Just In
- 4 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 6 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 11 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 12 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- News
அக்னி பாத் திட்டத்தை சும்மா ஒன்றும் எதிர்க்கவில்லை! இது தான் காரணம்! காங்கிரஸ் தந்த டீடெயில்!
- Finance
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!
- Movies
‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஏப்ரல் மாதத்திற்கு பின் இந்த 4 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சூப்பரா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த ஆண்டில் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான கிரகங்களான ராகு, குரு, சனி போன்ற கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதில் 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி நிழல் கிரகமான ராகு மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார் மற்றும் அதே ஏப்ரல் 12 ஆம் தேதி குரு பகவான் மீன ராசிக்கு இடம் மாறுகிறார். மேலும் நீதிமான் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இப்படி 3 முக்கிய கிரகங்களின் மாற்றமானது ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில் 4 ராசிக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த 4 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்களுடைய ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இவர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை மாற நினைப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதை மட்டும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். சம்பள உயர்வால் நிதி நிலைமை மேம்படும். வணிகர்களும் இந்த ஆண்டில் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். செலவைக் கட்டுப்படுத்தி பணத்தை சேமித்து சரியான இடத்தில் முதலீடு செய்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானது. ஏனெனில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வரும். எனவே கடின உழைப்புடன் நேர்மையாக உங்கள் வேலையை செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு சாதகமாக அமையும். பல வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்கள் கொஞ்சம் முயற்சித்தால், நல்ல வேலை கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த 2022 ஆம் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் பணம் சம்பாதிக்க பல ஆதாரங்களைப் பெறுவீர்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்களின் அறிவாற்றலை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். நீங்கள் சொத்து வாங்க விரும்பினால், அதற்கு இதுவே சரியான நேரம்.

கடகம்
வேலைத் தேடும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த 2022 ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு பணிக்கு தயாராகி வருபவர்களுக்கு, 2022 ஆம் ஆண்டில் நற்செய்திகள் கிடைக்கும்.