For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணை கடத்துவது, வன்கொடுமை செய்வது எதுவுமே இங்கு தப்பில்லை...பெண்களுக்கு எதிரான மோசமான சட்டங்கள்...

|

இன்று உலகம் முழுவதும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். துறைகள் என்பதை தாண்டி அரசியலிலும் பெண்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளனர். இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் இன்னும் பல நாடுகளில் குறிப்பாக வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் நாடுகளில் கூட பெண்கள் சமமாக நடத்தப்படுவதைத் தடுக்கும் சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது.

Craziest Laws Across The World Against Women

வளர்ந்த நாடுகளில் கூட பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால் உண்மை அதுதான். இந்த பதிவில் உலகில் பெண்களுக்கு எதிராக நிலவும் சில மோசமான சட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 திருமணமான பெண்ணை கணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யலாம்

திருமணமான பெண்ணை கணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யலாம்

சில நாடுகளில் கணவன் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது. உலகிலேயே இந்தியாவில்தான் இந்த கொடுமை அதிகம் அரங்கேறுகிறது. கடந்த காலத்தில் பெண்கள் 15 வயதை அடைந்து விட்டால் அவர்கள் விருப்பமில்லை என்றாலும் வன்கொடுமை செய்வது தவறில்லை என்ற சட்டம் இருந்தது. இப்போதுதான் இதில் சில சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல், பஹாமாஸில், ஒரு கணவர் தனது மனைவிக்கு 14 வயதுக்கு மேல் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்வது சட்டபூர்வமானது, அதே நேரத்தில் சிங்கப்பூரில் அவள் 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

காங்கோ

காங்கோ

காங்கோ நாடு ஜனநாயக குடியரசு என்று அழைக்கப்படும் இந்த நாட்டில் கணவன் வீட்டுத் தலைவன் என்றும், மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஒரு சட்டம் கூறுகிறது. கணவர் கூறுவது எதுவாக இருந்தாலும் மனைவி அதற்கு கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்.

 சம சொத்துரிமை

சம சொத்துரிமை

துனிசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மகன்கள் அளவிற்கு மகள்களுக்கு சொத்தில் உரிமையில்லை. ஒரு துனிசிய பெண் தன்னுடைய தந்தையின் சொத்தில் இருந்து பாதியை மட்டுமே பெற முடியும். அதுவே இரண்டு மகள்கள் இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே பெற முடியும். அதுவே மகனாக இருந்தால் பெண்ணை மகளை விட இருமடங்கு சொத்தை பெற வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஒரு பெண் பெறும் தொகையை விட ஆண் இரட்டிப்பைப் பெறுகிறான்.

MOST READ: ஒரே காதலனை சண்டையில்லாமல் 'பகிர்ந்து' கொள்ளும் இரட்டை சகோதரிகள்... அதிர்ஷ்டக்கார ஆளு...!

பெண்கள் கடத்தப்படலாம்

பெண்கள் கடத்தப்படலாம்

லெபனானில், கடத்தல், கற்பழிப்பு அல்லது சட்டரீதியான பாலியல் பலாத்காரம் செய்யும் எந்தவொரு மனிதனும் பின்னர் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால் அவர் மீது வழக்குத் தொடர முடியாது. ஐரோப்பிய நாடான மால்டாவில், குற்றவாளி பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்யாவிட்டால் கடத்தலுக்கான தண்டனை குறைக்கப்படுவதில்லை, மேலும் கடத்தப்பட்ட நபரை திருமணம் செய்து கொண்டால் குற்றவாளி வழக்கு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவார்.

 ஏமன்

ஏமன்

உலகின் பெண்களுக்கு மோசமான நாடு என்று ஏமன் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடத்தல், பாலியல் வன்கொடுமை என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சாதாரணமாக நடக்கும் இந்த நாட்டில் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வது சட்டத்திற்கு புறம்பானது.

 சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

உலகின் அழகான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் நாடு சுவிட்சர்லாந்து ஆகும். ஆனால் இங்கும் பெண்களுக்கு எதிரான சில சட்டங்கள் உள்ளது. சுவிட்சர்லாந்தில் பெண்கள் பேன்ட் அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆடை சுதந்திரம் என்பது அனவைருக்கும் பொதுவானது ஆனால் இங்கு பெண்கள் ஜீன்ஸ் மற்றும் லெகின்ஸ் அணிவது சட்டத்திற்கு எதிரானது.

MOST READ: ஆணுறுப்பு கடவுளை முகத்தை மறைத்து கொண்டு வழிபட்ட பெண்கள்... உலகின் விசித்திரமான கடவுள்களை பாருங்கள்..

 பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில், எந்த சூழ்நிலையிலும் விவாகரத்து பெறுவது சட்டத்திற்கு எதிரானது. இந்த ஆசிய தேசத்தில் " இறுதி வரை ஒன்றாக இருக்க வேண்டும் " என்பது சட்டமாகும். இதுபோன்ற பழமையான, கடுமையான சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. எவ்வளவு மனக்கசப்பு இருந்தாலும் பெண்கள் கணவருடன்தான் வாழ வேண்டும்.

துருக்கி

துருக்கி

துருக்கியில், ஒரு பெண் தனது கணவரின் அனுமதியின்றி வேலை செய்ய முடியாது. விவாகரத்து சட்டவிரோதமானது அல்ல என்றாலும், அவர்கள் பிரிந்து செல்லும் போது எந்தவொரு கூட்டு வருமானத்தையும் பெண் இழக்க வேண்டும். எந்தவொரு காரணமும் இன்றி பெண்களை விவாகரத்து செய்யும் இந்த சட்டம் பெண்களுக்கு எதிரானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 அமெரிக்கா

அமெரிக்கா

யுனைடெட் ஸ்டேட்ஸில், அமெரிக்க குடியுரிமையைப் பெற விரும்பும் திருமணத்திலிருந்து பிறந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தை மூலமாக அந்தஸ்தைப் பெறுகிறார்களா என்பதைப் பொறுத்து வெவ்வேறு நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். இந்த சட்டம் மிகவும் குழப்பமானது ஆனால் இதன் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுகின்றனர்.

MOST READ: இந்த ராசிக்காரங்களுக்கு மத்தவங்க பொறாமைப்படுற அளவுக்கு அற்புதமான காதல் வாழ்க்கை அமையுமாம்...!

 எகிப்து

எகிப்து

எகிப்தில் ஒரு கணவர் தன் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டதாகக் கூறி கொலை செய்தால் கொலைக்கு வழக்கமாக வழங்கப்படுவதை விட மிகவும் மென்மையான தண்டனையுடன் வெளியேற முடியும். இதனை பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 சிரியா

சிரியா

சிரியாவில், ஒரு ஆண் தனது மனைவி, சகோதரி, தாய் அல்லது மகளை ஒரு 'சட்டவிரோத' பாலியல் செயலில் ஈடுபட்டதற்காக கூறி கொலை செய்தால் ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

நைஜீரியா

நைஜீரியா

நைஜீரியாவில், ஒரு ஆண் ஒரு பெண் அவர் தனது மனைவியாக இருந்தால், எந்தவொரு 'கடுமையான' காயமும் இல்லாமல், ஒரு பெண்ணை வழக்குத் தொடர விடாமல் சட்டப்பூர்வமாகத் தாக்க முடியும்.

MOST READ: 650 பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த மனித அரக்கி... வரலாற்றின் கொடூரமான பெண்கள் ...!

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சட்டத்தின் படி மனைவிகளை தாக்குபவர்களை தண்டிப்பது என்பது சாத்தியமற்றதாக உள்ளது. இப்போது, குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்கள் உறவினர்கள் அவர்களுக்கு எதிராக சாட்சியமளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது பொதுவாக ஒரு குடும்பத்திற்குள் வன்முறையை அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Craziest Laws Across The World Against Women

Read to know some craziest laws across the world against women.
Story first published: Friday, February 14, 2020, 13:05 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more