For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தை உறைய வைக்கும்படி கொடூரமாக கொலை செய்த குழந்தை சீரியல் கில்லர்கள்..பலவீனமானவங்க படிக்காதீங்க!

|

சீரியல் கில்லர் என்ற கேட்டவுடன், நம்மை அறியாமலே நமக்கு ஒரு பயம் ஏற்படும். இந்த கொலையாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அசாதாரண உளவியல் திருப்திக்காக தொடர் கொலைகளை செய்வதாக கூறப்படுகிறது. அதனால், அந்நியமான நபர்களை பார்க்கும்போதும், சிலர் நடத்தைகளில் வித்தியாசம் காணும்போது, நம் பாதுகாப்பை நினைத்து அச்சம் கொண்டிருப்போம். சீரியல் கில்லர் என்றால், நல்ல வாட்ட சாட்டமான பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆனால், இங்கு சிறுவர் மற்றும் சிறுமிகள் கூட மிக கொடூரமான முறையில் கொலை செய்த குழந்தை சீரியல் கில்லராக இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆம், ​​உலகில் குழந்தை தொடர் கொலையாளிகள் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சீரியல் கில்லர் நோக்கங்களில் கோபம், ஆத்திரம், சிலிர்ப்பு தேடுதல், நிதி ஆதாயம் மற்றும் கவனத்தைத் தேடுதல் ஆகியவை அடங்கும். கொலைகளை இதேபோல் செய்ய முயற்சிக்கலாம் அல்லது முடிக்கப்படலாம். உலகம் முழுவதும் 8 வயது முதல் 17 வயது வரை பல கொலைகளை கொடூரமாக செய்து தண்டனை பெற்ற குழந்தை சீரியல் கில்லர்களை பற்றி இக்கட்டுரையை தெரிந்துகொள்ளுங்கள். தன்னுடைய சொந்த குடும்பத்தையும், பிறந்த குழந்தைகளையும் எப்படி இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்தார்கள் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமர்தீப் சதா - 8 வயது

அமர்தீப் சதா - 8 வயது

உலகின் மிக இளைய சீரியல் கில்லர் அமர்தீப் சதா. இவன் 1998 இல் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முஷாஹர் கிராமத்தில் பிறந்தார். தன்னுடைய 8 வயதில் 3 குழந்தைகளை இரக்கமில்லாமல் கொன்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரின் 6 மாத குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டதன் மூலம் அவர் செய்த மூன்று கொலைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. அமர்தீப் தனது உடன் பிறந்த எட்டு மாத சகோதரி, பிறந்து ஆறு மாதமான உறவினர் ஒருவரின் குழந்தையையும் கொலை செய்துள்ளார்.

மேரி பெல் - 11 வயது

மேரி பெல் - 11 வயது

இங்கிலாந்து நாட்டின் கார்பிரிட்ஜ் பகுதியில் 1957ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி பிறந்தார் மேரி பெல். 1968 இல் மேரி ஃப்ளோரா பெல், தனது பதினொன்றாம் வயதில், நியூகேஸில்-அன்-டைனில் இரண்டு சிறுவர்களைக் கொன்றார். இந்த செய்தி இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுதான் அப்போது தலைப்புச் செய்தியாகவும் இருந்தது. பெல் தனது முதல் கொலையை பத்து வயதில் செய்தாள். இரண்டு கொலை செய்த சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டவரிடம் அவர்களுக்கு தொண்டை வலி இருப்பதாகவும், கழுத்தை நெரிக்கும் முன் மசாஜ் செய்வதாகவும் கூறி, கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அவளால் கொல்லப்பட்டவர்கள் நான்கு வயது மார்ட்டின் பிரவுன் மற்றும் மூன்று வயது பிரையன் ஹோவ்.

ஜாஸ்மின் ரிச்சர்ட்சன் - 12 வயது

ஜாஸ்மின் ரிச்சர்ட்சன் - 12 வயது

ஏப்ரல் 2006 இல் கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள மெடிசின் ஹாட்டில் ரிச்சர்ட்சன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளை குடும்பத்தின் 12 வயது மகளான ஜாஸ்மின் ரிச்சர்ட்சன் மற்றும் அவரது 23 வயது காதலன் ஜெர்மி ஸ்டீன்கே ஆகியோரால் திட்டமிட்டு செய்யப்பட்டது. அதிக வயது மூத்தவரோடு ஜாஸ்மின் டேட்டிங் செய்ததற்காக அவரது பெற்றோர் அவளைத் தண்டித்தனர். அந்த உறவுக்கு மறுப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ஜாஸ்மினின் தன்னுடைய பெற்றோர் மற்றும் 8 வயதான தனது இளைய சகோதரனையும் கொடூரமாக கொலை செய்தாள்.

 கிரேக் சாண்ட்லர் விலை - 13 வயது

கிரேக் சாண்ட்லர் விலை - 13 வயது

கிரேக் சாண்ட்லர் பிரைஸ் ஒரு அமெரிக்க தொடர் கொலையாளி. 1973இல் ரோட் தீவின் வார்விக் பகுதியில் பிறந்த கிரேக், தனது 13 முதல் 15 வரையிலான வயதில் 4 கொலைகளை கொடூரமாக செய்துள்ளார். 1989 இல், ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, இரண்டு வருடங்கள் கழித்து மற்றொரு பெண்ணையும் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

மைக்கேல் ஹெர்னாண்டஸ் - 14 வயது

மைக்கேல் ஹெர்னாண்டஸ் - 14 வயது

மைக்கேல் ஹெர்னாண்டஸ், 2004 ஆம் ஆண்டு பால்மெட்டோ விரிகுடாவில் உள்ள சவுத்வுட் நடுநிலைப் பள்ளியில் தனது வகுப்புத் தோழரான ஜெய்ம் கோஃபை கத்தியால் குத்தினார். சுமார் 40 தடவைகளுக்கு மேல் கேஃபை குத்தியதாகவும், அவரை குளியலறைக்குள் இழுத்துச் சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. இதனால், விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், முதல் நிலை கொலை முயற்சிக்காக தொடர்ந்து முப்பது ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. தற்போது அவர் உயிருடன் இல்லை.

சிண்டி கோலியர் மற்றும் ஷெர்லி வுல்ஃப் - 15 மற்றும் 14 வயது

சிண்டி கோலியர் மற்றும் ஷெர்லி வுல்ஃப் - 15 மற்றும் 14 வயது

ஒருவர் விளையாட்டு அல்லது த்ரிலுக்கா சில விஷயங்களை செய்வார்கள். ஆனால், இங்கே இரண்டு சிறுமிகள் வேடிக்கையான அனுபவத்திற்காக ஒரு பெண்ணை கொலை செய்துள்ளனர். சிண்டி கோலியர் மற்றும் ஷெர்லி வுல்ஃப் என்ற இரண்டு சிறுமிகள், 1983இல் காரைத் திருடுவதற்காக 85 வயதான ஒரு பெண்ணை கொன்றனர். அந்த பெண்ணை கொலை செய்த பின்னர், அந்த இரண்டு சிறுமிகள் எதையும் திருடவில்லை. ஆனால் இது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருந்ததாக அவர்களுடைய டைரியில் குறிப்பிட்டுள்ளனர். அந்த இரண்டு சிறுமிகளின் வயது 15 மற்றும் 14 மட்டுமே.

