Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
மார்ச் 9 மற்றும் 10 ஆம் தேதி இந்த ராசிக்காரங்களுக்கு ரொம்பவும் மோசமான நாட்களாக இருக்கப் போகுது...
பஞ்சாங்கத்தின் படி, மார்ச் 9 மற்றும் மார்ச் 10 ஆம் தேதியில் ரிஷப ராசியில் ராகு மற்றும் சந்திரன் சேர்க்கை உருவாகிறது. இது மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மார்ச் மாத கிரக நிலைகளால் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒருசில மாற்றங்கள் நிகழவுள்ளன. கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அவ்வாறு மாற்றும் போது ஒருசில கிரக சேர்க்கைகள் நிகழ்ந்து, அதன் விளைவால் சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறுவார்கள்.

பஞ்சாங்கத்தின் படி, மார்ச் 9 மற்றும் மார்ச் 10 ஆம் தேதியில் ஒரு முக்கிய நிகழ்வு நிகழ்கிறது. இது மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த இரண்டு நாட்களில் ரிஷப ராசியில் ராகு மற்றும் சந்திரன் சேர்க்கை உருவாகிறது. இது 12 ராசிகளையும் பாதிக்கும். இப்போது ரிஷப ராசியில் ராகு சந்திர சேர்க்கையால் 12 ராசிகளும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே இக்காலத்தில் தைரியமின்றி இருக்கலாம். அக்கம் பக்கத்தினருடனான உறவுகள் பாதிக்கப்படலாம். உங்கள் உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மொத்தத்தில், ராகு சந்திர சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் ராகு சந்திர சேர்க்கை நடப்பதால், இந்த ராசியில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். இக்காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணியிடத்தில் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் காதல் உறவு மற்றும் படிப்பில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். காதலிப்பவர்கள் தங்கள் துணையைப் பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! நீங்கள் கடன் வாங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சரியானது அல்ல என்பதால் அதை இப்போதைக்கு தவிர்த்திடுங்கள். நாள்பட்ட நோய் ஏதேனும் இருந்தால், அதை உடனே கவனியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். வாழ்க்கைத் துணையின் வார்த்தைகளை அலட்சியம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வேலை செய்வது கடினமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுப்பாக இருப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் நண்பனுக்கும் எதிரிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இக்காலத்தில் உங்கள் மனம் சொல்வதைப் போல் நடந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களின் திட்டங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! அலுவலகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் சவால்கள் உங்கள் இலக்குகளை திசைத்திருப்ப முயற்சிக்கும். எக்காரணம் கொண்டும் உங்கள் இலக்கை கைவிடாதீர்கள். பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இக்காலத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற முழு பலனையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யாரையும் கண்மூடித்தனமாக நம்பி சிக்கலில் சிக்கிவிடாதீர்கள். கவனமாக இருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! உங்கள் ராசியில் சனி, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்துள்ளன. இதனால் முக்கியமான பணிகளை முடிப்பது கடினமாக இருக்கும். உங்கள் மனம் கலங்கும். அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசியில் குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் இணைந்துள்ளன. இதனால் இக்காலத்தில் உங்கள் மரியாதை குறையலாம். உங்களின் திட்டங்கள் தோல்வியடையலாம். இக்காலத்தில் பொறுமை காத்தால் நல்லது நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! ராகு சந்திரன் சேர்க்கையால் மற்றவர்களுடன் இனிமையாக பேச முயற்சி செய்யுங்கள். மோசமான பேச்சால் உங்கள் வேலை கெட வாய்ப்புள்ளது. பண இழப்பும் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications