Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதியின் படி உடலில் இந்த அறிகுறி இருக்கும் பெண்கள் உங்கள் வாழ்க்கையை நரமாக்குவார்களாம்...! ஜாக்கிரதை!
சாணக்கியர் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். மனித வாழ்வின் பல அம்சங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது.
சாணக்கியர் பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். மனித வாழ்வின் பல அம்சங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்தது. மனித வாழ்க்கை தொடர்பான முக்கியமான விஷயங்கள் அவர் எழுதிய சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாழ்க்கையில் வெற்றிபெற ஒரு மனிதன் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயங்களையும் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியரின் சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றுவது உங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும். சாணக்கிய நீதியின் படி, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களுக்கு ஒரு சரியான வாழ்க்கை துணையை விரும்புகிறார்கள். சாணக்கிய நீதியில் இது போன்ற பல குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளின் மூலம் ஒரு சிறந்த மனைவியின் குணங்களை நீங்கள் புரிந்து கொள்ளலாம். சாணக்கிய நீதி ஒரு பெண்ணின் உடலில் சில அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண்ணின் குணம் மற்றும் பழக்கவழக்கங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு இதைக் கண்டறியலாம். சாணக்கியரின் கூற்றுப்படி, பெண் உடலின் சில அடையாளங்கள் மற்றும் அதன் அர்த்தங்கள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கைரேகை
சாணக்கியரின்ன் கூற்றுப்படி, விலங்கு அல்லது பறவையின் வடிவத்தில் உள்ளங்கைகளைக் கொண்ட ஒரு பெண் மற்றவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற உள்ளங்கை வடிவமுள்ள பெண்களிடம் இருந்து நீங்கள் எப்போதும் விலகி இருக்க வேண்டும் என்றும் சாணக்யா கூறுகிறார்.

காதில் முடி
சாணக்கியரின் கூற்றுப்படி, காதில் முடி உள்ள பெண்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் அல்ல. அத்தகைய பெண்கள் கடினமான இயல்புடையவர்கள். இப்படிப்பட்டவர்கள் வீட்டில் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்துவார்கள். இதனால் வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

கன்னத்தில் குழி
சாணக்கியரின் கூற்றுப்படி, கன்னங்களில் குழி உள்ள பெண்கள் நல்ல குணம் கொண்டவர்கள் அல்ல. மற்றவர்கள் அத்தகைய பெண்களை அதிகம் ஈர்க்கத் தொடங்குகிறார்கள். அத்தகைய பெண்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

பெரிய பற்கள்
அகன்ற, தடித்த, நீளமான, நீண்டு விரிந்த பற்களை உடைய பெண்களின் வாழ்வில் பல துன்பங்கள் ஏற்படும் என்று சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பெண் விரும்பினாலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது என்கிறார் சாணக்கியர்.

மஞ்சள் கண்
இந்த அறிகுறி உள்ள பெண்கள் வெகு சிலரே காணப்பட்டாலும், மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட பெண் எப்போதும் மற்றவர்களை பயமுறுத்துகிறார். அத்தகைய பெண்கள் அரிதாகவே தனியாக இருக்கிறார்கள்.

குறுகிய கழுத்து
கழுத்து மிகவும் குட்டையாக இருக்கும் பெண்கள் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்கிறார் சாணக்கியர். அவர்கள் எப்போதும் மற்றவர்களைச் சார்ந்து இருப்பார்கள்.

நீண்ட கழுத்து
நான்கு விரல்களை விட நீளமான கழுத்து கொண்ட பெண் ஒரு வம்சத்தின் அழிவுக்கு காரணமாகிறார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால் அத்தகைய பெண் அரிதாகவே காணப்படுகிறார்.



Click it and Unblock the Notifications