For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?

|

நம் அனைவருக்குமே நடக்கப் போவதை முன்பே அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இதற்காக பலர் ராசிப் பலன்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பர். நீங்களும் உங்கள் ராசிக்கான பலன்கள் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினால், தமிழ் போல்ட் ஸ்கை இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களின் ராசிப் பலன்களை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில், உங்கள் உயர் அதிகாரிகள் உங்களிடமிருந்து ஒரு சிறந்த செயல்திறனை எதிர்பார்ப்பார்கள். வர்த்தகர்களுக்கு இன்று சாதாரணமான நாள். இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் ஒரு சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். பணத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலி நீங்கள். பல வழிகளில் இருந்து நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.55 மணி முதல் இரவு 8.20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். திருமண வாழ்க்கை பற்றி கூறுவதானால், வித்தியாசமான ஆளுமை கொண்ட வாழ்க்கைத் துணையைப் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் நல்ல முடிவுகளைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் பெறலாம். திடீர் பணத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் உங்களின் கடன் அனைத்தையும் அடைப்பீர்கள். அலட்சியம் நோயை உண்டாக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நடக்கும் போது கவனமாக இல்லாவிட்டால், காயங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 15

அதிர்ஷ்ட நேரம் : இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். ஆனால் விசித்திரமான அமைதியின்மையை உணர்வீர்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளைத் தவிர்க்க, வாழ்க்கைத் துணையிடம் பிரச்சனைக் குறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும். இன்றைய தினத்தின் இரண்டாம் பாதியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழிற்சாலையில் அல்லது கடையில் சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் நண்பர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். இன்று பயணத்திற்கான சிறப்பான நாள் அல்ல.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று சில சந்தர்பங்களில் மிகவும் கடினமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிது மன அழுத்தம் இருக்கும். இன்று பேசும் போது வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணத்தின் அடிப்படையில் நல்ல முடிவு கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படும் வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 38

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.30 மணி முதல் இரவு 6 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று மிகவும் பிஸியாக இருப்பீர்கள். வேலை தொடர்பாக வீட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். திடீரென்று வேலைப்பளு அதிகரிப்பால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால் வலுவான நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றை பெற வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் தேவையில்லாமல் நம்ப வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்கள் இன்று உங்களின் நம்பிக்கையை உடைப்பார். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணை கடினமான காலங்களில் உங்கள் புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பார். பணத்தைப் பொறுத்தவரை மற்றவர்களை ஈர்ப்பதற்காக அதிக செலவு செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் வீட்டிற்கு செல்லும் போது வெறும் கையுடன் தான் போவீர்கள். ஆரோக்கியம் விஷயத்தில் அலட்சியமாக இருக்காமல், மிகவும் கவனமாக உண்ணும் உணவைத் தேர்தெடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 24

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! பொருளாதார முன்னணியில் இன்று நல்ல நாள். வியாபாரம் செய்வோர் இன்று மேற்கொள்ளும் சிறு பயணம் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இன்று நீங்கள் வேலை செய்தால், அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் ஓய்வு பெறுவீர்கள் மற்றும் முக்கியமான வேலைகளையும் முடிப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனையை சந்திப்பவர்கள், இன்று அதற்கு தீர்வு காண்பார்கள். வாழ்க்கைத் துணை, குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : காலை 10.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

துலாம்

துலாம்

பணத்தின் அடிப்படையில் இன்று கலவையான நாளாக இருக்கப் போகிறது. உங்களின் வருமானம் நன்றாக இருந்தாலும், அதிகப்படியான செலவு உங்களை தொந்தரவு செய்யலாம். தனிப்பட்ட உறவில் பதற்றம் இருக்கும். உங்கள் குடும்பம் உங்களை புரிந்து கொள்ளாமல் போகலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவால் உடல்நலம் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தின் மீது இன்று சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று வீட்டின் சூழ்நிலை பதற்றமாகவே இருக்கும். குடும்பத்தினரிடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மோசமடைந்து வருவதால், ஒரு பெரிய சர்ச்சை ஏற்படலாம். இருப்பினும், அமைதியாக இருப்பதன் மூலம் நீங்கள் விஷயத்தை தீர்க்க முடியும். உங்கள் காதல் விவகாரங்களைப் பற்றி கூற வேண்டுமானால், தவறான புரிதல் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையில் வேறுபாடுகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையின் பழைய நினைவுகள் இன்று புதுபிக்கப்படும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 24

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.05 மணி முதல் இரவு 10.45 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் அலட்சியத்தால் பெரிய சிக்கலில் சிக்குவீர்கள். இன்று மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சோம்பேறியாக இருக்காமல், வேலையில் கவனத்தை செலுத்துங்கள். நிதி நிலைமை சற்று கடினமாக இருக்கும். எதிர்பார்த்தப்படி பணம் கிடைக்காது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். பெற்றோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். இன்று அனைத்து பணிகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 30

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் நிபந்தனைகள் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் எவ்வித இடையூறும் இருக்காது. வியாபாரம் செய்பவர்கள், பழைய முதலீட்டின் பலனைப் பெறுவார்கள். தனிப்பட்ட உறவில் சிறிது பதற்றம் இருக்கும். சொத்து தொடர்பான விவகாரம் குறித்து இன்று வீட்டில் விவாதம் நடைபெறலாம். இருந்தாலும் நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். நீங்கள் விரும்பியதை செய்ய அதிக நேரத்தை செலவிடலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, மனம் தொந்தரவு செய்யப்படுவதால், ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரைங

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். நிதி விஷயங்களில் கவனமாக நல்ல முடிவுகளை எடுங்கள். உங்களின் மோசமான நடத்தையால் திருமண வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை சந்திக்க நேரிடும். இன்று நீதிமன்ற வழக்குகளுக்கு நான் நல்லது. உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். ஆரோக்கியம் பற்றி பேசுகையில், மனம் அமைதியற்றதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் :18

அதிர்ஷ்ட நேரம் : காலை 11.45 மணி முதல் இரவு 8.30 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! நிதி விஷயங்களில் முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். நிதி நிலைமை சிறப்பாக இருக்க வேண்டுமானால், உங்களின் நிலையான திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். இன்று முதலீட்டிற்கான நல்ல நாள் அல்ல. எனவே அதைத் தள்ளிப் போடலாம். சொந்த வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உங்கள் மனதுடன் செயல்பட வேண்டும். உங்கள் மனதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். ஆரோக்கிய விஷயங்கள் இன்று நன்றாக இருக்காது. நீங்கள் மிகவும் பலவீனமாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 41

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 10.45 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 12th December 2019 Thursday In Tamil

Check out the daily horoscope for 12th december 2019 thursday. Read on...
Story first published: Thursday, December 12, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more