Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இதுல ஒரு ஜன்னலை செலக்ட் பண்ணுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்...
வினாடி வினாவில் ஒவ்வொரு ஜன்னலும் ஒவ்வொரு குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது, பின்வரும் ஐந்து ஜன்னல்களில் ஒரு ஜன்னவை தேர்வு செய்து, உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பெரும்பாலானோருக்கு உளவியல் சோதனைகளை செய்து பார்க்க பிடிக்கும். ஏனெனில் இந்த வகையான சோதனைகள் நம்மைப் பற்றி நமக்குத் தெரியாத ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. பொதுவாக நாம் அனைவருமே நம்மைப் பற்றி முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. இதனால் நம்முள் இருக்கும் பல விஷயங்களை நாம் அறியாமல் வாழ்ந்து வருகிறோம். ஆனால் சில சூழ்நிலைகளில் நம்முள் புதைந்துள்ள விஷயங்கள் வெளிவந்து நம்மை ஆச்சரியப்படுத்தும். நம்மை நாமே புரிந்து கொள்ள சில வினாடி வினா உதவுகிறது. கீழே ஒரு வினாடி வினா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் ஆழ் உணர்வு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் ஒருவரின் குணாதிசயம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டது.

இந்த வினாடி வினாவில் ஒவ்வொரு ஜன்னலும் ஒவ்வொரு குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது, பின்வரும் ஐந்து ஜன்னல்களில் ஒரு ஜன்னவை தேர்வு செய்து, உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஜன்னல் 1
நீங்கள் மற்றவர்களுடன் நன்கு பழகுவீர்கள். உங்களிடம் தலைமைத்துவ குணங்கள் இருக்கும். எதையும் கணக்கிட்டு சரியாக செயல்படக்கூடியவர். உங்களுக்கு முதலாளியாக இருக்கப் பிடிக்காது. உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் ஒருபோதும் வெட்கப்படமாட்டீர்கள். நேர்மையானவர்கள் மற்றும் பரஸ்பரம் உள்ளவர்கள்.

ஜன்னல் 2
நீங்கள் ஒரு வீட்டுப் பறவை. குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். வேலையில் சற்று போட்டித்தனம் கொண்டவர்கள். ஆனால் குடும்பத்திற்கே முன்னுரிமை அளிப்பீர்கள். இப்போதைய வாழ்க்கையை ரசித்து வாழ்வீர்கள். உங்களுக்கு எல்லாவற்றையும் எப்படி சிறப்பாகச் செய்வது என்று நன்கு தெரியும். உங்கள் சக ஊழியர்களும் நண்பர்களும் உங்களை கண்ணியமானவர், நேர்மையானவர் மற்றும் உணர்திறன் உடையவர் என்று அறிவார்கள். மறுபுறம் நீங்கள் மிகவும் சென்சிடிவ்வானவர். இது சில நேரங்களில் உங்களுக்கு எதிராக செல்லலாம்.

ஜன்னல் 3
இந்த ஜன்னலை தேர்ந்தெடுத்தவர் ஒரு சுதந்திரப் பறவை மற்றும் சமூகத்தின் விதிமுறைகளுக்கு இணங்காதவர். வாழ்வின் பெரும்பகுதியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் மற்றும் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதில் கைதேர்ந்தவர். நீங்கள் மிகவும் ஒழுக்கமானவர் மற்றும் உங்களின் பேச்சுத்திறன் மற்றும் புத்திசாலித்தனம் மற்றவர்களை கவரும் வண்ணம் இருக்கும். நீங்கள் விசுவாசமானவர் மற்றும் அதே விசுவாசதத்தை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்ப்பீர்கள்.

ஜன்னல் 4
இந்த ஜன்னலை தேர்வு செய்தவர்கள் ஒரு சிக்கலான லட்சியவாதி, அசாதாரணமான, படைப்பாற்றலைக் கொண்டவர்கள். சென்சிடிவ்வானவர்கள். இதயத்தில் உண்மையான காதலைக் கொண்டவர்கள். தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர் மற்றும் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர்.

ஜன்னல் 5
நீங்கள் வெளிப்படையாக பேசமாட்டீர்கள் மற்றும் எப்போதும் தனித்து இருக்க விரும்புவீர்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்தவாறு வாழ்க்கையை அனுபவிக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு தூய ஆன்மா மற்றும் பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களை உங்களுக்கு பிடிக்காது. பல முக்கியமான விஷயங்களை மறந்துவிடுவீர்கள். இதற்கு சிறந்த தீர்வு, முக்கியமான விஷயங்களை மறக்காமல் இருக்க, ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு கொண்டு செல்வது தான்.



Click it and Unblock the Notifications
