For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபாசப்படத்துல நடிச்சா தப்பில்ல ஆனா சிறிய மார்பு இருக்கறவங்க நடிச்சா பெரிய தப்பாம் எங்க தெரியுமா?

|

இந்த உலகத்தில் நாம் நினைக்கும் அனைத்தும் கிடைத்து விடுவதில்லை, அப்படி கிடைக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை. சிலசமயம் நமது தேவைகளுக்கு முட்டுக்கட்டையாக நமது பொருளாதாரமோ அல்லது நமது குடும்பமோ இருக்கும். ஆனால் சிலசமயம் நமது ஆசைக்கு எதிராக அரசாங்கமே நிற்கும். ஒவ்வொரு அரசாங்கமும் தனது நாட்டில் சிலவற்றை தடை செய்திருக்கும்.

Countries Where Common Things Are Illegal

அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்துவது, ஈரானில் சிறுநீரகத்தை விற்பது போன்றவை பாராட்டுக்குரிய தடைகள் ஆகும். ஆனால் மக்கள் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய சில விஷயங்களை கூட தடை செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களாகும். இந்த விதிக்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. சில நாடுகளில் மிகவும் சாதாரணமான விஷயங்கள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. சில முக்கிய நாடுகளில் என்னென்ன தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரீஸ்

கிரீஸ்

கிரேக்க அரசாங்கம் 2002 முதல் நாடு முழுவதும் அனைத்து வீடியோ கேம்களையும் தடை செய்தது. சட்டவிரோத சூதாட்டத்தை நிறுத்த முயற்சி செய்தது கிரீஸ் அரசு, இது அனைத்து வீடியோ கேம்களையும் தடைசெய்ய வழிவகுத்தது. இந்த நாட்டில் உங்களின் வீட்டு கம்ப்யூட்டரில் இருக்கும் வீடியோ கேமை நீங்கள் விளையாடினால் நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டும்.

மலேசியா

மலேசியா

மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்துவது, அது காலணிகள், தொப்பிகள், சட்டைகள் என எதுவாக இருந்தாலும் அது மலேசியாவில் சட்ட விரோதமானது. ஏனெனில் இங்கு மஞ்சள் நிறம் " எதிர்ப்பாளர்களின் நிறம் " என்று கருதப்படுகிறது. மலேசிய அரசாங்கம் தங்கள் அரசியல் விவகாரங்களுக்காக மஞ்சள் ஆடைகளை தடை செய்ய முடிவு செய்துள்ளது. ஏனெனில் குறிப்பிட்ட எதிர்க்கட்சி ஆர்வலர்கள் அடிக்கடி எதிர்ப்பை தெரிவிக்க மஞ்சள் நிறத்தை பயன்படுத்துகின்றனர்.

டென்மார்க்

டென்மார்க்

டென்மார்க் அரசு தங்கள் நாட்டின் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அவர்களின் விருப்பத்திற்காக வினோதமான பெயர்களை வைப்பதை தடுப்பதற்காக பெற்றோர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெற்றோர்கள் அரசாங்கம் அனுமதித்துள்ள 24,000 பெயர்களில் ஏதாவது ஒன்றைத்தான் குழந்தைகளுக்கு வைக்க வேண்டும். இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர் இரண்டும் இருக்கும். ஒருவேளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு அவர்கள் விரும்பும் பெயரை வைக்க விரும்பினால் அதற்கு அரசாங்கத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

MOST READ: இந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...!

ஈரான்

ஈரான்

மேற்கத்திய நாகரிகத்தின் மகத்தான செல்வாக்கைக் கட்டுப்படுத்த மேற்கத்திய இசை, ராப் இசை, ஒல்லியான ஜீன்ஸ், செல்லப் பூனைகள் மற்றும் நாய்கள் மற்றும் பச்சை குத்தல்களை உள்ளடக்கிய பல மேற்கத்திய விஷயங்களை தடை செய்ய ஈரானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதில் முதலிடத்தில் இருப்பது மேற்கத்திய ஹேர்கட்தான். ஹேர்கட்ஸில் போனிடெயில்ஸ், கூர்மையான கூந்தல் போன்றவை இருந்தது. ஈரானின் முடிதிருத்தும் யூனியன் இந்த ஹேர்கட் அனைத்தையும் தடை செய்தது, ஏனெனில் மேற்கத்திய சிகை அலங்காரங்கள் ஒரு பிசாசின் கடவுளை வணங்குவதற்கான அறிகுறி என்று அவர்கள் நினைத்தார்கள்.

