For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதியின் படி இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு மரணத்திற்கு பிறகும் துரதிர்ஷ்டம் இருக்குமாம்

|

சாணக்கியர் அவரின் ஞானத்திற்காவும், அரசியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த அறிவுரைகளுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அவரின் அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் உலகின் முக்கியதுவம் வாய்ந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன. பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் சாணக்கியர் அனைவருக்கும் முன்னோடியாகவும், தொலைநோக்கு பார்வையும் கொண்டவராக இருந்தார்.

Chanakya Niti: Signs That Bad Times Are Ahead

இவர் எதிர்காலத்தை அறிந்தவர் அல்ல, ஆனால் மக்கள் மற்றும் மனித இயல்பு பற்றிய அறிவு மற்றும் புரிதலின் அடிப்படையில், அவர் எதிர்வரும் நிகழ்வுகளை கணிக்கக் கூடியவர். அவரின் கூற்றுப்படி மரணத்திற்கு பிறகும் நம்மை துரதிர்ஷ்டம் தொடரும் என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு நடக்கபோவதற்கு அறிகுறியாக நமது வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும் அவர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். இந்த பதிவில் மரணத்திற்கு பிறகும் உங்களை துரதிர்ஷ்டம் தொடர போவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வயதான காலத்தில் வாழ்க்கைத்துணையை பிரிவது

வயதான காலத்தில் வாழ்க்கைத்துணையை பிரிவது

ஒரு நபரின் பலவீனமான உணர்ச்சி புள்ளி வாழ்க்கையின் இரண்டு கட்டங்களில் வருகிறது, ஒன்று குழந்தை பருவத்தில் மற்றும் அடுத்தது முதுமையில். வாழ்க்கையின் இந்த நிலைகளில், ஒரு நபர் உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காக பெற்றோரையும், வாழ்க்கைத் துணையையும் சார்ந்திருக்கிறார். குறிப்பாக வயதான காலத்தில், மரணம் உங்களை உங்கள் மனைவியிடமிருந்து பிரித்தால், அது உங்கள் மீது வரும் துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். வயதான காலத்தில், உங்கள் மனைவியைப் போல நெருக்கடி காலங்களில் யாரும் உங்களை உணர்ச்சிபூர்வமாக ஆதரிக்க முடியாது. அந்த ஒரு ஆதரவு பறிக்கப்பட்டால், அது மரணத்திற்குப் பிறகு ஒரு சித்திரவதை காலத்தைக் குறிக்கிறது.

வாழ்வாதாரத்திற்காக ஒருவரை சார்ந்திருப்பது

வாழ்வாதாரத்திற்காக ஒருவரை சார்ந்திருப்பது

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு விவேகமுள்ள நபரும் அவர்களின் குறைபாடுகளை பொருட்படுத்தாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர் என்று ஆச்சார்யா சாணக்யா விளக்குகிறார். இது உங்களின் உடல் அல்ல, உங்களின் மனஉறுதியும், புத்திக்கூர்மையும் உங்களை சுயசார்புடையதாக மாற்றுகிறது. மேலும் சில சூழ்நிலைகளில் ஒரு ஆரோக்கியமான நபர் வாழ்வாதாரத்திற்காக வேறொருவரைச் சார்ந்து இருக்க வேண்டுமானால், அது அவர்களைச் சுற்றி வருவது துரதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். உலகளாவிய ஆற்றல்கள் அவரை மரணத்திற்குப் பிறகு துரதிர்ஷ்டத்தை நோக்கித் தள்ளுகின்றன என்பதற்கான அறிகுறியாகும்.

உங்கள் வெகுமதியை வேறொருவர் எடுத்துச்செல்வது

உங்கள் வெகுமதியை வேறொருவர் எடுத்துச்செல்வது

2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?சாணக்கியரின் கூற்றுப்படி, ஒவ்வொரு கடின முயற்சிக்கும் அதற்கேற்ற பலனும், வெகுமதியும் உடனேயோ அல்லது தாமதமாகவோ கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் சிலர் பிறரின் வெகுமதியில் பங்குக்கு செல்கிறார்கள். இது உங்களுக்கு நிகழும் போது அது துரதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வெகுமதி இன்னொருவரால் பறிக்கப்படும் தருணம் மரணத்திற்குப் பிறகு நீங்கள் இதே போன்ற ஏதாவது ஒன்றிற்குத் தயாராகி வருகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

MOST READ: 2020-ன் பெண்கள் வாழ தகுதியற்ற நாடுகள் இவைதான்... இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

மனிதனுக்கான 4 விஷங்கள்

மனிதனுக்கான 4 விஷங்கள்

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் 4 விஷங்களை காணும் வரையில் மட்டும்தான் ஆரோக்கியமான மற்றும் தொந்தரவில்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த 4 விஷங்களுக்கு இரையாகுவது ஒருவரின் அமைதியான வாழ்க்கை மட்டுமின்றி மன்சாட்சியையும் பாதிக்கும்.

