For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா?

உங்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளதா? உங்களது இன்றைய தினம் எப்படி இருக்கும் என்பதை முன்பே தெரிந்து கொள்ள விரும்புபவரா?

|

உங்களுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளதா? உங்களது இன்றைய தினம் எப்படி இருக்கும் என்பதை முன்பே தெரிந்து கொள்ள விரும்புபவரா? அப்படியானால் இன்றைய கிரக நிலைகளைக் கொண்டு எந்த ராசிக்காரர்கள் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும், யாருடைய காதல் வாழ்க்கை ரொமான்டிக்காக இருக்கும், யாருக்கு செலவு அதிகம் வரும், அலுவலகத்தில் யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போன்ற பல கேள்விகளுக்கான விடையை, இன்றைய ராசிப்பலனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று பேசும் போது சற்று கட்டுப்பாட்டுடன் இருங்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகமாக இருக்கும். இதனால் குடும்ப சூழ்நிலை சற்று உங்களின் மனநிலையை பாதிக்கலாம். குடும்ப பிரச்சனையால் இன்று முழுவதும் சற்று வருத்தத்துடன் இருப்பீர்கள். இதனால் உங்களின் வேலையும் பாதிக்கப்படும். இம்மாதிரியான சூழ்நிலையில் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டவர்கள் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராயின் இன்று போட்டிகளை எதிர்கொள்வீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 26

அதிர்ஷ்ட நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிதி நிலைமையை நினைத்து வருத்தப்படுவீர்கள். வருமானத்தை விட அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, இன்று நிதி மாற்றங்களை செய்ய நினைத்தால், பணத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நலம் ஏற்கனவே மோசமாக இருந்தால், இன்று ஆரோக்கிய பிரச்சனை இன்னும் அதிகரிக்கும். எனவே உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இன்று காதல் வாழ்க்கையில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எதையேனும் எடுப்பதாக இருந்தால், இன்று அதற்கான சிறப்பான நாள் அல்ல.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 41

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உணர்ச்சி ரீதியாக வலுவாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் மனநிலை நாள் முழுவதும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் வேலையை எளிதில் முடிப்பீர்கள் மற்றும் உங்களின் உயர் அதிகாரிகள் உங்களுக்கு சந்தோஷமாக இருப்பார்க்ள. இன்று கிட்டத்தட்ட அனைத்திலுமே வெற்றி காண்பீர்கள். தனிப்பட்ட உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உங்களின் பெற்றோருடனான பிணைப்பு நன்றாக இருக்கும். இன்று அவர்களிடம் இருந்து சிறப்பு பரிசைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.45 மணி முதல் மாலை 4.05 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் காதல் வாழ்க்கை திருப்திகரமான முடிவைக் கொடுக்கும். திருமணமாகாதவர்களுக்கு காதல் மலர வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு, இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். பண விஷயத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இன்று சவாலான வேலைகளைப் பெறக்கூடும். மேலதிகாரிகளின் நடத்தை உங்களை நோக்கி வர வாய்ப்புள்ளதால், புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 45

அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 2.15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று நீண்ட காலமாக விரும்பிய ஆசை நிறைவேறும். இதனால் சந்தோஷமாக இருப்பீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி சரியாக செலவழிப்பது என்று தெரியும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மீண்டும் மெதுவாக உங்கள் பாதைக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள். இன்று அலுவலகத்தில் வேலையை வேகமாக முடித்துவிடுவீர்கள். இன்று அலுவலகத்தில் சிறியப் பிரச்சனையால் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் அனைத்து வேலைகளையும் தைரியமாக முடித்துவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் இன்று நன்றாக இருக்காது. இன்று நீங்கள் சளி அல்லது காய்ச்சலால் அவஸ்தைப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் க்ரீம்

அதிர்ஷட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று பணத்தின் அடிப்படையில் சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த சரியான பலனால் சந்தோமடைவீர்கள். இன்று உங்களுக்கான சில முக்கிய பொருளை வாங்குவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையால் உங்களின் நற்பெயரைக் கெடுக்க முயற்சிக்கலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்திற்காக பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் காதல் வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நிகழலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உங்கள் துணையுடனான பிணைப்பு வலுவாகும் மற்றும் அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்று உங்களின் ஆற்றல் அளவு மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 7.45 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களின் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை ஆச்சரியம் அளிக்கும் வகையிலான விஷயத்தைக் கூறுவர். இன்று நீங்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதற்கான நிறைய வாய்ப்புள்ளது. எனவே உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அலுவலத்தில் உயர் அதிகாரியால் உங்களின் செயல்திறன் பாதிக்கப்படும். இன்று வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீங்கள் பெரிய நிதி லாபங்களைப் பெற வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை நினைத்து மிகவும் வருத்தம் கொள்வீர்கள். இன்று பலமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் மிகவும் களைப்புடனும், மன அழுத்தத்துடனும் இருப்பீர்கள். முக்கியமான பணியை முடிக்காமல் இருப்பதால், அதிக உணர்ச்சிவசப்படுவீர்கள். அலுவலகத்தில் பணியை சரியான நேரத்தில் முடிக்காமல் இருந்தால், உயர் அதிகாரிகள் உங்களிடம் கண்டிப்பாக இருக்கக்கூடும். பொருளாதார நிலைமை குறையக்கூடும். இன்று பெரிய செலவுகள் இருக்கலாம். கடினமான சூழ்நிலைகளில், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இதனால் பெருமளவில் நிம்மதியடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3.45 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று நீங்கள் உங்களின் அனைத்து வேலைகளையும் முழு ஆர்வத்துடன் முடிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள். நீங்கள் திட்டமிட்ட முறையில் உங்களின் வேலைகளை செய்வீர்கள். இதனால் நல்ல பலனையும் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்று குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் துணைக்கு உங்களுடன் பிரச்சனை இருக்கலாம் மற்றும் உங்களை அவர்களுடன் அதிக நேரம் செலவிடும் படி கேட்கலாம். ஆகவே அவர்களை ஏமாற்றாதீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்பிள்

அதிர்ஷ்ட எண் : 26

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று காதல் அல்லது திருமண வாழ்க்கையை நேசித்து அனுபவிப்பீர்கள். இன்று உங்களின் வாழ்க்கைத் துணை அவர்களது மனம் திறந்து பேசுவார்கள். இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். காதல் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. உங்கள் காதல் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான திட்டத்தை தீட்டுவீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியம் இன்று மேம்படும். பொருளாதார முன்னணியில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இன்று பணத்தை சிந்திக்காமல் செலவழிக்காதீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திடீரென்று நாள்பட்ட வயிற்று நோயால் அவஸ்தைப்படுவீர்கள். பயணம் மேற்கொள்வதாக இருந்தால், அதை தள்ளிப் போடுவது நல்லது. வேலையைப் பொறுத்தவரை, நாளின் ஆரம்பத்தில் சற்று மெதுவாக சென்றாலும், போக போக வேகமாக வேலையை முடிப்பீர்கள். அலுவலக சூழ்நிலை நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகள் மட்டுமின்றி, உடன் பணிபுரிபவர்களிடம் இருந்தும் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். பண விஷயத்தில் சாதாரணமாக இருக்கும். இன்று அதிகமாக செலவழிக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எம்மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இன்று பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கு அதிகமான பணத்தை ஈட்டுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் வீட்டை விட்டு எங்கு சென்றாலும், உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் காலை 11.20 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 11th December 2019 Wednesday In Tamil

Check out the daily horoscope for 11th december 2019 wednesday in tamil. Read on...
Story first published: Tuesday, December 10, 2019, 22:59 [IST]
Desktop Bottom Promotion