உங்களுக்கு வரும். கூடப் பொறந்தவங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். குடும்பத்துலயும் சுபச் செலவுகளும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 43
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறதுனால பிரச்சனைகளையும் தவிர்த்து லாபத்தையும் பெருக்கலாம். பூர்வீக சொத்து பத்து மூலமா லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள்ள சின்னதா மனஸ்தாபம் ஏற்படலாம். கவனமா இருக்குறது நல்லது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் சுமார் ரகம் தான். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு கொஞ்சம் மக்கர் பண்ணும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்க எந்த வேலையையும் கொஞ்சம் நிதானமா யோசிச்சி செஞ்சா உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறையோட இருந்து, மருந்து மாத்திரைன்னு வாங்கி கொடுங்க. இன்னிக்கு பிள்ளைங்களால தேவையில்லாத மனக் கஷ்டம் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் நல்லா நடந்து லாபம் பெருகிடும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்துலயும் ஒத்துமை கூடிடும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிக்கு நிச்சயமா வெற்றி கிடைக்கும். பிள்ளைங்க மூலமா மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். பிசினஸ்ல கூட்டாளிங்களோட சின்னதா மனஸ்தாபம் உண்டாகலாம். உங்க வாயை கண்ட்ரோல் பண்றது நல்லது. தேவையில்லாததை பேசினா குடும்பத்துல அநாவசியமா வீண் பிரச்சனை வரும். அதனால எச்சரிக்கையா இருங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:25 மணிவரை

மகரம்
மகர ராசி அன்பர்களே, இது வரைக்கும் பிசினஸ்ல தொல்லை கொடுத்து வந்த எதிரிகள் ஓடிப்போவாங்க. குடும்பத்துலயும் சந்தோஷமும் நிம்மதியும் மன நிறைவும் உண்டாகும். வெளியூர் பிரயாணம் உங்களுக்கு நல்லதொரு பலனை கொடுக்கும். சுப காரிய முயற்சிகளும் கைகூடிவரும். இன்னிக்கு நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுமே வெற்றியை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல புது ஃப்ரண்டு அறிமுகமாவார். ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த பழைய கடன் பாக்கியும் இன்னிக்கு வந்துடும். குடும்பத்துல பெரியவங்களோட சின்னச் சின்னதா மன வருத்தங்கள் ஏற்படலாம். எடுக்குற முயற்சிகளும் சின்ன தடங்களுக்கு பின்னாடி வெற்றிகரமா முடியும். வெளி நாட்டு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு சீக்கிரம் சொந்த நாட்டுக்கு போகணும்னு மனசுல ஏக்கம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சாதகமா நடந்துக்குவாங்க. வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். பிள்ளைங்க மூலமா உங்களுக்கு நல்ல பேர் கிடைக்கும். இன்னிக்கு வீட்டுலயும் மனசுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுக்குற மாதிரியான தரமான சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை



Click it and Unblock the Notifications











