For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (14.04.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 14 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்கள் சகாக்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்கவும். ஒன்றாக வேலை செய்தால் மிகவும் நல்லது. இன்று ஆபத்தான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள், குறிப்பாக நிதி விஷயங்களில், அவசரப்பட வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் எந்தவொரு உறுப்பினருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், அவர்களை கூடுதலாக கவனித்துக்கொள்ள வேண்டும். இன்று பணத்தின் அடிப்படையில் கலவையான முடிவுகளை பெறலாம். வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, பழைய உணவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று, சில முக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம். இத்தகைய சூழ்நிலையில், அதிக தயக்கம் காட்டாவிட்டாமல் வேலையை ஏற்று செய்து முடிப்பது நல்லது. இதனால் விரைவில் முன்னேறலாம். கூட்டு வியாபாரம் செய்வோர் இன்று சிறு இழப்பைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வியாபாரத்தில் இத்தகைய ஏற்ற தாழ்வுகள் காணப்படும். எனவே, உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு இணக்கமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், விரைவில் திருமண திட்டம் கை கூடும். நீங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை கரம் பிடிக்கலாம். உங்கள் வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். மேலும், அன்புக்குரியவர்களுடன் நன்கு நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையும். மேலும், உங்கள் மீதான பணிச்சுமையும் குறையும். அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. இன்று அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் நிதி ரீதியாக பயனடையலாம். இன்று கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளை பெறலாம். அலுவலகத்தில் உங்கள் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். உங்கள் செயல்திறனில் திருப்தி காணலம். வேலை தேடுபவர்களுக்கு, இன்று வேலைவாய்ப்பு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் இன்று எந்தவொரு பெரிய பொருளாதார விஷயத்தில் பேரம் பேச வாய்ப்பைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். விரும்பிற பொருளை வாங்க இன்று சாதகமான நாள். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்ற ஒரு கெட்ட பழக்கம் இருந்தால், விரைவில் அதை விட முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலத்தில் கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று வாழ்க்கைத் துணையுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் எந்த மூன்றாம் நபரும் தலையிட அனுமதிக்காவிட்டால் நல்லது. அலுவலகத்தில் முதலாளிக்கு முன்பு சரியாக நடந்து கொள்வீர்கள். உங்களி பணியில் செய்த சிறு தவறையும் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனிர், நீங்கள் பெரும் சிக்கலில் சிக்கலாம். வர்த்தகர்கள் இன்று தங்கள் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் அலட்சியம் தீங்கு விளைவிக்கும். கூட்டு தொழில் தொடங்க விரும்புவோர், அவசரப்பட வேண்டாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் அடிப்படையில் இன்று கலங்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மாலை 3:30 மணி வரை

கன்னி

கன்னி

உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவதில் இருந்து வந்த பெரிய தடைகள் நீங்கி, அனைத்து பிரச்சனையும் இன்று முடிவுக்கு வரக்கூடும். நேர்மறையுடன் முன்னேறினால், நீங்கள் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் மந்தநிலையைத் தவிர்க்கவும். இன்று, உங்களுக்கு பொறுப்புகள் கணிசமாக அதிகரிக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கக்கூடும். ஒரு பழைய நண்பரை இன்று சந்திக்க முடியும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று மாணவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் எழுதிய தேர்வில் நல்ல வெற்றியைப் பெறலாம். உயர்கல்வியைப் பெறுவதற்கான உங்களது முயற்சியும் இன்று வெற்றி அடையும். பணத்தின் அடிப்படையில் இன்று நன்றாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அதிக வேலை அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதை தவிர்க்கவும். வியாபாரிகளின் வேலையில் சில தடைகள் இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் தாமதமாக செல்லும் உங்கள் பழக்கத்தால் பெரிய சிக்கலில் சிக்கலாம். உங்களுடைய இந்த பழக்கம் முதலாளியின் கோபத்தை அதிகரிக்கும். எனவே, இந்த பழக்கத்தை விரைவில் மாற்றுவது நல்லது. வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். பெரிய லாபம் பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்பத்தின் இளைய உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். அவரிடமிருந்து ஒரு அழகான பரிசையும் பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். வீடு பழுதுபார்ப்பு அல்லது வேறு ஏதேனும் செலவுகள் செய்ய இன்று சரியான நாள் அல்ல. உடல்நிலையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் தலைவலியால் கலங்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலக அரசியலில் சிக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். இல்லையெனில், உங்கள் முன்னேற்றம் வேறு நபரால் தடை படலாம். வணிகர்கள் கடினமாக உழைத்து பெரிய லாபம் சம்பாதிப்பதற்கான நேரமிது. இன்று நீங்கள் பணம் தொடர்பான எந்த பெரிய வேலையும் செய்யாவிட்டால் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தமாக இருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வீட்டு பெரியவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்களது கருத்து வேறுபாடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வது நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் அதிக மன அழுத்தத்தை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:35 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மகரம்

மகரம்

அலுவலகத்தில் ஒரு முக்கியமான திட்டத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், ஆணவ உணர்வைத் தவிர்க்கவும். உங்கள் நடத்தை எல்லோரிடமும் நன்றாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று வணிகர்கள் ஆபத்தான முடிவுகளை கூட துணிச்சலாக எடுக்கலாம். எதிர்வரும் நாட்களில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். இன்று நிறைய செலவுகள் இன்று செய்யக்கூடும். நீங்கள் விரும்பவில்லை என்றாலும், நீங்கள் ஒரு பெரிய தொகையை செலவிட வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று வாழ்க்கைத் துணை பலவீனமாக உணரலாம். நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சிப்பது நல்லது. உங்கள் உடல்நிலை பற்றி பேசினால், இரவில் தாமதமாக தூங்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு மிகவும் பதற்றமான நாளாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். இருப்பினும் உங்கள் உடல்நலத்தையும் வேலையையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வாய்ப்பளிக்காதீர்கள். எப்போதும் சிறந்ததை வழங்க முயற்சி செய்யுங்கள். கடின உழைப்பால் அவர்களின் இதயங்களை வெல்ல முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்களுக்கான முன்னேற்ற பாதையை திறக்கும். சிறிய பணியை கூட நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் முடிப்பது நல்லது. வணிகர்களுக்கு நல்ல இலாபம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக உங்கள் பணி தானியங்களுடன் தொடர்புடையது என்றால், இன்று இரட்டை லாபத்தைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மீனம்

மீனம்

இன்று நாளின் தொடக்கம் சிறப்பானதாக இருக்கும். நம்பிக்கை அதிகரிப்பதோடு, நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் உங்களுக்காக ஒதுக்குங்கள். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் கடினமாக உழைப்பீர்கள். முதலாளியும் உயர் அதிகாரிகளும் உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. கடின உழைப்பு வெற்றியை பெற்று தர போகிறது. வர்த்தகர்கள், இன்று புதிய பங்குகளை வாங்க நல்ல நாள். நிதி நிலையைப் பற்றி பேசினால், இன்று கலவையான முடிவுகளைத் தரும். வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் பழைய கடன்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 14th April 2021 Wednesday In Tamil

Check out the daily horoscope for 14th april 2021 wednesday in tamil. Read on.
Story first published: Wednesday, April 14, 2021, 5:00 [IST]