For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் குழுவில் இடம்பெற்றுள்ள செலின் 'கவுண்டரை' சுற்றியிருக்கும் சர்ச்சைகள் என்ன தெரியுமா?

செலினா தான் படித்து வாங்கிய பட்டங்களையும், தன் திறமையினால் கிடைத்த வேலை மற்றும் அதிகாரங்களையும் தன்னுடைய அடையாளமாக கூறியிருக்கலாம். ஆனால், அவர் செலினா கவுண்டர் என்ற பெயரை அடையாளமாகவும், வரலாறாகவும் கூ

|

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள, இந்திய டாக்டர் செலின் கவுண்டர், "இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள எனது மக்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார். அமெரிக்க குழுவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட செலின் கவுண்டர் இடம் பெற்றிருப்பது குறித்து, தமிழ்நாட்டு மக்கள் பெருமைப்படும் நேரத்தில் அவரின் பெயர் குறித்த சர்ச்சைகள் மறுபுறம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Celine gounders controversial statement about her surname

இந்நிலையில், தன்னுடைய பெயரில் எந்த மாற்றமும் இல்லை, அது தன்னுடைய அடையாளம் மற்றும் வரலாறு என செலின் கவுண்டர் கூறியிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனமும், எதிர்ப்புகளும் வலுக்கிறது. செலின் கவுண்டர் குறித்தும், அவரின் பெயர் சர்ச்சை குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழுவில் தேர்வு

குழுவில் தேர்வு

சமீபத்தில் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். 13 பேர் கொண்ட அந்தக் குழுவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈரோட்டை பூர்விகமாகக் கொண்ட மருத்துவர் செலின் கவுண்டரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.

பூர்விகம்

பூர்விகம்

செலின் கவுண்டரின் தந்தை நடராஜ், தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது பெருமாபாளையம் கிராமத்து மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க கூடிய விஷயம்.

படிப்பும் பணிகளும்

படிப்பும் பணிகளும்

செலினின் பூர்விகம் ஈரோடு என்றாலும், அவர் பிறந்தது, படித்தது, வளர்ந்தது என எல்லாமும் அமெரிக்காவில்தான். அமெரிக்காவிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் படித்த செலின், தொற்றுநோயியல் துறையில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறார். பிறகு வாஷிங்டன் யுனிவர்சிட்டியில் எம்.டி படிப்பு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டியில் தொற்றுநோயியல் முனைவர் பட்டம் போன்றவற்றையும் பெற்றிருக்கிறார். அமெரிக்க நாட்டின் காசநோய்த் தடுப்புப் பிரிவில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய செலின், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

புகழாரம்

புகழாரம்

அக்குழுவில், செலின் கவுண்டர் நிமியக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் வாழ்த்துக்களையும், பெருமைப்படும் விதமாக புகழாரங்களையும் சூட்டிவருகின்றனர்.

சாதியினால் கிளம்பிய சர்ச்சை

சாதியினால் கிளம்பிய சர்ச்சை

புகழும், வாழ்த்துக்களும் ஒருபுறம் செலினிற்கு குவிந்து வரும் நிலையில், அமெரிக்கா சென்றும் இவ்வளவு படித்திருந்தும் தன் சாதி பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்டிருக்கிறார், என்று அவர் மீது விமர்சனமும் குவிந்து வருகிறது. அத்துடன், பலர் அவர் தனது பெயருக்கு பின்னால் உள்ள கவுண்டரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

செலினின் ட்வீட்

செலினின் ட்வீட்

இந்த நிலையில் தனது பெயர் தனது அடையாளம் என்றும் அதனால் பெயரை மாற்றப் போவதில்லை என்றும் செலின் கவுண்டர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். செலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "நான் ஏன் என் பெயரின் பின்பு என் சாதிப் பெயரை குறிப்பிடுகிறேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என் அப்பா 1960-களில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். `நடராஜன்' என்பதை உச்சரிப்பது அமெரிக்கர்களுக்கு சிரமமாக இருந்தது. `கவுண்டர்' என்பது அவர்கள் சொல்ல எளிமையாக இருந்தது. எனவே 1970-களில், அதாவது நான் பிறக்கும் முன்பே அவரது பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டார். என் பெயர் என்பது என்னுடையதுதான். இந்த வரலாறு சில வேதனையாக இருந்தாலும், அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். நான் திருமணம் செய்துகொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. இப்போதும் அதை நான் மாற்றமாட்டேன்." என விளக்கம் அளித்திருக்கிறார்.

பெயரை மாற்றமாட்டேன்

பெயரை மாற்றமாட்டேன்

சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், செலின் தன்னுடைய பெயரை அடையாளம் மற்றும் வரலாறு ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி தனது பெயரை மாற்றமாட்டேன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். இவரின் இந்த சாதி சார்ந்த நிலைப்பாட்டின் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. நவீன கல்வி கற்றாலும், உலகில் எங்கு சென்றாலும், இந்தியர்கள் சாதியை கூடவே எடுத்து செல்கின்றனர்.

சாதிய எண்ணம்

சாதிய எண்ணம்

சாதிய படுகொலைகளும், ஆவண படுகொலைகளும், பாலியல் வன்புணர்வுகளும், தீண்டாமைகளும் இந்நாட்டில் தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சாதி என்ற மனநோயால்தான் நடக்கிறது. இத்தகைய சாதியை தன் பெயரோடு இணைத்து அதை பெருமையாக கூறுவது மடத்தனமாக பார்க்கப்படுகிறது. செலின் தான் படித்து வாங்கிய பட்டங்களையும், தன் திறமையினால் கிடைத்த வேலை மற்றும் அதிகாரங்களையும் தன்னுடைய அடையாளமாக கூறியிருக்கலாம். ஆனால், அவர் செலின் கவுண்டர் என்ற பெயரை அடையாளமாகவும், வரலாறாகவும் கூறுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சாதிய எண்ணம் நம்முள் எந்ததளவிற்கு உள்ளது என்பதை செலினின் இந்த ட்வீடே ஆதாரம்.

விமர்சனம்

விமர்சனம்

தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செம்மலர் செலினின் ட்வீட்க்கு பதில் ட்வீட் செய்துள்ளார். "செலின் கவுண்டர் நீங்கள் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தால் உங்கள் கவுண்டர் சாதி சங்கங்கள் உங்களை பட்டப் பகலில் ஆணவ கொலை செய்திருக்கும்... நீங்கள் கிரான்ட் வாலை திருமணம் செய்ததற்காக... இங்க இதுதான் உங்கள் வரலாறு மற்றும் அடையாளம்." என்று பதிவிட்டுள்ளார் செம்மலர். இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celine gounder's controversial statement about her surname

Here we are talking about the celine gounder's controversial statement about her surname.
Desktop Bottom Promotion