Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
விருச்சிகத்தில் உருவான சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு தொழிலில் வெற்றியும் லாபமும் கிடைக்கும்...
2022 நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் விருச்சிக ராசியில் இணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அது சில கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2022 நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் விருச்சிக ராசியில் இணைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்
சதுர்கிரக யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் இந்த யோகம் துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைத் தரும்.

மகரம்
சதுர்கிரக யோகமானது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானத்திற்கு வழிவகுக்கும். இந்த யோகம் மகர ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அதே வேளையில் வணிகர்கள் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் நல்ல லாபகரமானதாக இருக்கும்.

கும்பம்
சதுர்கிரக யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். ஏனென்றால் இந்த யோகம் கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இது வேலையின் வீடாக கருதப்படுகிறது. எனவே இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தை விரிவாக்க சிறந்த காலம் இது. பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications