Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் - வீட்ல குதூகலம் தான்..
இன்றைய தினம் பங்குனி மாதத்தின் கடைசி நாள் ஏப்ரல் மாதத்தில் 13வது நாள் திங்கட்கிழமை. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும்?
இன்றைய தினம் பங்குனி மாதத்தின் கடைசி நாள் ஏப்ரல் மாதத்தில் 13வது நாள் திங்கட்கிழமை. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும் யாருக்கு செலவு அதிகம் வரும் என்ற கேள்விகள் வரலாம். உங்களின் கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இன்றைய ராசிபலனை படிங்க பலனை தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த சிக்கல்கள், இடைஞ்சல்கள் பறந்து போயிடும். வருமானமும் கூடிடும். பேங்க் பேலன்ஸும் கூடிடும். அதுனாலயே உங்க முகத்துல ஒரு ஒளி வட்டம் தெரிய ஆரம்பிக்கும். செய்யுற வேலையை தெம்பா செய்வீங்க. கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தையில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, வீட்டுலயே இருங்க. வெளியில போயி வண்டி வாகனத்துல சுத்த நினைச்சா பிரச்சனை தான் வரும். மத்தவங்க கிட்ட வெட்டி பேச்சு பேசுறதை அவாய்ட் பண்ணிட்டு, செய்யுற வேலையில கவனம் செலுத்துறது நல்லது. மனசுல தேவையில்லாத கவலை, குழப்பம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனைங்க காணாம போகும். வீட்டுக்கு தேவையான சாமான் செட்டுகளை வாங்குவீங்க. குடும்பத்துலயும் எல்லோருமே சந்தோஷமா இருப்பாங்க. கணவன் மனைவிக்குள்ளாற இருந்த ஊடல் காணாம போயி கூடல் அதிகமாயிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:20 மணிவரை

கடகம்
இன்னிக்கு பிசினஸுக்கு எதிர்பாத்துட்டு இருந்த பேங்க் லோன் கிடைக்குறதுக்கு அதிக வாய்ப்பிருக்கு. பண வரத்தும் ரொம்ப சிறப்பு இருப்பம். அதனால பேங்க் பேலன்ஸும் எகிறிடும். பிள்ளைங்களால உங்களுக்கு சந்தோஷம் கூடிடும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைங்க கொஞ்சம் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் இரவு 7:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்க செய்யுற வேலையை சிறப்பா சந்தோஷமா செய்வீங்க. அதனால மகிழ்ச்சி கூடிடும். பிள்ளைங்களோட இருந்துவந்த மனஸ்தாபம் காணாம போயிடும். சுபகாரிய செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு வீட்டுல இருக்குறவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். பிசினஸும் ரொம்ப சிறப்பா நடந்து லாபம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 1:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்களுக்கு பிள்ளைங்களால அலைச்சல் கூடிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களோட மனஸ்தாபம் வந்துடும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனா வர்ற பிரச்சனையை அவாய்ட் பண்ணலாம். பிசினஸ் பண்றவங்க கொடுக்கல் வாங்கல்ல லாபம் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். சொந்தக்காரங்களும் உங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. புதுசா எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைச்சிடும். உங்களோட தன்னம்பிக்கையும் தைரியமும் கூடிடும். பண வரத்தும் அற்புதமா இருக்கும். புதுசா வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 8:20 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால மனசு சங்கடப்பட நேரும். வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. சமூகத்துல பெரிய மனுஷங்களோட வெறுப்புக்கு ஆளாகலாம். கவனமா இருக்க பாருங்க. வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்களால தண்டச் செலவுங்க வந்து வாய்க்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு உங்க குடும்பத் தேவைங்க நல்ல படியா பூர்த்தியாகிடும். பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைங்க குறையலாம். சுபகாரிய முயற்சிங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். சொந்தக்காரங்களால நல்லது நடந்துடும். மனசு சந்தோஷப்படும்படியான நல்ல விஷயங்கள் நடக்கும். நிறைய பணம் வரும் வீட்ல உங்க சந்தோஷம் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 39
சாதகமான நேரம் : காலை 9:50 முதல் பிற்பகல் 2:15 மணிவரை

மகரம்
இன்னிக்கு கூடப்பொறந்தவங்க கூட சின்ன சின்ன சண்டைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னரோட இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைஞ்சிடும். எதிர்பாக்காத திடீர் செலவுகள் வரும். நீங்க இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுனா மகிழ்ச்சியான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் முற்பகல் 10:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமைங்க குறைஞ்சிடும். புதுசா வண்டி வாகனம் வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு அவங்க திறமைக்கு ஏத்த ஏற்பரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு. மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான நாளா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : இரவு 7:30 முதல் இரவு 10:05 மணிவரை

மீனம்
இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம் அதிகமாகும். உங்க திறமையை சீனியர் அதிகாரிங்க பாராட்டுவாங்க. பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைச்சிடும். அதனால வருமானம் கூடி, பேங்க் பேலன்ஸும் கூடும். எந்த வேலையையும் ரொம்பவே சுறுசுறுப்பா செஞ்சி முடிச்சிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 39
சாதகமான நேரம் : காலை 9:50 முதல் பிற்பகல் 2:15 மணிவரை



Click it and Unblock the Notifications