ஜேம்ஸ் ஃபேர்வெதர் - 15 வயது

ஜேம்ஸ் ஃபேர்வெதர் - 15 வயது

இங்கிலாந்தின் எசெக்ஸில் உள்ள கோல்செஸ்டரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃபேர்வெதர் என்ற 14 வயது சிறுவன் மீது இரண்டு கொலை குற்றம் சாட்டப்பட்டன. 2014 மார்ச் 15 இல் கோல்செஸ்டரில் உள்ள ஒரு பூங்காவில் ஜேம்ஸ் அட்ஃபீல்டை (வயது 33) 102 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். அதேபோல, பூங்கா வழியாக நடந்து சென்ற மாணவி நஹித் அல்மனேயா (31) என்பவரையும் கொலை செய்தார். இந்த கொடூர கொலை குற்றங்களின் விளைவாக, ஜேம்ஸ் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அல்யாஷா பஸ்டாமென்டே- 15 வயது

அல்யாஷா பஸ்டாமென்டே- 15 வயது

அமெரிக்காவின் மிசோரி பகுதியில் 1994அம ஆண்டு பிறந்தார் அல்யாஷா பஸ்டாமென்டே. இவர் தனது 15 வயதில் எலிசபெத் ஓல்டன் என்ற குழந்தையை கொலை செய்தார். அல்யாஷா வளரும் பருவத்தில் சரியாக கவனிக்கப்படாமல் வளர்க்க பட்டார். குழந்தை துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட தொடர் கொலையாளிகளில் அல்யாசாவும் ஒருவர். அவளுடைய பெற்றோர் போதைக்கு அடிமையானதால் அவளுடைய தாத்தா, பாட்டி தான் அவளை வளர்த்ததாக கூறப்படுகிறது.

டேவிட் ப்ரோம் - 16 வயது

டேவிட் ப்ரோம் - 16 வயது

அமெரிக்காவில் கேஸ்கேட் டவுன்ஷிப்பில் 1971ஆம் ஆண்டு பிறந்தார் டேவிட் ப்ரோம். 1988 இல் அவருக்கு 16 வயதான போது, அவரது முழு குடும்பத்தையும் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். அவரது தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, டேவிட் தனது தந்தை பெர்னார்ட் ப்ரோம், தாயார் பாலெட் மற்றும் அவரது உடன்பிறப்புகளான டியான் (14) மற்றும் ரிக் (9) ஆகியோரைக் கொடூரமாக கொலை செய்தார்.

ஹார்வி மிகுவல் ராபின்சன் - 17 வயது

ஹார்வி மிகுவல் ராபின்சன் - 17 வயது

ஹார்வி மிகுவல் ராபின்சன் பென்சில்வேனியாவின் அலென்டவுனில் முதல் சீரியல் கில்லர் மற்றும் அமெரிக்காவின் இளைய தொடர் கொலையாளிகளில் ஒருவர். ராபின்சன் 1992 மற்றும் 1993 க்கு இடையில் இரண்டு பெண்களையும் 15 வயது சிறுமியையும் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ராபின்சன் ஒரு குடிகார தந்தையின் கீழ் மோசமான வளர்ப்பில் வளர்ந்ததாக கூறப்படுகிறது. உயர்நிலைப் பள்ளியில் திருட்டு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தண்டனை பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகவும் இருந்தார். இதனால், குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.

குழந்தை சீரியல் கில்லர்கள்

குழந்தை சீரியல் கில்லர்கள்

குழந்தை தொடர் சீரியல் கில்லர்கள் பல்வேறு காரணங்களுக்காக மற்றவர்களைக் கொலை செய்துள்ளனர். சிலர் தங்கள் குடும்ப உறுப்பினரையே கொலை செய்துள்ளனர். இவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறிய வயதிலே குழந்தை பருவத்திலே மிகவும் கொடூரமான குற்றங்கள் செய்வதை அறிந்த பலர் அதிர்ச்சியடைகிறார்கள் மற்றும் பயம் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலத்திற்கு ஏற்ற வாழ்க்கையையும் அதற்கான சூழ்நிலைகளையும் நாம் உருவாக்க வேண்டும். அவர்களை சரியாக கவனித்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Child serial killers: ten of the youngest serials killers in history in tamil

Here we are talking about the Child serial killers: ten of the youngest serials killers in history in tamil .
Desktop Bottom Promotion