Just In
- 5 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 8 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 8 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 12 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்
உங்க நட்சத்திரம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கு நல்லது நடக்குமா, இல்லாட்டி மோசமான சம்பவங்கள் ஏதாவது ஏற்படுமோன்னு பயப்படுறீங்களா? உங்க பொருளாதார நிலைமை, வேலை, குடும்ப வாழ்க்கை, உங்க உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்க இன்றைய ராசி பலன்களை படிங்க.

மேஷம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஸன் ரொம்ப நல்லா இருக்கும். பல வழியிலயும் உங்களுக்கு பணம் வந்து கொட்டும். இதனால உங்களோட ஃபைனான்ஸ் பிரச்சனை எல்லாமே தீந்துடும். அது மட்டுமில்ல, கூடுதலாவும் பணம் கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க. ஆஃபீஸ்ல உங்களுக்கு கூடுதல வேலைய கொடுப்பாங்க. அதனால டிலே பண்ணாம உங்க வேலைய முடிக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு புது தொழில்ல இன்வெஸ்ட் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்கலாம். அதை தயங்காம பண்ணுனீங்கன்னா நிச்சயமா, இப்ப இருக்குற லெவலை விட ஒரு படி மேலயே போய் ஜெயிச்சி காட்டுவீங்க. நீங்க இன்னிக்கு ஆஃபீஸ் வேலையையும், வீட்டு பிரச்சனையையும் அழகா பேலன்ஸ் பண்ணி கொண்டு போவீங்க. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குறதுனால, உங்களுக்கு கொஞ்சம் தெம்பா ஃபீல் ஹேப்பியா பண்ணுவீங்க. அது மட்டுமில்ல, உங்க லைஃப் பார்ட்னரும் இன்னிக்கு உங்க கிட்ட ரொம்ப அஃபெக்ஷனா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் முற்பகல் 10:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் எல்லாமே தீந்துடும். திடீர்னு நல்லதெல்லாமே நடக்கும். அதனால பணமும் வந்து உங்க பாக்கெட்டை நிரப்பும். பணப் பிரச்சனையும் காணாம போயிடும்னு சொல்லலாம். கூடுதலா புதுசா வருமானமும் உங்களுக்க கிடைக்க சான்ஸ் இருக்குது. ஆஃபீஸ்ல வேலையை முடிக்க நினைச்சாலும் கூட, உங்க ஹெல்த் கண்டிஷன் அதுக்கு ஒத்துழைக்காது. இதனால சிக்கல் ஏற்படலாம். உங்க பசங்களோட ஹெல்த் கண்டிஷன கொஞ்சம் கவனிங்க. உங்க ஃபேமிலி சம்பந்தமா இருந்த மென்டல் டிப்ரஷன் இருந்துட்டே இருக்கும். ஃபேமிலி மெம்பர்ஸுங்க கிட்ட சண்டை சச்சரவுங்க காரணமா வீட்டுலயும் ஒரே களேபரமா இருக்கலாம். அதுவும் உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். உங்க லைஃப் பார்ட்னர் கூட ஏதாவது சண்டை சலசலப்பு ஏற்பட்டு அவங்க உங்களை விட்டு பிரிஞ்சி போறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால நாக்கை கொஞ்சம் கட்டி போடுங்க. இன்னிக்கு ட்ராவல் பண்றது அவ்வளவு நல்லதில்லைங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு நடக்குறது எல்லாமே உங்களுக்கு சாதகமாவே இருக்குங்க. திடீர்னு பண வரவு கிடைக்கலாம். ஆபீஸ்லயும் உங்களுக்கு ஃபேவராதான் எல்லாமே நடக்கும். உங்க வேலையை, உங்களோட உயரதிகாரிங்க பாராட்டுவாங்க. உங்க ஃபேமிலியிலயும் அமைதியும் சந்தோஷம் பொங்கும். உங்க பேரண்ட்ஸ், பிரதர்ஸ் எல்லாருமே உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. இருந்தாலும் உங்க வீட்டம்மா உங்ககிட்ட அடாவடியா நடந்துக்குவாங்க. கோர்ட் கேஸ் ஏதாவது இருந்தா, அதுல உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வர்றதுக்கு