For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன சாஸ்திரத்தின் படி இந்த இடத்தில் மச்சம் இருக்கும் ஆண்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்...!

|

இந்த உலகின் மிகப்பெரிய அதிசயம் என்றால் அது மனித உடல்தான். நாம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு வேலையும் ஒரு மைக்ரோ வினாடியில் நமது மூளையில் இருந்து நமது உறுப்புகளுக்கு கட்டளையிடப்பட்டு நடத்தப்படுகிறது. மனித மூளையின் வேகத்திற்கும், ஆற்றலுக்கும் எதுவும் ஈடாகாது. நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது என்று சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது.

மனிதர்கள் பிறக்கும் போதே இருக்கும் மச்சங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருக்கும் மச்சங்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. மச்சங்களின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டியது என்பது நமது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த பதிவில் ஆண்களின் உடலில் இருக்கும் மச்சங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மச்சத்தின் நிறம்

மச்சத்தின் நிறம்

பண்டையகால சீன முகவாசிப்பு ஜோதிடத்தின் படி தூய சிவப்பு அல்லது அடர் கருப்பு நிறத்தில் நல்ல பிரகாசத்துடன் கூடிய வட்டமான மிகவும் அதிர்ஷ்டமானவை. இந்த வகை மச்சங்கள் மன்னர்களிடம் காணப்படும். சாம்பல் நிற, பழுப்பு நிற மற்றும் மஞ்சள் நிற மச்சங்கள் துரதிர்ஷ்டமானவை என்று கூறப்படுகிறது. சிவப்பு மச்சங்கள் வெளிப்படையான இடத்தில் இருப்பதும், கருப்பு மச்சங்கள் மறைவான இடத்தில் இருப்பதும் அதிர்ஷ்டமானதாகும்.

முடியுடன் இருக்கும் மச்சங்கள்

முடியுடன் இருக்கும் மச்சங்கள்

சிலருக்கு அடர்த்தியான மற்றும் கருப்பு முடி கொண்ட மச்சங்கள் இருக்கும் இது மிகவும் அரிதான ஒன்று. மச்சங்களில் ஏன் முடி இருக்கிறது? மச்சங்களில் முடி இருப்பது அதிர்ஷ்டானதா? என்ற கேள்விகளுக்கு சீன ஜோதிடத்தில் இது மிகவும் அதிர்ஷ்டமானது என்று கூறப்படுகிறது.

தலையில் மச்சம்

தலையில் மச்சம்

தலையில் மச்சம் இருப்பவர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். தலையில் முடி இருக்கும்போது இந்த வகை மச்சங்களை கண்டுபிடிப்பது என்பது கடினமான ஒன்றாகும். இந்த வகை மச்சங்கள் துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றக்கூடிய ஆற்றல் உடையது.

MOST READ:இந்த இசைக்கருவில ஏதாவது ஒண்ணு செலக்ட் பண்ணுங்க நீங்க உண்மையா எப்படிப்பட்டவங்கனு தெரிஞ்க்கோங்க...!

நெற்றியில் மச்சம்

நெற்றியில் மச்சம்

இந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் சராசரி வாழ்வை வாழ்வார்கள். இவர்கள் பலவீனமான உறவு, சொந்த ஊரிலிருந்து விலகி இருப்பது, மேலதிகாரிகளிடம் இருந்து குறைவான ஆதரவு என கடினமான வாழ்க்கையை வாழ்வார்கள். நெற்றியின் மையத்தில் மச்சம் இருந்தால் அது மன முதிர்ச்சியைக் குறிக்கிறது, பண விஷயத்தில் பஞ்சமிருக்காது, வாழ்க்கையின் பிற்பகுதி அமைதியாக இருக்கும். பெண்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அது செல்வத்திற்கான நல்ல அதிர்ஷ்டத்தையும் காதல் உறவில் பின்னடைவையும் குறிக்கிறது.

கன்னத்தில் மச்சம்

கன்னத்தில் மச்சம்

கன்னத்தில் மச்சம் இருக்கும் ஆண்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் பாஸிட்டிவானவர்களாக இருப்பார்கள் தனது இலட்சியங்களை அடைய இவர்களுக்கென சொந்த வழி இருக்கும். மற்றவர்களுடன் பழகும்போது, அவர்கள் எப்போதாவது மற்றவர்களின் மனதைக் கருத்தில் கொண்டு சுயநலமாக இருக்கிறார்கள், இதனால் ஒருவருக்கொருவர் உறவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வகையான மச்சம் கொண்டவர்கள் சுற்றியிருப்பவர்களால் விரும்பப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.

