For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா?

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். சாணக்கியரின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் எப்போதும் வயதாகாது.

|

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். இவர் தனது திறமையையும், ஞானத்தையும் தனது மௌரிய இராஜ்ஜியத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காகவும் பயன்படுத்தினார். நல்வாழ்வுக்காக இவர்கள் கூறிய கருத்துக்களும், அறிவுரைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.

Chanakya Niti: Advice On Woman

சாணக்கியரின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் எப்போதும் வயதாகாது. தனது சாணக்கிய நீதியில் பெண்கள், குடும்ப வாழ்க்கை, நட்பு, மனித உறவுகள், தார்மீக நடத்தை மற்றும் ஆன்மீகம் என மனித வாழ்விற்கான அனைத்து அடிப்படைத் தேவைகளை பற்றியும் இவர் எழுதியுள்ளார். பெண்கள் மீதான இவரின் கண்ணோட்டமும், கருத்துக்களும் பலருக்கும் முரணாக இருக்கிறது. இந்த பதிவில் சாணக்கியர் பெண்களைப் பற்றி கூறியுள்ள சில கருத்துக்களையும், அறிவுரைகளையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவுரை 1

அறிவுரை 1

இந்த மகிழ்ச்சியற்ற உலகின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, மனிதன் கடவுளை தூய பக்தியுடன் வணங்க வேண்டும். வான வாழ்க்கையின் இன்பங்களை அடைய, அவர் நெறிமுறை மற்றும் வேதப்பூர்வ வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதனை செய்ய முடியாத என்றால் குறைந்தபட்சம் பெண்ணின் வலையில் விழாமலாவது இருக்க வேண்டும். இவற்றை செய்யாதவர்கள் தங்களுக்குள் இருக்கும் மிகப்பெரும் சக்தியை அழிப்பதுடன், இளமையையும் இழக்கிறார்கள்.

அறிவுரை 2

அறிவுரை 2

பணத்தை சேமிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பணம் இருக்கும் ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்கள். ஆனால் இயற்கையின் நியதியை ஒருபோதும் மறந்து விடக்கூடாது, ஏனெனில் பெண்ணும், பணமும் எப்போது வேண்டுமென்றாலும் உங்களை விட்டு செல்லலாம்.

அறிவுரை 3

அறிவுரை 3

திருமணம் குறித்து ஆண்கள் எடுக்கும் முடிவில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவசரத்தில் அவர்கள் எடுக்கும் முடிவு அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடும். அந்தஸ்தில் தன்னுடைய தகுதிக்கு சமமாக இருக்கும் பெண்ணத்தைத்தான் திருமணம் செய்ய வேண்டுமே தவிர ஒருபோதும் தகுதிக்கு மீறிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அழகைப் பார்த்து எப்போதும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, ஒரு பெண் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் அவள் தகுதியற்ற குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

MOST READ: பெண்கள் எந்தெந்த நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபட விரும்புவார்கள் தெரியுமா?

அறிவுரை 4

அறிவுரை 4

ஒரு பெண் ஆணை விட மென்மையானவள் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பெண் ஆணை விட வலிமையானவள். ஆணை விட ஆறு மடங்கு தைரியமும், எட்டு மடங்கு வலிமையான உணர்ச்சிகளும் கொண்டவர்கள் பெண்கள்.

அறிவுரை 5

அறிவுரை 5

ஒரு ஆண் தனது ராணியை ஒருபோதும் மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது. தனது மனைவியையும், மனைவியின் குடும்பத்தையும் எப்போதும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். தவறான எண்ணத்துடன் பெண்களை நெருங்குபவர்கள் அனைவருக்கும் நரகவாயில் காத்திருக்கிறது. அனைத்து மதங்களும் பெண்ணை மதிக்கத்தான் போதிக்கிறது, பெண்களை மதிக்கும் ஆண்கள் எப்போதும் போற்றப்படுவார்கள்.

அறிவுரை 6

அறிவுரை 6

ஒரு பெண் தன்னை காதலிப்பதாக நினைத்து ஒரு பெண் ஏமாறும் போது அவன் அந்த பெண்ணின் கையில் பொம்மையாக மாறுகிறான் என்பதை மறந்துவிடக்கூடாது.

MOST READ: சனிபகவான் எள் எண்ணெயை விரும்புவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

அறிவுரை 7

அறிவுரை 7

இரட்டை நிலைப்பாடு, தைரியமானவர் போல நடிப்பது, வஞ்சகம், பேராசை அனைத்திலும் இலாபம் எதிர்பார்ப்பது போன்றவை பெண்களின் இயல்பான குணங்களாகும். பெண்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது ஆண்கள் குழப்பமடையக்கூடாது.

அறிவுரை 8

அறிவுரை 8

கணவருக்கு உண்மையாக இருக்கும் ஒரு தூய்மையான, புத்திசாலித்தனமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் மென்மையானபெண் மட்டுமே ககணவருடைய அன்புக்கு உண்மையிலேயே தகுதியானவர். அத்தகைய ஒரு பெண்ணை தனது மனைவியாகக் கொண்ட ஆண் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.

அறிவுரை 9

அறிவுரை 9

மனிதனின் மிகப்பெரிய மோகம் என்ன? அது பெண்தான். ஆண்களின் மனம் சுற்றும் மையமாக பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணின் அனைத்து செயல்களிலும் பெண்கள் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். விரைவில் இதனால் ஆண்கள் சுயத்தை இழப்பார்கள் என்பது உறுதி.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...!

அறிவுரை 10

அறிவுரை 10

பெண் வயதாகும் போது கூட தனது உண்மையான வயதை விட குறைவான வயது உள்ளதாகவே ஒரு மாயையான தோற்றத்தில் இருப்பார்கள். தன்னுடைய இளமையை காலவரையின்றி நீடிக்கும் முயற்சியிலும், முடிந்தவரை மற்றவரை வசீகரிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Advice On Woman

Here are some advices on woman from Chanakya Niti.
Story first published: Friday, October 4, 2019, 16:07 [IST]
Desktop Bottom Promotion