Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
புதன் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரப்போகுது...
சித்திரை மாதத்தின் கடைசி நாள், புதன் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிலருக்கு திடீர் யோகங்கள் தேடி வரப்போகிறது.
சித்திரை மாதத்தின் கடைசி நாள், புதன் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிலருக்கு திடீர் யோகங்கள் தேடி வரப்போகிறது. சிலருக்கு வேலையில் மந்த நிலையும் சிலருக்கு புத்திசாலித்தனமும் ஏற்படும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பலத்த போட்டி இருந்தாலும் நீங்க லாபம் சம்பாதிப்பீங்க. கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடுதலா இருக்கும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்கும். சொந்தக்காரங்க மூலமா எதிர்பார்த்த உதவி தேடி வரும். குடும்பத்துலயும் சந்தோஷம் குடுக்குற மாதிரியான தரமான சம்பவங்கள் இன்னிக்கு நடந்துடும். எந்த வேலையையும் இன்னிக்கு ரொம்பவே உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தத் தொழில் பண்றவங்களுக்கு எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு இன்னிக்கு கவுரவமான பதவிகள் தேடி வரும். இன்னிக்க மத்தவங்க கிட்ட பேசுறப்போ வார்த்தையை விடாதீங்க. பிள்ளைங்க இன்னிக்கு ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாங்க. குடும்பத்துலயும் அமைதி தவழும். கடந்த சில நாளா இருந்த மன உளைச்சல் இன்னிக்கு காணாம போயிடும். இன்னிக்கு பண வரத்து சிறப்பா இருக்கும்கிறதுனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கிட்டயும் மத்தவங்க கிட்டயும் பேசும் போது எச்சரிக்கையோட பேசுங்க. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட கைமாத்து, கடன் வாங்கவோ கொடுக்கவோ வேணாம். இன்னிக்கு மத்தவங்க கிட்ட கோபப்படுற மாதிரியான சூழ்நிலை உண்டாகலாம். கவனமா இருங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால மன உளைச்சல் குழப்பத்தோட இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல எதிர்பாத்த இம்ப்ரூவ்மெண்ட்டும் லாபமும் கிடைக்கும். தனியார் துறை வேலையில இருக்குறவங்களுக்கு புது வேலை வாய்ப்புகள் வெளியூர்ல கிடைக்கலாம். தைரியமா முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. குடும்பத்துலயும் சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதமா முடியும். இன்னிக்கு குடும்பத்துலயும் மகிழ்ச்சி கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
அதிர்ஷ்ட எண் : 47
சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களுக்கு மத்தியில ஒற்றுமை கூடிடும். அரசு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் எல்லாமே இன்னிக்கு வெற்றியை கொடுக்கும். இன்னிக்கு பண வரத்தும் ரொம்ப அற்புதமா இருக்கும். கூடவே லட்சுமி கடாட்சமும் கிடைக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல எதிர்பாக்காம திடீர் செலவுங்க வரலாம். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. வீட்டுல பெரியவங்களோட அறிவுரையை கேட்டு நடந்துக்கோங்க. இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு சின்னச் சின்ன தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்துலயும் வேலைச்சுமை கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியா குறையலாம். முக்கியமான வி.ஐ.பி.க்களோட பேசுறதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்கிறதுனால மனசுக்கு சந்தோஷம் கொடுக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. ரொம்ப நாளைக்கு பின்னாடி வேலைக்கு போறதுனால கருத்து வேறுபாடுகள் வரலாம். கவனமா இருங்க. எதிர்பாராத செலவுகள் இன்னிக்கு வரலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா சுபச் செய்திகள் உங்க காதுக்கு வந்துடும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். பிசினஸ்ல எதிர்பாத்ததை விட கூடுதலா லாபம் கிடைக்கும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி பொங்கும். இன்னிக்கு பண வரத்தும் ரொம்ப அற்புதமா இருக்கும். எடுக்குற முயற்சிகளுக்கும் இன்னிக்கு வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு நீங்க நினைச்ச காரியம் நல்லவிதமா நிறைவேறும். கடன் பிரச்சனையும் காணாம போகும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு எதிர்பாத்த சலுகைகளும் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. பிசினஸும் இன்னிக்கு அமோகமா இருக்கும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமை கூடிடும். திடீர் பண வரத்தும் இன்னிக்கு உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்க எதிர்பாத்த இடத்துல இருந்து உதவி, ஒத்தாசை உங்க இடத்தை தேடி வரும். உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனையும் இன்னிக்கு ஓரளவு குறையலாம். பிசினஸ்ல திடீர் மந்த நிலை வரலாம். குடும்பத்துல சொந்தக்காரங்களோட பேசி சந்தோஷப்படுவீங்க. மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான சம்பவங்கள் நடந்தாலும் கூடவே தண்டச்செலவுகளும் இன்னிக்கு வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க மனசுல குழப்பம், கவலை, பீதி எல்லாம் கலந்திருக்கும். உத்தியோகத்துல, பிசினஸ்ல ஏற்பட்ட முடக்கம், தேக்கம் எப்போதான் தீருமோன்னு எதிர்காலத்தை பத்தின பயமும் இருக்கும். எதுக்கும் கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்னு நினைச்சி சாமிய கும்பிடுங்க. குடும்பத்துல பிள்ளைகளால தேவையில்லாம பிரச்சனை வரலாம். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைகளும் இன்னிக்கு காணாம போகும். எதிர்பாக்காம சுபச் செய்திகள் உங்க காதுக்கு தேடி வரும். குடும்பத்துல உள்ளவங்க கிட்ட இருந்த சண்டையும் பிரச்சினையும் நீங்கி சந்தோஷம் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை



Click it and Unblock the Notifications