சான்ஸ் இருக்குது. ஸ்கூல் பசங்களுக்கு இன்னிக்கு எல்லாமே நல்லவிதமா முடியும். இன்னிக்கு நீங்க காரணமே இல்லாம டல்லா ஃபீல் பண்ணுவீங்க. சாயங்காலம் உங்க ஃபிரண்ட்ஸுங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. எல்லாமே நல்ல விதமா முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் அவ்வளவு நல்லா இல்லீங்க. கோயில் திருவிழா அல்லது ஏதாவது ஃபங்க்ஷன்ல கலந்துக்கிறதுக்கு சான்ஸ் இருக்குது. உங்க லைஃப் பார்ட்னரோட டைம் ஸ்பெண்ட் பண்றதுனல, அவங்க மூடு நல்லா இருக்கும். அதை பாத்து நீங்களும் ஹேப்பியா ஃபில் பண்ணுவீங்க. ஃபேமிலியிலயும் எல்லாருமே சந்தோஷமா இருப்பாங்க. திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. அதனால வீடும் கலகலப்பா இருக்குங்க. அது மாதிரியே உங்க லைஃப் பார்ட்னரும் உங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி கொடுக்கலாம். ஆஃபீஸ்லயும் ரொம்ப பிஸியா இருப்பீங்க. கூடுதல கொஞ்சம் வேலையை பாக்க வேண்டியதிருக்கும். சின்ஸியரா வேலை பார்த்து அந்த வேலையையும் முடிக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு பெருசா லாபம் ஒண்ணும் கிடைக்காது. இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன் நல்லா தான் இருக்கும். அதுக்காக அசால்ட்டா இருந்துடாதீங்க பாஸ்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : இரவு 7:30 முதல் இரவு 10:05 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உங்க நாக்கை கொஞ்சம் அடக்கி வச்சிக்கோங்க. இல்லாட்டி வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்குங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப நல்லா தான் இருக்கும். சொத்து பத்து சம்பந்தமா ஏதாச்சம் பிரச்சனைங்க வந்து தொந்தரவு கொடுக்கலாம். இது மாதிரியான பிரச்சனைகளை தீர்க்குறதுக்கு உங்க ஆறாவது அறிவை கொஞ்சம் யூஸ் பண்ணுனீங்கன்னா நல்ல ரிசல்ட் கிடைக்குங்க. ஆனா கூட, உங்களோட மென்டல் டிப்ரஸன் காரணமா, இன்னிக்கு உங்களால எந்த முடிவையும் எடுக்க முடியாது. உங்க ஃபேமிலியிலயும் சின்ன சின்ன வாக்குவாதம் வந்து உங்க மூடை கெடுக்கலாம். உங்க அப்பா அம்மாவோட ஹெல்த் கண்டிஷனையும் அப்பப்ப கொஞ்சம் பாத்துகோங்க சார்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 8:20 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்களுக்கு நல்லபடியாவே விடிஞ்சிருக்குன்னு சொல்லலாம். ரொம்பவும் தன்னம்பிக்கையோட இருப்பீங்க. உங்களோட அநேக பிரச்சனையும் இன்னிக்கு காணாம போயிடும்னு சொல்லலாம். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா தான் இருக்கும். எக்ஸ்ட்ராவா வேலை செஞ்சி பணம் பார்ப்பீங்க. பழைய இன்வெஸ்ட்மெண்ட்ல இருந்து பெருசா லாபம் கிடைக்கலாம். உங்க வேலைக்கு குறுக்க இருந்த எல்லா டிஸ்டர்பன்ஸும் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடி ஒளிஞ்சிக்கும். அதனால மனசு ரொம்ப லேசா இருக்கும். உங்க ஃபேமிலி மெம்பர்ஸுங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. நீங்க யாருன்னு அவங்களுக்கு புரிய வைங்க. அப்பதான் அவங்களும் உங்களை மதிப்பாங்க. உங்க கூடப்பொறந்தவங்க கூட சில மனஸ்தாபம் வர்றதுக்கு சான்ஸ் இருக்குங்க. இருந்தாலும், அதை நீங்க பேசி சரி பண்ணிடுவீங்க. மேரேஜ் லைஃப என்ஜாய் பண்ணுவீங்க. நீங்க ரெண்டு பேருமே இன்னிக்கு ரொம்ப அன்னியோன்யமா இருப்பீங்க. ஜமாய்ங்க சார்.
