Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
இன்றைய ராசிப்பலன் (11.02.2021): இன்று இந்த ராசிக்காரங்க கடன் வாங்குறத பத்தி யோசிக்கவும் கூடாதாம்…
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 11 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 11 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
உங்கள் நிதி நிலையை வலுவாக வைத்திருக்க, முதலில் பொருளாதார திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் பாசமும் இருக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகிப்பதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி நடக்கவும். இது தவிர, இன்று நேரத்தை கவனித்தில் கொண்டு செயல்படவும். வணிக விஷயங்களில் எந்த அலட்சியமும் வேண்டாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்
இன்று நாளின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். காலையிலே ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். வீட்டின் சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் மகிழ்ச்சியை அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்துகொண்டு ஒன்றாக கொண்டாடுவீர்கள். குடும்ப உறுப்பினருடனான மன கசப்பை நீக்க முயற்சிக்க உகந்த நாள். பணம் நல்ல நிலையில் இருக்கும். பெரிய செலவுகள் இன்று செய்தால் பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அலுவலக சூழல் நன்றாக இருக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சாதகமானது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் 10 மணி வரை

மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். வியாபாரிகளுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். பணம் தொடர்பான பெரிய பிரச்சனையில் நிவாரணம் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்க சரியான நேரமிது. உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வர்த்தகர்கள் இன்று பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று குடும்பத்தாருடனும், நண்பர்களுடன் நேரம் செலவிட முடியும். வாழ்க்கைத் துணையுடன் சிறு விஷயத்திற்காக சண்டை போடுவதைத் தவிர்க்கவும். காதல் வாழ்க்கையில் இன்று சில திடீர் மாறுதல்களை சந்திக்கலாம். உடல்நலம் பற்றி பேசினால், இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்
இன்று அலுவலகத்தில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். புத்திசாலித்தனமாக பிரச்சனைகளை கையாள முயற்சி செய்யவும். வணிகர்களுக்கு நல்ல பொருளாதார நன்மை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். சிறிய விஷயங்களை புறக்கணிப்பதன் மூலம் வீட்டின் அமைதியை பராமரிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் நடத்தையை சரியாக வைத்திருங்கள். வீண் கோபம் உங்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். ஒருவருக்கொருவர் நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலம் என்று வரும்போது, அதிக மன அழுத்தத்தை எடுப்பதை அல்லது கோபப்படுவதைத் தவிர்த்திடவும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை

சிம்மம்
வேலை முன்னணியில், இன்று உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். திட்டமிட்ட படி உங்கள் பணிகள் அனைத்தும் நிறைவடையும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நீங்கள் நிச்சயமாக இன்று வெற்றியைப் பெறுவீர்கள். அரசு வேலைக்கு முயற்சிப்போர் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். நிதி பற்றாக்குறையால் முடங்கி வேலை இன்று முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் திடீர் பிரச்சனைகள் உருவாகலாம். வீட்டு உறுப்பினரின் உடல்நிலை குறைய வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு கை அல்லது கால்களில் பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கன்னி
வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். முன்னேற்றத்தை விரும்புவோர், கூடுதல் பொறுப்புகளை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும். வணிகத்தின் இன்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணம் இயல்பை விட சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம்
பணத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பெரும் இலாபங்களை எதிர்நோக்கி அவசர நிதி முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இழப்பை சந்திக்கக்கூடும். இன்று வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறலாம். இலக்கு அடிப்படையிலான வேலை செய்வோர், இன்று எளிதாக பணி முடிக்கப்படும். சிறு வணிகர்கள் இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று சில மன அழுத்தத்திற்கு சாத்தியமாகும். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் நாட்கள் கலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்
வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறன் குறித்து அதிருப்தி அடைவார்கள். வணிகர்கள் விவாதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும், குறிப்பாக பண விஷயங்களில் அதிக விழிப்புடன் இருக்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு இளைய உறுப்பினர்களுடன் மென்மையாக பழக வேண்டும். வாழ்க்கைத் துணையின் மனநிலை சரியாக இருக்காது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் எண்ணெயில் வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை

தனுசு
உங்கள் கடுமையான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்கும். வீட்டிலோ அல்லது வெளியிலோ, எங்கிருந்தாலும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகஸ்ர்கள், உயர் அதிகாரிகளைத் தவிர சக ஊழியர்களுடன் நல்லுறவை வைத்திருக்க வேண்டும். இன்று, சிறிய பணிகளை கூட மிகுந்த கவனத்துடன் செய்யுங்கள். இன்று வர்த்தகர்களுக்கு நல்ல நாள் அல்ல. பொருளாதார இழப்புகள் ஏற்படக்கூடும். காதலைப் பற்றி பேசினால், உங்கள் ஒரு காதலை வெளிப்படுத்த நினைத்தால், அவசரப்படுவதைத் தவிர்க்கவும். உடல்நலம் இன்று சரியில்லாமல் போகலாம். நீங்கள் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை

மகரம்
இன்று நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். அன்புக்குரியவர்களுடனான உறவில் உள்ள கசப்பை நீக்க முடிந்தவரை முயற்சி செய்யலாம். இந்த முயற்சியில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். பண விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். அதிகமாக செலவு செய்தால், நீங்கள் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியும். மேலும் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்வதிலும் வெற்றி பெறுவீர்கள். வணிகர்களின் எந்தவொரு முக்கியமான வேலைக்கும் இடையூறு ஏற்படலாம். எந்த வேலையைச் செய்தாலும், அதை விதிகள் மற்றும் சட்டத்திற்குட்பட்டு செய்தால் நல்லது. உடல்நலம் பற்றி பேசினால், இரவில் தாமதமாக உறங்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உடல்நிலை மோசமடையக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வானம்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்
இன்று உங்கள் இயல்பில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சிறு விஷயங்களுக்காக கோபப்படுவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை இன்று சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் பணி போக்குவரத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இன்று பெரிய பிரச்சனைகள் ஏதேனும் முடிவுக்கு வரக்கூடும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். பணத்தைப் பற்றி பேசினால், இன்றைய நாள் அதிக விலை உயர்ந்ததாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

மீனம்
வியாபாரிகள், வணிகத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டிட முடியும். வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள், முக்கிய பணிகளை செய்யும் போது அவசரப்படுவதைத் தவிர்க்கவும். ஒரு சிறு தவறு கூட வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். பணத்தைப் பொறுத்தவரை இன்று கலவையான முடிவுகளைத் தரும். செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். குறிப்பாக இன்று கடன் வாங்குவதைத் தவிர்த்திடவும். வாழ்க்கைத் துணையுடன் உணர்ச்சி ரீதியான தொடர்பு அதிகரிக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று அதிகரித்துவரும் மன கவலை காரணமாக உடல் ஆரோக்கியமும் பலவீனமாகிவிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை



Click it and Unblock the Notifications