சீனா

சீனா

சீன ஆட்சி மல்லியை சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து தடை செய்துள்ளது. அதை விற்கவும், வளர்க்கவும், அதைப் பற்றி பேசவும் மக்களுக்கு அனுமதி இல்லை. துனிசிய மல்லிகைப் புரட்சிக்குப் பின்னர், சீனாவின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதற்கு மல்லிகை தனது சமூகத்தை சீர்குலைக்க மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்று சீனா நினைத்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று சீனா இணையத்திலிருந்து மல்லிகை என்ற வார்த்தையை தணிக்கை செய்தது.

புருண்டி

புருண்டி

இந்த நாட்டில் நீங்கள் ஜாக்கிங் சென்றால் உங்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம். புருண்டி கால்பந்தை நேசிக்கும் ஒரு ஜனாதிபதியை பெற்றது, இருப்பினும் அவர் போர்களைத் தவிர்க்க ஜாக்கிங் செல்ல தடை விதித்தார். ஆமாம், புருண்டியில் ஜாக்கிங் என்பது ஒரு யுத்தச் செயலாகக் கருதப்படுகிறது, எனவே புருண்டி இனக்குழுக்களுக்கிடையேயான மோதல்களைத் தடுக்க ஜனாதிபதி பியர் நகுருன்சிசா காலை ஜாக்கிங்கை அதிகாரப்பூர்வமாக தடைசெய்தார், மேலும் இந்தச் சட்டம் போரின் வெறியைத் தடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

MOST READ: இந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா?

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரெஞ்சு மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த கெட்சப்பை இனி மதிய உணவில் சுவைக்க முடியாது. ஏனெனில் கெட்சப் தங்களின் பாரம்பரிய உணவுகளின் அசல் தன்மையை அழித்து விட்டதாக நினைத்ததால் கெட்சப்பை தடை செய்தது. இதனால் அங்கிருக்கும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கெட்சப் வழங்குவது நிறுத்தப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு கெட்சப் வேண்டுமென்றால் நீங்கள் பாரம்பரிய பிரெஞ்சு உணவு ஏதாவது ஒன்றை ஆர்டர் செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

உலகின் அழகிய நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா, ஆனால் அங்கு சில வித்தியாசமான விதிமுறைகள் உள்ளது, அதனை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆஸ்திரேலியாவில் ஆபாசப்படங்களில் நடிப்பது குற்றமல்ல, ஆனால் சிறிய மார்பகங்களை கொண்ட பெண்கள் ஆபாசப்படத்தில் நடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பின்னால் இருக்கும் லாஜிக் என்னவெனில் இந்த வகை செயல்பாடுகள் அவர்களின் சாதாரண குடிமக்களை குழந்தைகளை துன்புறுத்தவர்களாகவும், கற்பழிப்பவர்களாகவும் மாற்றும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் குழந்தைகள் சிகரெட், ஆல்கஹால் மற்றும் காண்டம் உபயோகிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா

சவூதி அரேபியா

பூமியின் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் நாடாக சவூதி அரேபியா உள்ளது. இதில் பெண்களுக்கென சில சிறப்பு கட்டுப்பாடுகள் வேறு இங்கு உள்ளது. இங்கு பெண்களுக்கு கிட்டதட்ட அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் உள்ளது, பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது, தனியே வெளியே செல்லக்கூடாது, பெண்களுக்கென ஜிம் கிடையாது. மேலும் பொதுவான திரையரங்குகள், தம்பதியல்லதா ஆண், பெண் ஒன்றாக சுற்றுவது, காதலர் தினம் என அனைத்தும் இங்குதடைசெய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அவற்றைத் தடை செய்வதற்கான எழுத்துப்பூர்வ அரசியலமைப்பு எதுவும் இல்லை, ஆனால் அனைவரும் இவற்றிற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

MOST READ: காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா?

வடகொரியா

வடகொரியா

இது உலகின் மிகவும் தனிமைப்படுத்தபட்ட நாடாக உள்ளது, இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி வெளியுலகிற்கு முழுமையாக தெரியாது. டிவி பார்ப்பது, பாடல் கேட்பது, நாட்டை விட்டு வெளியேறுவது, பொது இடத்தில் சிரிப்பது, வாகனம் ஓட்டுவது, மதத்தை நம்புவது, ப்ளூ ஜீன்ஸ் அணிவது, கருத்துக்களை பகிர்ந்து கொள்வது அனைத்திற்கும் மேலாக வட கொரியாவை வட கொரியா என்று அழைப்பது என அனைத்தும் இங்கும் கடுமையான குற்றங்கள் ஆகும். இங்கு அதை கொரியா என்று மட்டுமே அழைக்க வேண்டும். இதில் எதை மீறினாலும் சிறைத்தண்டனை அவர்களுக்காக காத்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Countries Where Common Things Are Illegal

Here is the list of countries where common things are illegal
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more