Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
இந்த ராசிக்காரங்க எல்லாம் வீட்ல கவனமாக பேசுங்க...
சனிபகவானின் ஆசிகள் நிறைந்த சனிக்கிழமை நாள். இன்றைய தினம் யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவுகள் அதிகரிக்கும். மனதில் நிம்மதி அதிகரிக்கும் யாருடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?
சனிபகவானின் ஆசிகள் நிறைந்த சனிக்கிழமை நாள். இன்றைய தினம் யாருக்கு பணம் வரும் யாருக்கு செலவுகள் அதிகரிக்கும். மனதில் நிம்மதி அதிகரிக்கும் யாருடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் இன்றைய ராசிபலன்கள் மூலம் விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று ராசிபலன்களை படிங்க.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, வெளியூர் பிரயாணத்துனால உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். கூடவே நீங்க நெனச்சதும் நிறைவேறிடும். சுபகாரிய முயற்சிகள்லயும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிசினஸ்ல கொஞ்சம் கூடுதல் கவனத்தோட வியாபாரம் பண்ணுனா லாபம் அமோகமா வரும். மதியத்துக்கு மேல திடீர் தண்டச்செலவுங்க வந்துடும். வி.ஐ.பி.க்களோட அறிமுகம் மனசுக்கு புது நம்பிக்கைய கொடுக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு தடைபட்டிருந்த சுபகாரிய முயற்சிகள் நல்ல விதமா கைகூடி வரும். பிசினஸ்லயும் லாபம் கிடைக்கும். பிசினஸுக்கு பேங்க் லோன் ரொம்ப சுலபமா கிடைக்கும். வேலை செய்யுற இடத்துலயும் ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. எந்த ஒரு கஷ்டமான வேலையையும் தட்டி தூக்கி செஞ்சி முடிப்பீங்க. குடும்பத்துலயும் மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு நடுவுல திடீர்னு சில பிரச்சனை உருவாகலாம். கவனமா நடந்துக்கோங்க. குடும்பத்துலயும் தேவையில்லாத மன வருத்தம் உண்டாகும். சொந்தக்காரங்களோட ஒத்தாசையால உங்க கடன் சுமை ஓரளவு குறையும். இன்னிக்கு பண வரத்து இருந்தாலும் அதுக்கேத்த மாதிரி செலவும் வந்து நிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, சுபகாரிய முயற்சிகளை தள்ளிப்போடுறது நல்லது. இன்னிக்கு மதியத்துக்கு மேல நீங்க நெனைச்சது நடந்துடும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட பேசும் போது தன்மையா நிதானமா பேசுறது அவசியம். இன்னிக்கு செய்யுற வேலையில இடைஞ்சல் உண்டாகலாம். குடும்பத்துலயும் சலசலப்பு வரலாம். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு மதியத்துக்கு மேல உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் வர்றதுனால, தேவையில்லாத வீண் வாக்குவாதங்களை அவாய்ட் பண்ணிடறது அவசியம். பழைய கடன்கள் வசூலாகிடும். புதுசா நகை நட்டு, துணிமணிகள் வாங்குற யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்க பக்கம் தீர்ப்பு வரலாம். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைக்கும். சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, உத்தியோகத்துல உங்க திறமைக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். கூடவே சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைக்கும். பிசினஸ்ல லாபம் அமோகமா வரும். சொந்தக்காரங்களோட பாசமும் நெருக்கமும் கூடும். பூர்வீக சொத்து பத்துனால நல்லது நடந்தேறும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகளும் இன்னிக்கு மறையும்.
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்குறது அவசியம். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில நிதானமா நடந்துக்கிட்டா நட்டம் வராம பாத்துக்கலாம். குடும்பத்துல பெரியவங்களோட அதிருப்திக்கு ஆளாகக்கூடும். கவனமா நடந்துக்கோங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டலைன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : முற்பகல் 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு கல்யாணம், சுபகாரியம் சம்பந்தமா பேச்சுவார்த்தையை நடத்தலாம். ரொம்ப நாள் கழிச்சி பழைய ஃப்ரண்ட்ஸுங்களை சந்திச்சி மனசு விட்டு பேசுறதுனால மனசு லேசாகிடும். பிசினஸ் சம்பந்தமா லேட்டஸ்ட் டெக்னாலஜியோட இயந்திரங்களை வாங்குவீங்க. கூடப்பொறந்தவங்களும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு கவர்மெண்ட் வழியில எதிர்பாத்த உதவிகள் ரொம்ப ஈசியா கிடைக்கும். ஒரு சில பேத்துக்கு புதுசா வண்டி வாகனம் வாங்குற யோகம் இருக்கும். பிள்ளைங்களும் ரொம்ப பொறுப்போட நடந்துக்குவாங்க. பிசினஸ்லயும் இன்னிக்கு எதிர்பாத்த லாபம் கிடைக்கும். அதனால உங்க மனசும் ஹெல்த் கண்டிஷனும் ரொம்பவே அற்புதமா
இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா தேவையில்லத பிரச்சனைகள் வந்து முளைக்கும். ஃப்ர்ண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். பிசினஸ்ல சின்னச் சின்னதா மாறுதல் செஞ்சா கொழுத்த லாபம் கிடைக்கும். இன்னிக்கு பண வரத்து சுமாரா இருக்கும்கிறதனால, வீட்டு செலவுகளை சமாளிக்க கடன் வாங்குற நிலை ஏற்படலாம். கவனமா இருங்க. ஹெல்த் கண்டிஷன்லயும் அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த மாதிரி லாபம் கொழிக்கும். உங்க பேங்க் பேலன்ஸும் கூடும். பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். கல்யாணம் சுபகாரிய முயற்சிகள்லயும் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். இன்னிக்கு நீங்க நெனச்ச காரியத்தை நெனச்ச மாதிரியே முடிச்சி காட்டுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா சேர்ற கூட்டாளிங்களால வியாபாரம் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். புதுசா பிசினஸ்ல ஆரம்பிக்குற முயற்சியும் வெற்றிகரமா முடியும். திடீர்ன்னு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். குடும்பத்துல பிள்ளைங்களால சின்னச் சின்ன மனஸ்தாபம் வந்து போகும். உத்தியோகத்துலயும் உங்க உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்குறதுல இழுபறி நிலையே நீடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : இரவு 9:15 முதல் இரவு 11:00 மணிவரை



Click it and Unblock the Notifications