இன்றைய தினம் இந்த ராசிக்காரர்கள் வாயை அடக்கலைன்னா பிரச்சனையை சந்திப்பீங்க....

இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.

தினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம் என டிசம்பர் 11ம் தேதியான இன்றைய தினம் உங்கள் ராசிக்கான பலன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Daily Horoscope For 11th December 2020 Friday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய தினம் பழைய நினைவுகளால், மனரீதியாக சிறிது கலக்கம் உண்டாகக்கூடும். எனவே, எதிர்மறையான எண்ணங்களில் இருந்து சற்று விலகி இருக்க வேண்டிய நாள். மேலும், உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது பணியால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். உங்களது பணியில் நிறைய பிழைகளை கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற தருணங்களில் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. வணிகர்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருந்தாலும், உழைப்பிற்கேற்ற பலனை பெறுவீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையின் செயல்களில் சிறிது வித்தியாசம் தென்படலாம். உடல்நிலையை பொறுத்தவரை, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வியாபாரிகள் தங்களது வியாபாரத்தில் சிறிது மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் பெரும் லாபத்தை பெற்றிட முடியும். புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவர். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வீட்டில் அமைதி நிலவும். வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். குறிப்பாக பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்று நேர்மறையான ஆற்றலுடன் உணர்வீர்கள். பண வரவு திருப்தி அளிக்கும். யோசித்து செலவு செய்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடற்சோர்வு காரணமாக மனதளவில் பாதிக்கப்படக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 04:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வாழ்க்கை முன்னேறுவதற்கான சாதனமாக மாற்றம் ஒன்று ஏற்பட வாய்ப்புள்ளது. பணி மாற்றம் பற்றி எண்ணமிருந்தால், இந்த நேரம் மிகவும் சாதகமானது. வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். துணி வர்த்தகம் செய்பவர்கள் பெரிய ஆர்டர் ஒன்றை பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்து காணப்படும். குடும்பத்தாரிடையே அன்பும், ஒற்றுமையும் மேலோங்கும். உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து ஆச்சரியம் ஒன்றை பெறலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 08

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 முதல் 9:00 வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நாள் நன்றாக இருக்கும். நீங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்திட முடியும். தந்தை மூலமாக நிதி உதவி கிடைக்கப்பெறலாம். அலுவலகத்தில் இருக்கக் கூடிய முக்கிய பணிகளை மிகவும் கவனத்தோடு செய்து முடிக்கவும். உயர் அதிகாரிகளின் பார்வை உங்கள் மீது இருக்கும். மருந்து வர்த்தகம் செய்பவர்கள் நல்ல லாபம் காண முடியும். பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 05

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் 10:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்று எதை செய்தாலும் மிகவும் கவனத்தோடு செய்யுங்கள். அதிகப்படியாக உற்சாகம் அடைய வேண்டாம். பின்னர், எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டிய எந்தவொரு வேலையையும் இன்று செய்ய வேண்டாம். குறிப்பாக நிதி சார்ந்த முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம். நிதி சார்ந்த திட்டங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும். வீட்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் பற்றி புறம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செயல்களை செய்து உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். வணிகர்ளுக்கு இன்று நல்ல நாள். ஆரோக்கியம் பற்றி பேசினால், தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது..

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 முதல் மதியம் 2:00 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி காண முடியும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கை என அனைத்திலுமே சிறந்ததை வழங்கு முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் இன்றைய சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உங்களது வேலைகளை முடிக்க கடினமாக முயற்சிப்பீர்கள். அதனால், உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரிகள், வியாபாரம் தொடர்பாக எடுக்கும் புது முடிவுளால், சரியான பலனை பெற வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். இத்தனை நாளாக கோபமாக இருந்துவந்த உங்கள வாழ்க்கை துணையின் நடத்தையில் சிறிது மாற்றம் காணப்படும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

துலாம்

துலாம்

உத்தியோகம், வணிகம் பற்றி பேசும்போது, இன்றைய தினம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் பணி சுமை அதிகரிக்கக்கூடும். அதனால், மனஅழுத்தமும் அதிகமாகும். எனவே, அமைதியான மனதுடன் வேலைகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள் தங்களது வணிக முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டிய நாள். பெரிய விஷயங்களை மேற்கொள்ள இன்று சரியான நாள் கிடையாது. உங்கள் குடும்பத்தாரின் அணுகுமுறையால் வருத்தம் உண்டாகக்கூடும். மறுபுறம், வாழ்க்கை துணையுடன் சிறப்பாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. அன்புக்குரியவருடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. பண வரவு திருப்தி அளிக்கும். ஆரோக்கியத்தை பற்றி பேசும்போது, வயிறு தொடர்பான சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாமியாருடனான உறவு மோசமடையக்கூடும். இதனால், மனதில் அமைதி குலையக்கூடும். எனவே, இதுபோன்ற விஷயங்களை புத்திசாலித்தனமாக கையாள முயற்சியுங்கள். தாயின் உடல்நிலையில் ஓரளவு பலவீனமடையக்கூடும். பண வரவு மகிழ்ச்சியளிக்கும். நீங்கள் கடன் வாங்கியிருந்தால், அதனை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும். அலுவலகத்தில் நிறைய பணிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற சமயங்களில், அவசரத்தையும், பயத்தையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, அவ்வளவு நன்றாக இருக்காது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக உணர மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை

தனுசு

தனுசு

நீங்கள் செய்யும் வேலையில் ஏதேனும தவறு செய்துவிட்டால், அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடும். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கப்போகிறது. குடும்ப பிரச்சனை தொடர்பாக தந்தையுடன் விவாதிக்க நேரிடலாம். அன்புக்குரியவரிடம் இருந்து விலையுயர்ந்த பரிசுகள் பெறலாம். பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு வலுவான வாய்ப்புள்ளது. பழைய சொத்துக்களை விற்க நேரிடலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:10 முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்

மகரம்

இன்று தந்தையின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். எனவே, மன்னிப்பு கேட்டு பிரச்சனையை இன்றே முடிவிற்கு கொண்டு வர முயற்சிக்கவும். பெரியவர்களின் அறிவுரையை புறக்கணிக்காதீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடமிருந்து நல்ல செய்தி ஒன்றை பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு, நல்ல வரன் கை கூடி வரும். மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாளாகும். சமீபத்தில் எழுதிய தேர்வு முடிவுகள் சிறப்பானதாக இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனக்குறைவோடு இருப்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகள் வந்து மகிழ்ச்சியடையச் செய்யும். அலுவலகத்தில், உயர் அதிகாரிகளால் அதிக பணி சுமை வழங்கப்படலாம். வணிகர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வேலை எதாவது தொடங்க போகிறீர்கள் என்றால், எடுக்கும் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவை அதிகரிப்பதால் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை துணையிடனான பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்கவும். இல்லையெனில், அமைதி பாதிக்கப்படலாம். ஆரோக்கியத்தை பாதுகாக்க, தினந்தோறும் சிறிது உடற்பயிற்சி செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 02

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உங்களது பேச்சில் நிறைய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும். உங்களது வார்த்தைகளால் சில சிக்கல்கள் உண்டாகக்கூடும். குறிப்பாக, சக ஊழியர்களுடன் விவாதங்களை தவிர்த்திடவும். வியாபாரிகள் இன்று ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். மனதளவில் மிகவும் மனஅழுத்தமாக உணருவீர்கள். உங்களது தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. எனவே, எந்தவொரு முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நிதி நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும், செலவுகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். இன்று வயிறு சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம். உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 11, 2020, 5:00 [IST]
Desktop Bottom Promotion