Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு எத்தனை பல் இருக்குன்னு சொல்லுங்க... நீங்க அதிர்ஷ்டசாலியா இல்லையான்னு சொல்றோம்...
பண்டைய சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரின் செல்வ வளத்தை உடல் பண்புகளின் அடிப்படையில் கணிக்க முடியும். அந்த வகையில் ஒருவருக்கு இருக்கும் பற்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர் அதிர்ஷ்டசாலியா என்பதை அறியலாம்.
ஒருவருக்கு பற்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் பற்கள் இருப்பதால் தான், நம்மால் எதையும் கடிக்கவோ, மெல்லவோ முடிகிறது. மனிதன் பூமியில் குழந்தையாக பிறக்கும் போது பற்கள் இல்லாமல் தான் பிறக்கிறான். வளர வளர பற்கள் வளரத் தொடங்குகின்றன. ஆனால் சில குழந்தைகள் பிறக்கும் போது பற்களுடன் பிறப்பதைக் கேட்டிருப்போம். இருப்பினும், இதுப்போன்ற வழக்குகள் மிகக்குறைவு.

நன்கு வளர்ந்த மனிதனின் வாயில் மொத்தம் 32 பற்கள் உள்ளன. ஆனால் பல காரணங்களால் பற்களின் எண்ணிக்கை குறையக்கூடும். பண்டைய சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரின் செல்வ வளத்தை உடல் பண்புகளின் அடிப்படையில் கணிக்க முடியும். அந்த வகையில் ஒருவருக்கு இருக்கும் பற்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர் அதிர்ஷ்டசாலியா என்பதை அறியலாம்.

பலருக்கு 32 பற்கள் இருப்பதில்லை
ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ, உலகில் உள்ள பலர் 32 பற்கள் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி முழு பற்களும் இல்லாத மக்களின் மனதில் பல்வேறு கேள்விகள் எழத் தொடங்குகின்றன. இப்போது நாம் பற்கள் தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்களைத் தான் காணப் போகிறோம்.

32 பற்கள் எதைக் குறிக்கிறது?
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, 32 பற்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகையவர்கள் உண்மையை நம்புபவர்கள் மற்றும் பொய்யில் இருந்து விலகி இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல், 32 பற்களைக் கொண்டவர்களின் வாயில் இருந்து வெளிவரும் விஷயங்கள், அது நல்லதோ அல்லது கெட்டதோ, அப்படியே நடக்கும் என்று கூறப்படுகிறது.

31 பற்கள்
32 பற்களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம். ஆனால் 31 பற்களைக் கொண்டவர்கள், ஆடம்பரத்தைப் பொறுத்தவரை மிகவும் புத்திசாலிகள்.

30 பற்கள்
30 பற்களைக் கொண்டவர்களின் நிதி நிலைமை எப்போதும் நன்றாகவே இருக்கும். இவர்களிடம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இத்தகையவர்களுக்கு பண விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.

29 மற்றும் 28 பற்கள்
29 பற்களை மட்டுமே கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அதேப்போல் 28 பற்களைக் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. அதாவது 28 பற்களைக் கொண்டிருப்பவர்களை அதிர்ஷ்டமற்றவர்கள் என்று கூறலாம்.

பற்களின் அளவு என்ன சொல்கிறது?
ஒருவரது அதிர்ஷ்ட விஷயத்தில் பற்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்தோம். இப்போது பற்களின் வடிவத்தைப் பற்றி அறிவோம். கழுதைகள், கரடிகள், குரங்குகள் அல்லது எலிகளைப் போன்ற பற்களைக் கொண்டவர்கள், மிகவும் செல்வந்தர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இவர்களின் கெட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தை காரணமாக, செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள்.



Click it and Unblock the Notifications
