Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்… நீங்களே ஆச்சிரியப்படுவீங்க…
மனிதர்களை போல சிம்பன்சி துணி துவைப்பதை பார்த்து ஆச்சிரியப்பட்டனர்.
சீனாவின் உள்ள ஒரு பூங்காவில் 18 வயதான சிம்பன்சி யுஹுய் துணி துவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சமூக ஊடகங்களில் பலரால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. சீனாவில் மட்டும் ஒரு மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். சில வித்தியாசமான நடவடிக்கைகள் அல்லது மிருகங்கள் எதாவது வித்தியாசமாக செய்யும்போது, அது வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்படுவது ட்ரெண்டாக உள்ளது.

ஹாஷ்டேக் அல்லது வீடியோ போன்றவை ஒரே நாளில் உலக அளவில் ட்ரெண்டில் இடம் பிடிக்கப்பட்டுவிடும் எடுத்துக்காட்டாக ப்ரே ஃபார் நேசமணி ஹாஷ்டேக் மற்றும் குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள் இந்த வரிசையில் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது சிம்பன்சியின் வீடியோ வைராலாகி கொண்டிருக்கிறது.

சிம்பன்சி யுஹுய்
சீனா நாட்டின் சோங்கிங்கில் உள்ள லெஹ் லெடு தீம் பூங்காவில் வசித்து வருகிறது 18 வயதான சிம்பன்சி. சிம்பன்சியின் பெயர் யுஹூய். யுஹூயின் பாதுகாப்பாளரான சூ தான் துணிகளைத் துவைக்கும்போது சிம்பன்சி நன்றாகக் கவனித்து பார்க்கும் என்று கூறினார். ஆதலால், தான் செய்த வேலையைச் சிம்பன்சி திரும்பச் செய்கிறதா என்பதை பார்க்கச் சட்டை மற்றும் சோப்பினை வைத்துச் சென்றுள்ளார் சூ.

துணிதுவைத்த சிம்பன்சி
பின்னர், துணிதுவைக்கும் இடத்திற்குச் சென்ற சிம்பன்சி அங்கிருந்த பாதுகாப்பாளரின் வெள்ளை நிற சட்டையை எடுத்து சோப்பு போட்டுத் துவைத்தது. அதைதொடர்ந்து, கைகளால் துணியை நன்றாகத் தேய்த்து தண்ணீரில் அலசி துவைத்தது. இதை மறைவாகப் பார்த்துக்கொண்டிருந்த சூ ஆச்சிரியமான இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்தார்.

வைரலான வீடியோ
இந்த வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பதிவிட்ட சில நேரங்களிலேயே ஆன்லைனில் இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டது. இந்த விடியோவை பார்க்கும் அனைவருக்கும் மனிதர்களைப் போல சிம்பன்சி துணி துவைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். இணையத்தில் பலரையும் மகிழ்வித்துள்ள இந்த வீடியோ சீன சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

கற்பிக்கவில்லை
பொதுவாக குரங்கு அல்லது நாய் போன்ற விலங்குகளுக்கு நாம் எதாவது ஒரு செயலை கற்றுக்கொடுத்தால், கற்றுக்கொண்டு செய்யும். இது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், "சிம்பன்சிக்கு ஒருபோதும் நான் கற்பிக்கவில்லை. அது நான் செய்வதை இடைவிடாமல் கவனித்தது. பின்னர், அது தானாகத் துணி துவைத்தது. சிம்பன்சி இவ்வாறு செய்ததைப் பார்த்ததும் நான் வியந்து போனேன்." என்று கூறினார் சூ.

மனிதர்களின் நடவடிக்கை
யுஹூய் குரங்கு மிகவும் ஆர்வமிக்க குணம் கொண்டது என்றும் எந்த செயலையும் பார்த்ததும் பின்பற்றக்கூடியது என்று மிருகக்காட்சி சாலையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். சிம்பன்சிகளும் மனிதர்களும் ஒரே இனத்திலிருந்து உருவானவர்கள்தான் என்று கூறப்படுகிறது. சிம்பன்சியின் டி.என்.ஏவில் சுமார் 96 சதவீதம் மனிதர்களுடைய நடவடிக்கைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications