Latest Updates
-
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா?
இந்த 2 ராசிக்காரங்களும் எதுக்காகவும் வீட்டை விட்டு வெளியே போயிராதீங்க...
இன்றைய தினம் உங்களுக்கு பணம் வருமா? அதிர்ஷ்டம் வருமா என்ற கேள்வி எத்தனை பேருக்கு இருக்கும். இன்றைய தினம் வேடிக்கையும் விளையாட்டுமாய் எத்தனை பேருக்கு நகரும் பயமும் பதற்றமுமாய் எத்தனை பேர் நேரத்தை கழிப்
இன்றைய தினம் உங்களுக்கு பணம் வருமா? அதிர்ஷ்டம் வருமா என்ற கேள்வி எத்தனை பேருக்கு இருக்கும். இன்றைய தினம் வேடிக்கையும் விளையாட்டுமாய் எத்தனை பேருக்கு நகரும் பயமும் பதற்றமுமாய் எத்தனை பேர் நேரத்தை கழிப்பார்கள். இப்படி பல கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் பதில் தரப்போகிறது படிங்க.

மேஷம்
இன்னிக்கு சந்திரன் உங்க ராசிக்கு எட்டாவது இடத்துல இருக்குறதுனால, மனசுல குழப்பம், சஞ்சலம், பயம் ஏற்படலாம். அமைதியா இருக்க பாருங்க. அதனால யார்கிட்டயும் வம்பு பேசு பேசாதீங்க. பேசும் போது நிதானத்தோட பேசுறது அவசியம். அவசரப்பட்டு வாய் வார்த்தையை விட்டுடாதீங்க. யாரு கிட்டயும் கடன் வாங்குறதோ அல்லது கடன் கொடுக்குறதோ வேணாம். அப்புறம் சிக்கலாயிரும் கவனம். எந்த காரணத்திற்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

ரிஷபம்
இன்னிக்கு உங்களுக்கு எதிர்பாக்காம நல்ல செய்தி தேடிவரும். சுபகாரிய முயற்சிகள்ள நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். சமூகத்துல பெரிய மனுஷங்களை பாத்து பேசுறதுனால மனசுக்கு நிம்மதியா இருக்கும். அதோட வருமானமும் பெருகிடும். பிசினஸ் சம்பந்தமா அறிமுகமாகுற ஆட்கள்னால உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். வீட்டுலயும் மனைவி கூட அந்நியோன்யம் கூடிடும். குடும்பத்துல இருக்குறவங்க நிம்மதியா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

மிதுனம்
இன்னிக்கு உங்க குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருப்பாங்க. பிள்ளைங்க ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். கவர்மெண்ட் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூடுதலா கவுரவப் பொறுப்புங்க தேடி வரும். லேட்டஸ்ட் டெக்னாலஜி பொருட்கள் வாங்குற முயற்சி கைகூடி வெற்றி கிடைச்சிடும். கடன் பிரச்சனை காணாம போயி வீட்டோட பொருளாதார நிலைமை கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கடகம்
இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா எதிர்பாக்காத பணப் பிரச்சனைங்க வந்து முளைச்சிடும். சொந்தக்காரங்க ஒத்தாசையால உங்க பணப்பற்றாக்குறை ஓரளவுக்கு சரியாகிடும். இருந்தாலும் உங்க செலவுங்களை குறைச்சிக்குறது நல்லது. உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி, பொறாமையும் குறைஞ்சிடும். ஆடம்பரமா செலவழிக்குறதை அவாய்ட் பண்றது நல்லது. இல்லேன்னா செலவை சமாளிக்க வெளியில கடன் வாங்குற நிலை வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் இரவு 9:20 மணி வரை

சிம்மம்
இன்னிக்கு நீங்க எந்த வேலையை செஞ்சாலும் உற்சாகமாவும், மனத் திருப்தியோடவும் செய்வீங்க. புதுசா வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குவீங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாக்காம வெளியூர் ட்ராவல் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சாலும், கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல ட்ராவல் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. வீட்டுல சுபகாரியம் சம்பந்தமா பேச்சுவார்த்தை ஆரம்பிக்கலாம். மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப இனிமையான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 5:55 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கன்னி
இன்னிக்கு உங்களுக்கு சொந்தக்காரங்க வழியில நல்ல செய்திங்க வீடு தேடி வரும். எதிர்பாக்காம திடீர்னு பணவரத்து வந்து உங்களை திக்குமுக்காட வச்சிடும். பிசினஸ் சம்பந்தமா எடுக்குற புது முயற்சிங்கள்ல உங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைப் பளு கூடினாலும், வீட்டுல இருக்குறவங்களோட ஒத்துழைப்புனால அந்த வேலையை ரொம்ப சுலபமா முடிச்சிடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம்
இன்னிக்கு உங்களுக்கு பணப் பிரச்சனையினால குடும்பத்துல நெருக்கடி கூடி, நிம்மதி இல்லாம போயிடும். பிசினஸ்லயும் வியாபாரம் களையிழந்து டல்லடிக்கும். பூர்விக சொத்து பத்து சம்பந்தமா பண வரத்து இருக்கலாம். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு இன்னிக்கு வருமானம் கூடிடும். அதனால பண வரத்தும் ரொம்பவே அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 24
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

விருச்சிகம்
இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். அதனால குடும்பத்துலயும் ஒற்றுமை ஏற்பட்டுடும். கூடவே பழைய கடனும் நினைச்ச மாதிரியே வசூலாகிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு முன்னேற்றம் கிடைச்சி லாபம் பெருகிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கூட ஒத்துமையா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:30 முதல் 9:00 வரை

தனுசு
இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. தண்டச் செலவுங்க உங்களை தேடிவ வரும். அதனால பாக்கெட்டை பத்திரமா பாத்துக்கோங்க. வீட்டுலயும் பிள்ளைங்க மூலமா தேவையில்லாத பிரச்சனைங்க முளைக்கலாம். எச்சரிக்கையா இருக்குறது நல்லது. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாக்காத ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல அதை தவிர்க்குறது நல்லது. மனசுல அநாவசிய குழப்பம் பயம், கவலை வந்து போகும். நல்ல ரெஸ்ட் எடுக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

மகரம்
இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம் குடுக்குற மாதிரி தரமான சம்பவங்கள் நடக்கலாம். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. பிள்ளைங்களும் படிப்புல ஆர்வமா இருப்பாங்க. சுபகாரியம் சம்பந்தமான முயற்சிங்க எல்லாமே வெற்றியை கொடுக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு சரக்கு வித்து தீந்துடும். அதோட லாபமும் பெருகிடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

கும்பம்
இன்னிக்கு கூடப் பொறந்தவங்களால நல்லது நடந்துடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வெளியூர் ட்ராவல் பண்ற சந்தர்ப்பம் கிடைச்சாலும், கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல அதை அவாய்ட் பண்றது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். இன்னிக்கு ரொம்பவே உற்சாகத்தோட இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 12:50 மணி முதல் மாலை 5:00 மணி வரை

மீனம்
இன்னிக்கு உங்களுக்கு தேவையில்லாம தண்டச் செலவுங்க வந்து கையை கடிச்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு ரொம்பவே டல்லடிக்குற மாதிரி தான் இருக்கும். சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைங்க காணாம போயிடும். குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் 6:30 மணி வரை



Click it and Unblock the Notifications











