Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சூரிய கிரகண நாளில் 4 கிரகங்களின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது!
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது 4 கிரகங்களின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பண பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதி நிகழ்கிறது. பொதுவாக கிரகணங்கள் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. அதுவும் இந்த சூரிய கிரகணம் நிகழும் போது சூரியன் துலாம் ராசியில் இருப்பார். ஏற்கனவே இந்த ராசியில் சூரியனைத் தவிர, சுக்கிரன், கேது மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களும் பயணிக்கின்றன. எனவே இந்த சூரிய கிரகணத்தின் போது துலாம் ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது.

கிரகணங்களால் நற்பலன்கள் அதிகம் கிடைக்காவிட்டாலும், இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது 4 கிரகங்களின் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் அதிக பண பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இக்காலத்தில் உங்களின் பணி வெற்றிகரமாக முடிக்கப்படும். நிலுவையில் உள்ள பணிகளும் முடிவுக்கு வரும் மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். சிலரது நிதி நிலை வலுவாகும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். புதிய வாகனம், நிலம், வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், இக்காலத்தில் ஒரு முடிவை எடுப்பீர்கள். மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து பரிசுகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே இக்காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். ஆனால் கிரக நிலைகளால் நல்ல நிதி பலன்களைப் பெறுவீர்கள். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் இளைய உடன்பிறப்புக்களால் நற்பலனைப் பெறுவீர்கள். இக்காலகட்டத்தில் உங்களின் நடத்தையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இதனால் உங்களின் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பல வழிகளில் இருந்து நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள் வெற்றி பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும். இக்காலகட்டத்தில் புதிய நண்பர்களை பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். முந்தைய முதலீடுகளால் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களையே பெறுவார்கள். இருப்பினும் நற்பலன்களும் கிடைக்கும். ஆனால் எதிரிகளிடம் சற்று கவனமாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் போட்டியாளர்கள் உங்களின் வேலையை கெடுக்க முயற்சிப்பார்கள். இக்காலகட்டத்தில் திட்டமிட்டு எந்த வேலையை செய்தாலும் நற்பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க வேண்டும். வறுத்த உணவுகள் மற்றும் வெளி உணவுகளைத் தவிர்க்கவும். மொத்தத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், முன்னேற்றதைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications