For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா? அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா?

இராமாயணம், மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் நிகழ்ந்த துர்சம்பவங்களுக்கு காரணமாக இருப்பது அவர்களுக்கு யாராவது ஒருவர் கொடுத்த சாபமாகத்தான் இருக்கும். சீதையின் மரணம் தொடங்கி, கிருஷ்ணரின் மரணம் வரை ச

|

இந்தியாவில் எண்ணற்ற நூல்கள் இருந்தாலும் இராமாயணமும், மகாபாரதமும் மட்டும்தான் இதிகாசங்கள் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அதில் கூறப்பட்டுள்ளார் கருத்துக்களும் அதன் தொன்மையும்தான். இராமாயணம், மகாபாரதம் இரண்டிலுமே விஷ்ணு பகவான் இராமராகவும், கிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழித்தார்.

curses from Ramayana and Mahabharat that no one knows about

இந்த இரண்டு இதிகாசங்களிலும் நிகழ்ந்த துர்சம்பவங்களுக்கு காரணமாக இருப்பது அவர்களுக்கு யாராவது ஒருவர் கொடுத்த சாபமாகத்தான் இருக்கும். சீதையின் மரணம் தொடங்கி, கிருஷ்ணரின் மரணம் வரை சாபத்தால் நடந்ததுதான். இவ்வாறாக இந்த இரண்டு இதிகாசங்களிலும் நாம் அறியாத பல சாபங்கள் உள்ளது. இந்த பதிவில் இரண்டு இதிகாசங்களிலும் இருக்கும் சில முக்கியமான சாபங்களையும், அதனை யார் யாருக்கு கொடுத்தார்கள் என்றும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமனின் தாயார் அஞ்சனை மீதான சாபம்

அனுமனின் தாயார் அஞ்சனை மீதான சாபம்

இவர் இந்திரலோகத்தில் அப்சரவாக இருந்தார், ஆனால் பூமியில் வானர இனத்தில் பிறந்தார். வானர உருவத்தில் தியானம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது இவர் பழங்களை தூக்கி எறிந்தார். இதனால் கோபமுற்ற முனிவர் அவரை வானரராக பிறக்கும் படி சாபமிட்டார். பிரம்மாவின் வரத்தின் மூலம் அவர் இந்த சாபத்தில் இருந்து தப்பித்தார்.

அனுமன் மீதான சாபம்

அனுமன் மீதான சாபம்

அனுமன் தனது குழந்தைப் பருவத்தில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். அதுபோன்ற ஒரு சம்பவத்தால் முனிவர் ஒருவர் அனுமனுக்கு சாபமளித்தார். இதனால் இவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும், சக்தியையும் இவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போனது. யாராவது ஒருவர் நியாபகப்படுத்தினால் மட்டுமே இவருக்கு அவை நினைவு வரும். சீதையை இராவணன் கடத்தியபோது ஜாம்பவந்ததான் இவருக்கு அனைத்தையும் நினைவுக்கூறினார்.

வசிஸ் மீதான வசிஷ்டரின் சாபம்

வசிஸ் மீதான வசிஷ்டரின் சாபம்

தனது காமதேனுவான நந்தினியைக் கடத்தியதற்காக வசிஷ்டர் பூமியில் மனிதர்களாக பிறக்கும்படி வசிஷ்க்கு சாபமிட்டார். இந்த சாபம் பீஷ்மரின் பிறப்புடனும் தொடர்புடையது.

MOST READ: இந்த ராசிகாரங்களுக்கு பொய் சொல்லவே வராதாம்... யார் அந்த அரிச்சந்திர ராசிங்க தெரியுமா?

இராமர் மீதான சாபம்

இராமர் மீதான சாபம்

இராமாயணத்தில் அனைவரும் இராமபிரான் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் வைத்திருந்தனர். ஆனால் சீதையை மீட்டபிறகு மீண்டும் இராமர் அவரை இழப்பார் என்று இராமருக்கே ஒருவர் சாபம் கொடுத்தார். அது வேறு யாருமல்ல வாலியின் மனைவி தாராதான். வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையே நடந்த போரில் இராமர் சுக்ரீவனுக்காக வாலியை மறைந்திருந்த தாக்கிக் கொன்றார். இதனால் அவரின் மனைவி தாரா இராமர் சீதையை மீட்டெடுத்தவுடன் விரைவில் அவரை இழக்க நேரிடும் என்றும் அவர் பூமிமாதவிடம் மீண்டும் திரும்புவார் என்றும் சாபம் கொடுத்தார்.

