For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...

195 நாடுகள் இருக்கும் இந்த பூமியில் பெண்கள் மீது வன்முறை நடக்காத நாடு என்று ஒன்று கூட இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

|

உலகில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பூமியில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் கிராமம், நகரம், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

Countries With Highest Rape Crime

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல் இடத்தில் இருப்பது பாலியல் வன்கொடுமைதான். ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி அவளை பலவந்தப்படுவது அனைத்துமே பாலியல் வன்கொடுமைதான், இது திருமண உறவிலும் உள்ளது. 195 நாடுகள் இருக்கும் இந்த பூமியில் பெண்கள் மீது வன்முறை நடக்காத நாடு என்று ஒன்று கூட இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த பதிவில் பாலியல் வன்கொடுமை அதிகம் நிகழும் டாப் 10 நாடுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எத்தியோப்பியா

எத்தியோப்பியா

எத்தியோப்பியா உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை விகிதங்களில் மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா.வின் ஒரு அறிக்கையில் எத்தியோப்பிய பெண்களில் கிட்டத்தட்ட 60% பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். எத்தியோப்பியாவில் கற்பழிப்பு என்பது மிகவும் கடுமையான பிரச்சினை. பெண்களை கடத்தி திருமணம் செய்வது இங்கு மிகவும் சாதாரணமான ஒன்று, இந்த நடைமுறையால்தான் இந்த பட்டியலில் எத்தியோப்பியா இடம்பெற்றுள்ளது. எத்தியோப்பியாவில் ஒரு ஆண் தனியாகவோ அல்லது தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணை கடத்திச் செல்வதோ, பாலியல் வன்கொடுமை செய்வது என்பதோ சாதாரணமான செயலாக கருதப்படுகிறது. கடத்தல்காரன் தான் விரும்பும் பெண்ணை கடத்திச் சென்று அந்த பெண் கர்ப்பம் ஆகும்வரை பலாத்காரம் செய்வான். பல சிறுமிகள் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எத்தியோப்பிய இராணுவம் குடிமக்கள் மீது திட்டமிட்ட கற்பழிப்புகளை அரங்கேற்றியுள்ளது.

இலங்கை

இலங்கை

இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இன்றும் மக்களை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை செய்து வருகின்றனர். உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் கற்பழிப்பு மற்றும் சித்திரவதை தொடர்கிறது என்று சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் இலங்கை ஆண்களில் 14.5 சதவீத்தினர் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில் கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால் கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட இவர்களில் 96 சதவீதத்தினர் எந்தவிதமான தண்டனையையும் அனுபவிக்கவில்லை. 64 சதவீத்தினர் ஒன்றுக்கு மேற்பட்ட கற்பழிப்புகளை செய்துள்ளனர். இதனால்தான் இலங்கை அதிகளவு தற்கொலைகள் நிகழ்வும் நாடாக உள்ளது.

கனடா

கனடா

இது ஒரு வளர்ந்து வரும் கண்டம் மற்றும் இந்த நாட்டில் மொத்தமாக கற்பழிப்பு வழக்குகள் 2,516,918 ஆகும். மொத்த கற்பழிப்பு வழக்குகளில் இவை ஆறு சதவீதம் மட்டுமே. மூன்று பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், 6% பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே போலீசில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஜஸ்டிஸ் இன்ஸ்டிடியூட்டின் கூற்றுப்படி, ஒவ்வொரு 17 பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களில் 62% பேர் உடல் ரீதியாக காயமடைந்துள்ளனர், 9% அடித்து அல்லது துன்புறுத்தப்பட்டனர்.

MOST READ:நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா?

பிரான்ஸ்

பிரான்ஸ்

1980 வரை பிரான்சில் கற்பழிப்பு ஒரு குற்றமாகவே கருதப்படவில்லை. பெண்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் பலப்படுத்தும் சட்டங்கள் சமீபத்தில்தான் பிரான்சில் நிறைவேற்றப்பட்டன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் 1992 இல் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் தார்மீக துன்புறுத்தல் தொடர்பான ஒரு சட்டம் 2002 இல் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஆண்டுக்கு 75,000 கற்பழிப்புகள் இருப்பதாக அரசாங்க ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீத்தினர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். மொத்தம் 3,771,850 குற்றங்களுடன் பிரான்ஸ் 7 வது இடத்தில் உள்ளது.

