Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
இந்த ராசிக்காரங்க வீட்ல ரொமான்ஸ் களைகட்டும் என்ஜாய் பண்ணுங்க...
புதன் பகவான் ஆதிக்கம் நிறைந்த புதன் கிழமை இன்றைக்கு கிரகங்கள் சஞ்சாரத்தின்படி மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிலருக்கு பிரச்சினைகள் வரலாம். சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் வரலாம்.
புதன் பகவான் ஆதிக்கம் நிறைந்த புதன் கிழமை இன்றைக்கு கிரகங்கள் சஞ்சாரத்தின்படி மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிலருக்கு பிரச்சினைகள் வரலாம். சிலருக்கு பொருளாதார நெருக்கடிகள் வரலாம். சிலருக்கு பணவரவு வரும், சிலருக்கு திடீர் செலவுகள் வரும் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன் படிங்க. யாருக்கு என்ன பலன் என்று தெரியும்.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை சுமூகமா இருக்கும். உத்தியோகத்துல புதுசா மாற்றம் வர வாய்ப்பிருக்கு. சில பேருக்கு புது வேலையும் கிடைக்கும். இன்னிக்கு வீட்டுல சுபகாரியங்கள் நடக்கும். கூடப்பொறந்தவங்களும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. விடியக்காலையிலேயே சந்தோஷமான செய்தி உங்களை தேடி வரும். இதனாலேயே இன்னிக்கு மனசளவிலும் ஹெல்த் கண்டிஷன்லயும் ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 10.10 மணி - 3 மணி

ரிஷபம்
இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல சின்னச் சின்னதா ஊடல் வரலாம். நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துகிட்டா பிரச்சனை வளராம பாத்துக்கலாம். குடும்பத்துலயும் பணத்தட்டுப்பாடுனால பிரச்சசனை வரலாம். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியாவால மந்த நிலைமை மாறி முன்னேற்றம் காணலாம். லாபமும் பெருகிடும். ஹெல்த் கண்டிஷனை பொறுத்த வரைக்கும் இன்னிக்கு டல்லாவே ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் ப்ளூ
அதிர்ஷ்ட நம்பர் 33
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி - மாலை 12.55 மணி

மிதுனம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட வாக்குவாதம் பண்ணாம உங்க வேலையை மட்டும் பாருங்க. இல்லேன்னா தேவையில்லாத மன உளைச்சல் தான் உண்டாகும். செய்யுற காரியத்துல தடங்கல், இடைஞ்சல்னு முட்டுக்கட்டைகள் வரலாம். அதனாலேயே உங்களுக்கு டென்ஷன் கூடிடும். சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கண்ட்ரோலா இருக்குறது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 - இரவு 7:20 மணி

கடகம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.45 மணி முதல் 6.15 மணி வரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. பிசினஸ் ரீதியா எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்பவே அற்புதமா இருக்கும். புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்றதை ஒத்திப்போடுறது நல்லது. கல்யாணம், சுபகாரிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க. வீட்டு தேவைகளும் இன்னிக்க பூர்த்தியாகும். பழைய கடன்களும் இன்னிக்கு வசூலாகிடும்.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண் : 10
ராசியான நேரம்: பிற்பகல் 2 மணி - மாலை 4.20 மணி

கன்னி
இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு எதிர்பாக்காத ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பூர்வீக சொத்து பத்துனால அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு நடுவுல இருந்த ஊடல் சரியாகி அந்நியோன்யம் கூடும். ஃபைனான்ஸ் பிரச்சனையும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: இரவு 04:00 - இரவு 9:30

துலாம்
இன்னிக்கு வேலை செய்யுற இடத்துல கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. கவர்மெண்ட் வழியில எதிர்பாத்த உதவி கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகலாம். இருந்தாலும் ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் கிடைக்கும். நிதி நிலைமை சுமாரா இருந்தாலும், கடன் பிரச்சனைகள் குறையும்கிறதுனால சந்தோஷம் கூடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க நேரும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட நம்பர்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10.45 மணி முதல் பிற்பகல் 12.25 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பிசினஸ்ல புதுசா கூட்டாளிகள் வந்து சேருவாங்க. அதனால போட்டி, பொறாமை விலகி லாபம் கிடைக்கும். சிலருக்கு புதுசா நிலம், மனை வாங்குறதுக்கு யோகம் உண்டாகும். உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்துல பெரியவங்களோட மனசுல இடம் பிடிப்பீங்க. எதிர்பாக்காத திடீர் பண வரத்தும் இன்னிக்கு உண்டு. குடும்பத்துல பிள்ளைங்களால சந்தோஷம் கூடும். ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த பாதிப்புகள் மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 - மதியம் 1:00 மணி

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்னதா மாறுதல் செஞ்சா கொழுத்த லாபம் கிடைக்கும். பிசினஸ் ரீதியா புதுசா எடுக்குற முயற்சிக்கு தடங்கல் வரலாம். பண வரத்து தாராளமா இருந்தாலும், கூடவே செலவுகளும் வரிசை கட்டி நிக்கும். இருந்தாலும் பணப்பற்றாக்குறை கொஞ்சம் குறையும். உத்தியோகத்துல வேலைச்சுமை கூடும். சொந்தக்காரங்களை அனுசரிச்சி போனீங்கன்னா, எல்லோரும் தேடி ஓடி வருவாங்க.
ராசியான நிறம்: அடர் மஞ்சள்
ராசியான எண் : 21
ராசியான நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்
இன்னிக்கு பிசினஸ் வளர்ச்சிக்காக நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு அதிரடி வெற்றி கிடைக்கும். பிசினஸ்லயும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல சில பேருக்கு எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். பிள்ளைங்களால நல்லது நடக்கும். பிசினஸ்க்கு பேங்க் லோனுக்கு முயற்சி பண்ணினா கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளும் கைகூடும். இன்னிக்கு தாராள பணவரத்து இருக்கும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 25
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 - மாலை 3:40 மணி

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்ன இடைஞ்சலுக்கு பின்னாடி நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். திடீர் வெளியூர் பிரயாணத்துனால அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்துல தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எச்சரிக்கையா இருங்க. உத்தியோகத்துல கோபத்தை குறைச்சிட்டு வேலையில கவனமா இருக்க பாருங்க. இன்னிக்கு தண்டச்செலவுங்களும் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 - மதியம் 2:30 மணி

மீனம்
இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைக்கும். பிசினஸ்லயும் நல்ல லாபம் கிடைக்கும். வருமானமும் கூடும். சிலருக்கு புதுசா வண்டி வாகனம் வாங்குற யோகம் உண்டாகும். குடும்பத்துல பிள்ளைங்க மூலமா சுபச் செய்திகள் வந்துடும். பிசினஸ்ல புதுசா நவீன கருவிகள் வாங்குற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வெளியூர் பிரயாணத்துனால நல்லது நடக்கும். இன்னிக்கு எந்த காரியத்தையும் மன உறுதியோட இருந்து சாதிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 - மாலை 3:40 மணி



Click it and Unblock the Notifications











