Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மகர ராசியில் உருவாகியுள்ள சதுர்கிரக யோகத்தால் இந்த 4 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
தற்போது மகர ராசியில் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் இணைந்திருப்பதால், மகர ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அடிக்கடி தங்கள் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, சில கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக சில காலம் பயணிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு கிரகங்கள் இணையும் போது ஒருசில யோகம் உருவாகும். பொதுவாக கிரக சேர்க்கைகள், கிரக பெயர்ச்சிகள் போன்றவை 12 ராசிகளையும் நேரடியாக பாதிக்கிறது.

தற்போது மகர ராசியில் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் இணைந்திருப்பதால், மகர ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகியுள்ளது. மகரத்தில் உருவாகியுள்ள இந்த சுப கிரகங்களின் சேர்க்கையால் உருவான சுப யோகம் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் வியாபாரத்தில் நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். பல புதிய வேலை வாய்ப்புக்கள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமை மிகவும் வலுவாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இக்காலத்தில் எந்த வேலையை நீங்கள் செய்தாலும், அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த இது சாதகமான காலம்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் இக்காலத்தில் பொருள் இன்பத்தை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் முடிக்கப்படும். வியாபாரத்தில் முதலீடு செய்ய சாதகமான காலம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இது வலிமை மற்றும் உடன்பிறப்புக்களின் வீடு. இதனால் இந்த காலத்தில் உங்கள் பலம் அதிகரிக்கும். உங்கள் சகோதர மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். ரகசிய எதிரிகளை இக்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வர்த்தகர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications