Latest Updates
-
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்..
நீங்க பிறந்த வருஷத்தை சொல்லுங்க.. சீன ஜோதிடத்தின் படி, 2022 உங்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் 2022 சீன புத்தாண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி பிறக்கிறது. இந்த ஆண்டிற்கான விலங்கு நீர் புலி ஆகும்.
இந்திய ஜோதிடத்தைப் போலலே சீன ஜோதிடமும் பிரபலமானது. புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த ஜோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். இந்திய ஜோதிடத்தில் எப்படி 12 ராசிகள் உள்ளதோ, அதேப் போல் சீன ஜோதிடத்தில் 12 மிருக அடையாளங்கள் உள்ளன. சுருக்கமாக கூற வேண்டுமானால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஜாக்கிசான் என்னும் கார்டூன் தொடரில் காட்டப்பட்டும் 12 மந்திரக்கற்கள் தான் அந்த 12 சீன அடையாளங்கள். அந்த அடையாளங்களாவன எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி போன்றவை.

12 விலங்குகள் மற்றும் 5 மூலங்கள் (மரம், நெருப்பு, உலோகம், நீர், பூமி) சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருட சக்கரத்தின் அடிப்படையில் சீன ஜோதிடம் கணிக்கப்படுகிறது. இந்த ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு விலங்கின் பெயரையும் 12 சீன ஆண்டுகளுக்கு புத்தர் வைத்தார். இதனாலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. மேலும் சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் 2022 சீன புத்தாண்டு பிப்ரவரி 01 ஆம் தேதி பிறக்கிறது. இந்த ஆண்டிற்கான விலங்கு நீர் புலி ஆகும்.
சரி, ஒருவரது சீன விலங்கின் அடையாளத்தை எப்படி அறிவது என்று கேட்டால், நீங்கள் பிறந்த வருடத்தைக் கொண்டு தான் அறிய முடியும். கீழே 12 சீன விலங்கின் அடையாளமும், 2022 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் எனவும் கொடுக்கப்பட்டுள்ளன. சீன ஜோதிடத்தின் படி, உங்களுக்கு 2022 எப்படி இருக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எலி ( பிறந்த வருடம் - 2020, 2008, 1996, 1984, 1972, 1960, 1948, 1936, 1924)
இந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தின் ஆண்டாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் சற்று அலைச்சல் ஏற்படும். வணிகப் பயணங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு அதிக லாபம் தரும். இந்த ஆண்டு அதிக செலவு செய்வதைத் தவிர்த்து, உங்கள் நிதியைக் கட்டுக்குள் வைத்திருங்கள். திருமணமான தம்பதிகள் மற்றும் காதலர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும்.

எருது (பிறந்த வருடம் - 2021, 2009, 1997, 1985, 1973, 1961, 1949, 1937, 1925)
இந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கும், காதலர்களுக்கு சாதகமாக இருக்கும். செலவுகள் சீராக இருக்கும் மற்றும் நல்ல முதலீடுகளை செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அது நீண்ட காலத்திற்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பரபரப்பான வேலையில் இருந்து சற்று ஓய்வெடுத்து, உங்கள் அன்புக்குரியவர்களுடன் சற்று நேரத்தை செலவிடுங்கள்.

புலி (பிறந்த ஆண்டு - 2022, 2010, 1998, 1986, 1974, 1962, 1950, 1938, 1926)
இந்த ஆண்டு இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் சாதகமான ஆண்டாக இருக்கும். உங்களின் அனைத்து இலக்குகளும் அடைய தயாராக இருக்கும். காதல் வாழ்க்கை மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள், தங்கள் கடின உழைப்பிற்காக உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். பண வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்கள் குடும்பத்துடன் விடுமுறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

முயல் (பிறந்த ஆண்டு - 2023, 2011, 1999, 1987, 1975, 1963, 1951, 1939, 1927)
இந்த அடையாளத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் இந்த ஆண்டில் நிச்சயம் ஏற்படும். வணிகம் நிலையானதாக இருக்கும். ஆண்டு முழுவதும் நிதி நிலைமை சீராக இருக்கும். புதிய காதல் மற்றும் உறவுகளுக்கு இந்த ஆண்டு சாதகமானது. இருப்பினும், எதிர்காலத்திற்காக அதிக செலவு செய்வதைத் தவிர்த்து, சேமிப்புகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் இருமடங்கு நன்றாக இருக்கும். அதுவும் தங்களை தாங்களே நன்று கவனித்துக் கொள்பவர்கள் ஆண்டு முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

டிராகன் (பிறந்த வருடம் - 2024, 2012, 2000, 1988, 1976, 1964, 1952, 1940, 1928)
இந்த அடையாளத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டில் தனிப்பட்ட உறவுகள் நிச்சயமற்றதாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். வணிகர்களுக்கு ஓரளவாகவே இருக்கும். பணியிடத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு லாபகரமான சலுகை கிடைக்கும். வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளை தவறவிடாதீர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் உடற்பயிற்சியை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

பாம்பு (பிறந்த வருடம் - 2025, 2013, 2001, 1989, 1977, 1965, 1953, 1941, 1929)
இந்த ஆண்டு நிதி வளர்ச்சி, பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் உணர்ச்சிமிக்க உறவுகளுக்கு சாதகமான ஆண்டாகும். இருப்பினும், திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் தவறான புரிதலை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலைப் பொறுத்தவரை சிலருக்கு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும், மற்றவர்கள் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை மேம்படுத்தும் லாபகரமான வணிக திட்டங்களை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சிறு பிரச்சனையையும் புறக்கணிக்காதீர்கள்.

குதிரை (பிறந்த வருடம் - 2026, 2014, 2002, 1990, 1978, 1966, 1954, 1942, 1930)
இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு சாதனைகளை புரிவார்கள் மற்றும் அற்புதமான காதல் அனுபவங்களை அனுபவிப்பார்கள். குடும்பத்தில் சிரமங்களை சந்தித்து வந்தவர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள். வியாபாரத்தில் மேற்கொண்ட அனைத்து கடின உழைப்பும் இறுதியாக உங்களுக்கு பலனளிக்கும். இந்த ஆண்டு வருமானம் சீராக இருக்கும். உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துமாறும், வழக்கமான உடல் பரிசோதனைகளைத் தவறவிடாமல் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆடு (பிறந்த வருடம் - 2027, 2015, 2003, 1991, 1979, 1967, 1955, 1943, 1931)
இந்த அடையாளத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். ஆனால் அது கடந்த காலத்தில் உங்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளைப் பொறுத்தது. இந்த ஆண்டு நேர்மறையாக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும். செல்வத்திற்கு இந்த ஆண்டு சாதகமானது அல்ல. இருப்பினும், பணியிடத்தில் ஊதிய உயர்வால் நிதி நிலைமை சற்று மேம்படலாம். ஆரோக்கியம் சாதகமாக இருக்கும்.

குரங்கு (பிறந்த வருடம் - 2028, 2016, 2004, 1992, 1980, 1968, 1956, 1944, 1932)
இந்த அடையாளத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமானதாக இருக்கும். நேர்மறையான தொழில்முறை மாற்றங்கள் மற்றும் ஆக்கபூர்வமான சாதனைகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு காதல் வாழ்க்கை புதுமையையும் உற்சாகத்தையும் தரும், மற்றவர்களுக்கு, புதிய உறவு பகையில் முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். அதேப் போல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சேவல் (பிறந்த வருடம் - 2029, 2017, 2005, 1993, 1981, 1969, 1957, 1945, 1933)
இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்களின் தொழில் வாழ்க்கை இருமடங்கு முன்னேற்றத்தைக் காணும். காதல் வாழ்க்கை எந்த மாற்றமும் இல்லாமல் சீராக ஓடும். நீங்கள் எதிலும் ரிஸ்க் எடுக்காதவர் என்பதால் கடந்த ஆண்டின் பலனையே பெறுவீர்கள். தொழிலதிபர்கள் ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள். ஆண்டின் முதல் பாதியில் நிதி நிலைமை சாதகமற்றதாக இருக்கும். இருப்பினும் இரண்டாம் பாதியில் சிறப்பாக இருக்கும். நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடித்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

நாய் (பிறந்த வருடம் - 2030, 2018, 2006, 1994, 1982, 1970, 1958, 1946, 1934)
இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான ஆண்டாகும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். நிதி நிலையில் கடுமையான மாற்றங்கள் இருக்காது. மேலும் நிதி நிலைமை ஆண்டு முழுவதும் சீராக இருக்கும். அதிகப்படியான மன அழுத்தம் அல்லது உடல் அழுத்தத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அது ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பன்றி (பிறந்த வருடம் - 2031, 2019, 2007, 1995, 1983, 1971, 1959, 1947, 1935)
இந்த அடையாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆண்டு சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். வணிகர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு சாதகமான ஆண்டு. உங்கள் காதல் வாழ்க்கை செழிக்க உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். நிதி நிலை இந்த ஆண்டு சீராக இருக்கும். முதலீடுகளை செய்வதற்கு இது சிறந்த ஆண்டு. இந்த ஆண்டில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வழக்கமான உடல் பரிசோதனைகளைத் தவறவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications











