Latest Updates
-
1 மாதம் வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க மனஅழுத்தத்தால் கஷ்டப்பட போறாங்களாம் -
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா?
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியும்...
இன்றைய தினம் சித்திரை முதல் நாள். சார்வரி புத்தாண்டு பிறந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும் யாருக்கு செலவு அதிகம் வ
இன்றைய தினம் சித்திரை முதல் நாள். சார்வரி புத்தாண்டு பிறந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும் யாருக்கு செலவு அதிகம் வரும் என்ற கேள்விகள் வரலாம். உங்களின் கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும். இன்றைய தினம் சிலருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும். இன்றைய ராசிபலனை படிங்க யாருக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இன்னிக்கு எந்த வேலையிலும் ரொம்ப சுறுசுறுப்பா செய்வீங்க. குடும்பத்துல இருந்துவந்த மனஸ்தாபங்கள் காணாம போயிடும். பிசினஸ்ல நல்ல லாபம் கிடைச்சிடும். புதுசா வேற பிசினஸ் பண்றதுக்கு ஐடியா பண்ணுவீங்க. தண்டச்செலவுங்க இருந்தாலும், சேமிக்கிற அளவுக்கு பணம் புரளும். அதிர்ஷ்ட லட்சுமி உங்க வீடு வரும் நாள்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு நீங்க செய்யுற வேலையில இடைஞ்சல், தடங்கள் வந்துடும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. சுபகாரியம் சம்பந்தமான வேலையை அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலையில ரொம்பவே நிதானம் அவசியம். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்ணலாம். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க கையில பணப்புழக்கம் கூடிடும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. சொந்தக்காரங்களால நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. ஃப்ரண்ட்ஸுங்க மூலமா கடன் பிரச்சனைங்க குறையும். சுபகாரியப் பேச்சுவார்த்தைங்க நல்ல விதமா முடியும். பிசினஸ்லயும் லாபம் பெருகும். கணவன் மனைவிக்குள்ளாற இருந்துவந்த மனஸ்தாபம் மறைஞ்சிடும். பணப்புழக்கமும் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிசினஸ்லயும் உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைச்சிடும். சொந்தக்காரங்க கூட இருந்து வந்த பிரச்சனை காணாம போயி ஒத்துமையா இருப்பாங்க. பிள்ளைங்களால குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் முழு மனத் திருப்தியோட ஈடுபாட்டோட செய்வீங்க. வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்குவீங்க. நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு சொந்தக்காரங்களும் ஒத்தாசை பண்ணுவாங்க. ஃப்ரட்ஸுங்களும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. கூடப்பொறந்தவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறைஞ்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கன்னி
இன்னிக்கு பிள்ளைங்களால வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். செய்யுற வேலையில இடைஞ்சல் உண்டாகலாம். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம். வீட்டுல பொம்பளைங்க ரொம்பவே சிக்கனமா செலவழிப்பாங்க. வெளியில இருந்து எதிர்பாக்கா ஒத்தாசை கிடைச்சிடும். பொறுப்போட இருந்தா பிசினஸ்ல நட்ட வராம பாத்துக்கலாம். ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மக்கர் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு, எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு நீங்க செய்யுற வேலையை ரொம்பவே மனசந்தோஷத்தோட செய்வீங்க. பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு லாபம் வரலாம். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. பிசினஸ்ல லாபம் கொழிக்கும். அதனால வருமானம் கூடி சேமிப்பும் எகிறிடும். அதனால செய்யுற முயற்சிங்கள்ல வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : பிற்பகல் 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு குடும்பத்துல நிம்மதி இல்லாத சூழ்நிலை தான் இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க கூடிவும் மனஸ்தாபமும் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது. பேசுற வார்த்தையை யோசிச்சி பேசுங்க. பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும். சொந்தக்காரங்க கை கொடுத்து தூக்கி விடுவாங்க. மனசு வலியோட உடம்பு வலியும் சேந்து படுத்தி எடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு உத்தியோகத்துல புது வாய்ப்புங்க வந்து கதவை தட்டும். சொந்தக்காரங்க மூலமாவும் நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். பேசுற வார்த்தையில நிதானமா இருக்க வேண்டியது கட்டாயம். வீட்டுக்கு தேவையான லேட்டஸ்ட் சாமான்களை வாங்குவீங்க. குடும்பத்துலயும் நல்ல தரமான மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மகரம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. இல்லேன்னா தேவையில்லாத பிரச்சனைங்க முளைக்கும். கூடப்பொறந்தவங்க கிட்ட ஒத்துமை குறைஞ்சிடும். வீட்டுப்பெண்களுக்கு வேலைச் சுமை கூடிடும். பிசினஸ்லயும் லாபம் சுமாரா தான் இருக்கும். வீட்டுச் செலவும் தேவையில்லாம எகிறிடும். கவனமா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைங்க காணாம போயிடும். அதனால வருமானமும் ரெட்டிப்பாயிடும். புதுசா நட்பு வட்டாரம் உண்டாகும். எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைச்சிடும். பழைய கடனும் இன்னிக்கு வசூலாகும். குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா, அதை கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போடுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

மீனம்
இன்னிக்கு உங்களுக்கு சுபகாரிய செலவுங்க வந்துடும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலாயிடும். பிசினஸ் சம்பந்தமா எடுக்குற புது முயற்சியில லாபம் கிடைச்சிடும். சொந்தக்காரங்க கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறைஞ்சி உறவு பலப்பட்டுடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை



Click it and Unblock the Notifications