 ஜெர்மனி

ஜெர்மனி

தோராயமாக 2,40,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் இதுவரை பாலியல் பலாத்காரத்தால் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கற்பழிப்பு குற்றங்களில் ஜெர்மனி ஆறாவது இடத்தில் உள்ளது, இந்த ஆண்டில் 6,507,394 புள்ளிவிவரங்கள் உள்ளன, இது உண்மையில் மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கும் ஜெர்மனி மனிதநேயத்தில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து வாழவோ அல்லது பார்வையிடவோ பலர் விரும்புகிறார்கள். ஆனால் இந்த நாடும் கற்பழிப்பு குற்றத்தில் மோசமாக ஈடுபட்டுள்ளது என்பதை அவர்கள் நிச்சயமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜனவரி 2013 இல், நீதி அமைச்சகம், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் மற்றும் உள்துறை அலுவலகம் ஆகியவை பாலியல் வன்முறை தொடர்பான அதன் முதல் கூட்டு அதிகாரப்பூர்வ புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டன, இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் குற்றங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி இங்கிலாந்தில் ஒரு ஆண்டுக்கு 85,000 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர், இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகம் அதிகமாகியிருக்கும். . ஒவ்வொரு ஆண்டும் 400,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். 5 பெண்களில் ஒருவர் (வயது 16 - 59) 16 வயதிலிருந்தே ஒருவித பாலியல் வன்முறையை அனுபவித்திருக்கிறார்.

MOST READ:எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...!

 இந்தியா

இந்தியா

பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடம் இந்தியா. இந்தியாவில் கற்பழிப்பு என்பது பெண்களுக்கு எதிரான இந்தியாவின் பொதுவான குற்றங்களில் ஒன்றாகும். சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 கற்பழிப்புகள் நடைபெறுகிறது. இதில் பாதி குற்றங்கள் கூட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இங்கு வழங்கப்படும் தாமதமான நீதிதான். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களில் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு 9 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இது மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளால் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா

2012 ஆம் ஆண்டில் மட்டும் இங்கு பதிவான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 85000 ஆகும். தற்போது இது பலமடங்கு அதிகரித்திருக்கிறது. தென் ஆப்ரிக்காவை உலக கற்பழிப்புகளின் மையம் என்று அழைக்கும் அளவிற்கு இங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெறுகிறது. இங்கு வாழும் ஆண்களில் 25 சதவீத்தினர் தங்கள் வாழ்க்கையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.குழந்தைககளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை 2 ஆண்டுகள் மட்டுமே.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஐரோப்பிய கண்டத்தில் அதிக பாலியல் பலாத்காரம் நடக்கும் நாடு சுவீடன் ஆகும், உலகளவில் இது மிகவும் அதிகமான ஒன்றாகும். ஸ்வீடனில் ஒவ்வொரு நான்கு பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். 2009 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் 15,700 பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது 2008 உடன் ஒப்பிடும்போது 8% அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது இப்போது இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 58% அதிகரித்துள்ளது.

MOST READ:இந்த ராசிக்காரங்க குழப்பம் ஏற்படுத்துறதுல சகுனியையே மிஞ்சிருவங்களாம் தெரியுமா?

அமெரிக்கா

அமெரிக்கா

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காதான் கற்பழிப்பு குற்றத்திலும் முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஆண், பெண் கற்பழிப்புகள் இரண்டுமே நடைபெறுகிறது. பெண்களைப் போலவே குறிப்பிட்ட அளவு ஆண்களும் கற்பழிப்புக்கு ஆளாகின்றனர். இங்கு நடத்திய ஆய்வின் படி 6 பெண்களில் ஒருவரும், 33 ஆண்களில் ஒருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கல்லூரி வயது பெண்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் 14 வயதிலிருந்து கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சியை அனுபவித்ததாக தெரிவிக்கின்றனர்.மொத்த குற்றங்களில் 16 சதவீத குற்றத்திற்கு மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries With Highest Rape Crime

Here is the list of countries with highest rape crime.
Story first published: Thursday, January 23, 2020, 12:23 [IST]
Desktop Bottom Promotion