அனப்யாஸே விஷம் சாஸ்திரம்

அனப்யாஸே விஷம் சாஸ்திரம்

சாஸ்திரத்தைப் பற்றிய தத்துவார்த்த அறிவை பெற பயிற்சி பெறாமல் இருப்பது விஷத்திற்கு சமமானதாகும். சாஸ்திரத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல், பயிற்சி எடுக்காமல் தன்னை சாஸ்திர ஞானியாக நினைத்துக் கொள்பவர்கள் இந்த விஷத்தை எடுத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் அவர்களின் பொய்களுக்காக அவமானப்படுத்தபடுவார்கள். இது அவர்களின் பெருமையையும், ஆன்மாவையும் பாதிக்கும். எனவே பாதி நிரப்பப்பட்ட அறிவு விஷத்திற்கு சமம்.

அஜீர்ணய போஜனம் விஷம்

அஜீர்ணய போஜனம் விஷம்

ஒரு மனிதன் வயிற்றால் வேதனைப்படுகிறான் என்றால், அவருக்கு உணவு விஷம், அது அவனின் உடலை மேலும் உள்ளிருந்து அழுகச்செய்யும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் செரிமானம் அவனது சுவை மொட்டுக்களைத் திருப்திப்படுத்த ஊக்குவிக்கிறது, ஆனால் செரிமானம் குறைவாக உள்ள ஒரு மனிதன் தன்னை சுவைகளில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். வேதனையான வயிறுடன் உணவை உண்பது உள்ளிருந்து விஷமாக மாறக்கூடும், இது பல்வறு வியாதிகளுக்கு வழிவகுக்கும். உடல்நலம் சரியாகும் வரை உணவில் கவனமும், கட்டுப்பாடும் வேண்டும்.

தரிதிரஸ்யா விஷம் கோஸ்தி

தரிதிரஸ்யா விஷம் கோஸ்தி

இதன் பொருள் என்னவென்றால் கீழ்மட்டத்தைச் சென்ற ஒரு மனிதன் செல்வந்தர் போல வாழ வேண்டும் என்ற ஆசை அவரின் அமைதி, செல்வம், மரியாதை என அனைத்தையும் கெடுக்கும். அவர் தன்னைத்தானே தாழ்ந்தவராக நினைக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் ஒருவரின் செல்வம் நிறைந்த வாழ்க்கையை பேராசை நோக்கத்துடன் நகலெடுக்க முயற்சிப்பது வாழ்க்கையில் விஷத்தை கரைக்கும். உங்கள் வேர்களுடன் ஒட்டிக்கொள்ள முடியாமல், உங்களிடம் உள்ளதை அவமதிப்பதும், மற்றவர்கலின் வாழக்கையுடன் பொருந்துவதற்கான நோக்கமும், வாழ்க்கையில் அவமானம், பதட்டம், மனச்சோர்வு மற்றும் துக்கத்தைத் தருகிறது.

MOST READ: இந்த ராசிக்காரங்க இந்த வருஷம் சிங்கிளா இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதாம் தெரியுமா?

விருதஸ்ய தருணி விஷாம்

விருதஸ்ய தருணி விஷாம்

ஒரு வயதான மனிதர் காமம் நிறைந்த எண்ணத்துடன் தன்னை விட இளையப்பெண்ணை நாடுவது விஷத்திற்கு சமமாகும். ஒரு நல்ல மற்றும் இணக்கமான திருமணம் குறைந்த வயது இடைவெளி அல்லது ஒரே வயதினரிடையே நீடிக்கும். இவர்களால்தான் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை திருப்திப்படுத்த முடியும். வயதில் மிகவும் சிறிய பெண்ணை திருமணம் செய்து கொள்வது அல்லது அவர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வது அவர்கள் வாழ்க்கையில் அவமானத்தை ஏற்படுத்தும். மேலும், அந்த பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் இருப்பது திருமண வாழ்க்கையில் முடிவற்ற மோதல்களைக் கொண்டுவரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Signs That Bad Times Are Ahead

According to Chanakya Niti these 3 life events are a clear indication that bad luck would grip you after death.
Story first published: Friday, January 10, 2020, 15:52 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more