புருவங்களுக்கு இடையில் மச்சம்

புருவங்களுக்கு இடையில் மச்சம்

புருவங்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி என்பது ஒருவரின் எதிர்காலத்தைக் குறிப்பதாகும், இது ஒருவரின் தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் குறிக்கிறது. இந்த இடத்தில் மச்சம் இருப்பது சிறந்த வாழ்க்கையை குறிக்கிறது. அதேசமயம் இந்த இடத்தில் இருண்ட துரதிர்ஷ்டமான மச்சம் இருக்கும் ஆண்கள் திருமண வாழ்வில் பல சோதனைகளை சந்திப்பார்கள். நல்ல அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், அத்தகைய மோல் உள்ளவர்கள் அலட்சியத்தால் ஏற்படும் துரதிர்ஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள்.

MOST READ:நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒளிந்திருக்கும் விபரீதம் என்ன தெரியுமா?

 புருவத்தில் மச்சம்

புருவத்தில் மச்சம்

புருவத்தின் மீது மச்சம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது, இது செல்வம் மற்றும் நீண்ட ஆயுளை குறிக்கிறது. இந்த வகை ஆண்கள் பொறுப்பானவர்களாகவும், கனிவானவர்களாகவும், எப்போதும் உற்சாகமானவராக இருப்பவராகவும் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து இவர்களுக்கு எப்போதும் உதவி கிடைக்காது.

மேல் கண்ணிமை

மேல் கண்ணிமை

மேல் கண்ணிமையில் மச்சம் இருப்பவர்கள் பொதுவாக ஒரே இடத்தில் வசிப்பவராக இருக்க மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை விரும்புபவராக இருப்பார்கள். இவர்கள் தனக்கு வரும் துரதிர்ஷ்டத்தைக் கூட அதிர்ஷ்டமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மூக்கில் மச்சம்

மூக்கில் மச்சம்

மூக்கின் மேல் மச்சம் கொண்ட ஆண்கள் பொதுவாக அற்பமான ஆளுமையை கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள், இவர்கள் சறுக்கல் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இது தொழில் வளர்ச்சியை பாதிக்கும். அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை எளிதில் வென்றெடுக்க முனைகிறார்கள், நிலையற்ற பொருளாதார நிலைமைகளைக் கொண்டுள்ளனர். நடுத்தர வயதிற்குப் பிறகு, இவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவார்கள்.

MOST READ:வாஸ்துசாஸ்திரத்தின் படி நீங்கள் பர்ஸில் வைக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு தீரா வறுமையை ஏற்படுத்தும்

மேல் உதட்டில் மச்சம்

மேல் உதட்டில் மச்சம்

மேல் உதட்டில் மச்சம் இருக்கும் ஆண்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள், எப்போதும் மற்றவர்களுக்காக சிந்திப்பார்கள். இதனால் இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். நல்ல வேலை, நல்ல சூழல் என இவர்களை சுற்றி நேர்மையான விஷயங்கள் நிறைய இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 கீழ் உதட்டில் மச்சம்

கீழ் உதட்டில் மச்சம்

கீழ் உதட்டில் ஒரு மச்சம் உள்ளவர்கள் குடும்பம் சார்ந்தவர்கள் மற்றும் சமைப்பதில் வல்லவர்கள். சாப்பிடுவதில்ஆர்வமாக இருப்பதால், இவர்கள் நல்ல உணவை சுவை அறிந்து சொல்வதில் வல்லவர்களாக இருக்கக்கூடும், ஆனால் பொதுவாக பிஸியான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருப்பார்கள். காதலை பொறுத்தவரையில் இவர்களை பல பேர் காதலிக்க தயாராய் இருப்பார்கள்.

MOST READ:உடலுறவின் போது ஆண்கள் மனதில் எழும் கிறுக்குத்தனமான கேள்விகள் என்ன தெரியுமா?

காதில் மச்சம்

காதில் மச்சம்

காதில் மச்சம் இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். இத்தகைய மச்சம் உள்ள ஆண்கள் புத்திசாலிகளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் அனைத்தும் இவர்களுக்கு எளிதில் கிடைக்கும், எதிர்காலத்தில் இவர்கள் தனிப்பட்டரீதியில் அதிக செல்வத்தை குவிப்பார்கள். இதுவே மோசமான வகை மச்சமாக இருந்தால் இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chinese Facial Mole Reading

Read to know about chinese facial mole reading and what it tells about your future
Story first published: Tuesday, February 4, 2020, 12:14 [IST]
Desktop Bottom Promotion