கர்ணனுக்கான சாபம்

கர்ணனுக்கான சாபம்

வில் பயிற்சி எடுக்கும்போது பசு ஒன்றை கொன்றதற்காக கர்ணன் அந்தணன் ஒருவரால் சபிக்கப்பட்டார். பசுவின் இறப்பைக் கண்டு கோபமுற்ற அந்தணர் அந்த அப்பாவி பசுவைப் போலவே இக்கட்டான சூழ்நிலையில் கர்ணனுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போகும் என்று சாபமிட்டார். இதனால்தான் போரில் கர்ணனின் தேர் சேரில் சிக்கியபோது சல்லியன் உதவாமல் சென்றார். கர்ணனின் மரணத்திற்கு இந்த சாபமும் முக்கிய காரணமாகும்.

மன்னர் யயதிக்கு சுக்ராச்சாரியார் கொடுத்த சாபம்

மன்னர் யயதிக்கு சுக்ராச்சாரியார் கொடுத்த சாபம்

யயதி ரகசியமாக ஷர்மிஷ்டாவை மணந்ததால் முனிவரும் குரு சுக்ரச்சார்யாவும் யயதியை வயதான மனிதராக மாறும்படி சபித்தார். இவர் இந்த நிலையை மற்றொருவரிடம் பரிமாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டார். யயதியின் அனைத்து மகன்களும் இதற்கு மறுத்துவிட்டனர், ஆனால் புரு ஒப்புக் கொண்டார், அதன்பின்னர் அவர் இராஜ்ஜியத்தின் வாரிசானார்.

MOST READ: அகோரிகள் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள காரணம் தெரியுமா? அவர்களின் ரகசிய கோவில்கள் எங்குள்ளது?

சரஸ்வதி பிரம்மாக்கு அளித்த சாபம்

சரஸ்வதி பிரம்மாக்கு அளித்த சாபம்

பிரம்மா மக்களால் வழிபட படாமல் இருப்பதற்கு சரஸ்வதியின் சாபமும் ஒரு காரணமாகும். பிரம்மாவிடம் ஏற்பட்ட தேவையற்ற முன்னேற்றங்களால் எரிச்சலடைந்த பின்னர் அவர் இவ்வாறு சபிக்கப்பட்டார்.

சிவனுக்கு பிரம்மா அளித்த சாபம்

சிவனுக்கு பிரம்மா அளித்த சாபம்

முதலில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை பார்வதி அவரை சிவன் என்று தவறாக நினைத்து விட்டார், அவர் இதை உணர்ந்ததும் சிவனிடம்ம் கூறினார். சிவன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை கால பைரவராக மாறி வெட்டி வீழ்த்தினார். இதனால் வெட்டப்பட்ட ஐந்தாவது தலை சிவனுடன் இணையும் என்றும் அது எப்போதும் அவரை பசியாக வைத்திருக்கும் என்றும் பிரம்மா சாபமிட்டார். ஐந்தாவது தலை சிவனின் கையில் இனைந்து அவரை எப்போதும் பசியாகவும், தூக்கமில்லாமலும் இருக்கும்படி படி செய்தது. இந்த கபாலத்தில் இருந்து சிவனை விடுவிக்க பார்வதி விஷ்ணுவின் உதவியை நாடினார்.

லக்ஷ்மிக்கு சரஸ்வதி அளித்த சாபம்

லக்ஷ்மிக்கு சரஸ்வதி அளித்த சாபம்

ஒரு மரமாக பிறக்க வேண்டுமென்று சரஸ்வதி லட்சுமிக்கு சாபமளித்தார். கங்கை அளித்த சாபத்தால்தான் சரஸ்வதி பிரம்மாவின் மனைவியானர். அதற்கு சரஸ்வதி கங்கைக்கு புனித நதியாக மாறி அதில் குளிப்பவர்கள் பாவங்களை போக்கும்படி சாபமிட்டார்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...!

நல் மற்றும் நீலுக்கான சாபம்

நல் மற்றும் நீலுக்கான சாபம்

நல் மற்றும் நீல் இருவரும் குறும்புக்கார வானரங்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் எப்போதும் கற்களை தண்ணீரில் தூக்கிப்போட்டு விளையாடுவார்கள். ஒருமுறை தண்ணீர் உருவத்தில் இருந்த முனிவர் மீது இவர்கள் கல்லெறிந்தனர். இதனால் கோபமுற்ற அவர் இனி அவர்கள் எதை தண்ணீரில் எறிந்தாலும் அது மூழ்காது என்று சாபமிட்டார். இராமர் இலங்கைக்கு பாலம் கட்டியபோது இவர்களால்தான் அதனை செய்ய முடிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Curses From Ramayana And Mahabharata That No One Knows About

Read to know the curses from Ramayan and Mahabharat that no one knows about.
Story first published: Monday, September 30, 2019, 12:10 [IST]
Desktop Bottom Promotion