அதிர்ஷ்ட நிறம் : சஃப்ரூன்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு ஸ்கூல் பசங்களுக்கு நல்லா இருக்குங்க. பெருசா ஏதாவது சாதிச்சி காட்டுவீங்க. அதனால ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுவீங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லைங்க. திடீர்னு ஏதாவது பெருசா செலவு வந்து உங்க பட்ஜெட்டை பதம் பாத்துடும். ஏற்கனவே ப்ளான் பண்ணி வச்சிருந்த வேலைகளை எல்லாம் பக்காவா முடிச்சிடுவீங்க. ஆஃபீஸ்ல ரொம்ப ஆக்ரோஷமா இருக்காதீங்க. இல்லாட்டி உங்க மேலதிகாரிங்க கூட தேவையில்லாம உரசல் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். மேரேஜ் லைஃப் ஹேப்பியா ஸ்மூத்தா போகும். உங்க லைஃப் பார்ட்னர் உங்க கூட அந்நியோன்யமா அனுசரனையா இருப்பாங்க. அது உங்களுக்கு யானை பலம் கொடுக்கும்ங்க. ஹெல்த் கண்டிஷன் ரொம்ப நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
உலகத்துல தீர்க்கவே முடியாத பிரச்சனைன்னு எதுவும் இல்லைன்னு மொதல்ல நீங்க புரிஞ்சிக்கோங்க. சில்லறை விஷயத்தை எல்லாம் விட்டுத் தள்ளுங்க. அப்பதாங்க நீங்க முன்னுக்கு வரமுடியும். அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு, சாவகாசமா வருத்தப்படாதீங்க, சரியா. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு பெரிசா லாபம் வராதுங்க. அதுக்காக ஏமாந்துடாதீங்க. நேர்மையா நடந்துக்கோங்க. பின்னாடி பெருசா லாபம் கிடைக்குறதுக்கு வாய்ப்பு இருக்குதுங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லீங்க. பாக்கி வச்சி வேலையை மொதல்ல முடிக்க பாருங்க. உங்க ஹெல்த் கண்டிஷனை மொதல்ல கவனிங்க பாஸ். மனசளவுல பிரச்சனை ஏதாச்சும் இருந்தா, தயவுசெஞ்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க பாஸ்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுக்கு சின்னதா டென்ஷன் இருக்கும். வேலை டென்ஷன் அல்லது பிசினஸ் டென்ஷனாவும் இருக்கலாம். இருந்தாலும் புதுசா எதையாவது கத்துக்கிறதுக்கும் வாய்ப்பு கிடைக்குங்க. மத்தியானத்துக்கு மேல திடீர்னு ஏதாச்சும் பிரச்சனை முளைக்க சான்ஸ் இருக்குது. இருந்தாலும், உங்களோட பாசிட்டிவ் அப்ரோச்னால, நீங்க அதை ஈசியா ஹேண்டில் பண்ணிடுவீங்க. உங்களுக்கு அந்த டேலண்ட் இருக்கு. ஃபேமிலி லைஃப நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. உங்க லைஃப் பார்ட்னர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. இன்னிக்கு ரொம்ப பொறுமையா நம்பிக்கையோட வேலை பாத்தீங்கன்னா பாக்கி வைக்காம வேலைய முடிச்சி காட்டுவீங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப நல்லா தான் இருக்கும். எக்ஸ்ட்ராவா வேலைய பாத்து வருமானத்தை கூட்டிக்குவீங்க. வீட்டுலயும் நிலவரம் ரொம்ப அமைதியாதான் இருக்கும். ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாருமே ரொம்ப அன்போட, அந்நியோன்யமா இருப்பாங்க. இது போதாதா பாஸ்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு உங்களோட மேரேஜ் லைஃப் ரொம்ப அந்நியோன்யமாவும், அமைதியாவும் இருக்கும். ரெண்டு பேருமே ரொம்ப அஃபெக்ஷனா இருப்பீங்க. நீங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு லவ் பண்றீங்கன்னு இன்னிக்கு தான் உங்க ரெண்டு பேருக்குமே தெரியவரும். இதையே சாக்கா வச்சிக்கிட்டு எங்காயச்சும் ஜாலியா போய்டு வருவீங்க. ரெண்டு பேருமே எவ்வளவு லவ் பண்றீங்கன்னு உங்க லைஃப் பார்ட்னரோட கை அணைப்புலயே தெரிஞ்சிடும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்கும். உங்களோட மூளையை யூஸ் பண்ணி எக்ஸ்ட்ராவா வருமானம் பாப்பீங்க. பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு எடுக்குற முயற்சி சக்ஸஸ்ஃபுல்லா முடியுறதுக்கு சான்ஸ் இருக்குங்க. நீங்க உங்க அப்பாவோட பிசினஸை பாத்துக்கறதா இருந்தா, உங்க அப்பாவோட ஐடியாவை கேட்டு அதையே ஃபாலோ பண்ணுனீங்கன்னா பெரிசா உங்களுக்கு லாபம் கிடைக்குறதுக்கு நிறைய சான்ஸஸ் இருக்குதுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் ஏத்த இறக்கமா தான் இருக்கும். பணம் சம்பாதிக்கிறதுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனாலும், அந்த சந்தர்ப்பத்தை முழுசா பயன்படுத்திக்க முடியாம போயிடும். இருந்தாலும் இன்னிக்கு உங்களுக்கு பெருசா பணத்தட்டுப்பாடு எதுவும் நேராது. அதே மாதிரி வேலை பாக்குற இடத்துலயும் பெருசா தொந்தரவு எதுவும் வராது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லீங்க. உங்களோட லவ்வரை சந்தேகப்பட்டுடீங்கன்னா, அவ்வளவு தான், எல்லாமே முடிஞ்சது மாதிரிதான். அதனால கொஞ்சம் நிதானமா பேசி பழக பாருங்க. மேரேஜ் லைஃப்லயும் இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. உங்க லைஃப் பார்ட்னர் அவங்களோட கடுப்பை கண்ட்ரோல் பண்ணி வச்சிக்கிட்டு இருக்காங்க. ஏதாச்சும் ஏடாகூடமா பேசுனீங்கன்னா, அந்த கடுப்பை எல்லாம் மொத்தமா காட்டிடுவாங்க. அதனால பக்குவமா நடந்துக்கோங்க. உங்க பேரன்ட்ஸோட சப்போர்ட் உங்களுக்கு முழுசா கிடைக்கும். ஆபீஸ்ல ஒழுங்கா வேலை பாக்காம விட்டீங்கன்னா அந்த வேலை அப்படியே நின்னுடும். அதனால ஆபீஸ்ல ஒழுங்கா வேலைய பாருங்க சார்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 11:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு நீங்க எந்த பதட்டமும் இல்லாம, ரொம்ப ஹேப்பியா இருப்பீங்க. ஆபீஸ்லயும் உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு யோகம் கூடியிருக்குது. அது மாதிரியே பிசினஸ் பண்றவங்களுக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்குங்க. நேத்தைக்கு வேலை பாக்கி வச்சிருந்தீங்கன்னா, அதை முடிக்குறதுக்கு முயற்சி பண்ணுவீங்க. மேரேஜ் லைஃப்லயும் சந்தோஷமும், அமைதியும் தாண்டவமாடும். இன்னிக்கு உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஏதாச்சும் வாங்ககி கொடுக்கலாம். அதுனால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற நெருக்கும் கூடும். ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லார் கிட்டயும் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்குதுங்க. சாப்பாடு, தண்ணியடிக்கிறதுன்னு இருந்தா உங்க ஹெல்த் கண்டிஷன் மோசமா போயிடும். அதனால சாப்பாடு விஷயத்துல நாக்கை கண்ட்ரோல் பண்ணுங்க. அதனால வயித்து வலி பிரச்சனை இருந்தாலும் ஓடிப்போயிடும். அதுவே உங்களுக்கு பெருசா நிம்மதியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 39
சாதகமான நேரம் : காலை 9:50 முதல் பிற்பகல் 2:15 மணிவரை