Career Horoscope 2023: 12 ராசிக்கும் 2023-ல் தொழில் எப்படி இருக்கும்? இந்த 5 ராசிக்காரங்க அதிர்ஷ்டசாலி!

நீங்கள் 2023 ஆம் ஆண்டில் உங்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

Career Horoscope 2023 Predictions For 12 Zodiac Signs In Tamil

Career Horoscope 2023: இன்னும் ஒரு மாதத்தில் 2023 ஆம் ஆண்டில் பல புதிய கனவுகள், நம்பிக்கைகள் மற்றும் இலக்குகளுடன் நுழைய போகிறோம். கடந்த ஆண்டில் பலர் தங்கள் தொழில் வாழ்க்கையில் பெற நினைத்த வெற்றியை பெற முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த 2023 ஆம் ஆண்டில் பலரது தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது. சிலருக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். நீங்கள் 2023 ஆம் ஆண்டில் உங்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 2023 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

2023 ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் சனிப் பெயர்ச்சிக்கு பின் தொழில் மற்றும வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய இது சிறந்த ஆண்டு. வியாபாரம் தொடர்பான புதிய யோசனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ராகு, கேது பெயர்ச்சியின் போது உங்கள் வேலை மீது பொறாமை கொண்டவர்களின் மீது ஒரு கண் வைத்திருங்கள். சுறுசுறுப்பாக வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால், ஏப்ரல் மாதத்திற்கு பின் எடுங்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

2023 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அதுவும் சனி உங்களின் 10 ஆவது வீட்டிற்கு வருகிறார். எனவே முழுமையான பலன்களைப் பெறுவீர்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஏப்ரல் வரை குரு உங்கள் 11 ஆவது வீட்டில் இருப்பதால், பணியிடத்தில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஒரு பெரிய சாதனையை புரிவீர்கள். ஏப்ரல் மாதத்திற்கு பின் குரு மற்றும் ராகுவின் கூட்டு பெயர்ச்சியால் வெளிநாட்டில் இருந்து ஆதாயம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு தொழிலதிபர்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

2023 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் பல நன்மைகளைப் பெறுவீர்கள். ஜனவரியில் நிகழும் சனிப் பெயர்ச்சியால், உங்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது என்றே கூறலாம். பிரச்சனைகள் மறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஜூன் முதல் நவம்பர் வரை உங்கள் தொழிலில் கவனமாக இருக்கவும். வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். தொழிலதிபர்கள் இந்த ஆண்டு அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம்.

கடகம்

கடகம்

2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சூப்பராக இருக்கும். ஏப்ரல் வரை அனைத்து வேலைகளிலும் குருவின் அருளால் நற்பலன்கள் கிடைக்கும். ஜனவரி 17 ஆம் தேதி நிகழும் சனிப் பெயர்ச்சியால், சில புதிய வாய்ப்புக்களை சனி பகவான் தருவார். ஏப்ரல் மாதத்திற்கு பின் குரு மேஷ ராசிக்கு செல்வதால், வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்மம்

2023 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் முக்கியமான ஆண்டாகும். ஜனவரி 17 ஆம் தேதி சனி 7 ஆவது வீட்டிற்கு செல்வதால், வியாபாரத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்ற உதவுவார். ஏப்ரல் மாதத்திற்கு பின் குருவின் அருளால் வியாபாரத்திலும் வேலையிலும் சில புதிய நன்மைகள் கிடைக்கும். இந்த ஆண்டு ஒரு புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. உங்களின் ரகசிய எதிரிகளை தோற்கடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி

2023 ஆம் ஆண்டின் தொடக்கம் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு ஆண்டின் தொடக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். குருவின் அருளால் புதிய உறவுகளால் ஆதாயமடைவீர்கள். ராகுவும் கேதுவும் உங்களுக்கு உதவி புரிவார்கள். மே மாதத்திற்கு பிறகு வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விருப்பமான இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம்

2023 ஆம் ஆண்டில் துலாம் ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி சனி உங்களுக்கு அதிகம் உதவுவார். ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளால், கூட்டுத்தொழில் செய்வது நல்லதல்ல. ஆனால் குரு உங்களுக்கு வேலையில் உள்ள தடைகளில் இருந்து காப்பாற்றுவார். ஏப்ரல் மாதத்திற்கு பின் வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். அரசு பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் பெற வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

2023 ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி 17 ஆம் தேதி அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. பிரச்சனை அதிகம் இருக்காது. ஆனால் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். இருப்பினும் குரு இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு உதவியாக இருப்பார். ஏப்ரல் மாதத்திற்கு பின் குரு தொழிலில் நல்ல வெற்றியைத் தருவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வேலை வெற்றியைத் தரும்.

தனுசு

தனுசு

2023 ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். இந்த ஆண்டில் புதிய சாதனைகளை புரிவீர்கள். இந்த ஆண்டு தொழில் துறையில் பல வெற்றிகளைப் பெறுவீர்கள். பல நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். திறமையின் அடிப்படையில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, குரு மேஷ ராசிக்கு செல்வது, வணிக விஷயங்களில் வெற்றியைத் தரும்.

மகரம்

மகரம்

2023 ஆம் ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் தொடங்குகிறது. வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிப்பீர்கள். ராகு மற்றும் கேது உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவார்கள். குரு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார். ஆனால் அதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, உங்கள் பணியிடத்தில் சில நல்ல முடிவுகளைப் பெறத் தொடங்குவீர்கள்.

கும்பம்

கும்பம்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பணிகளை ஒழுங்காக முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உதவும் நபர்களை சந்திப்பீர்கள். ஆண்டின் தொடக்கத்தில், 10 ஆம் வீட்டில் குரு மற்றும் சனியின் கூட்டுப் பார்வை உங்கள் வணிகத் துறையில் முன்னேற்றத்தைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள், பிரச்சனைகள் ஏற்படும். ஏப்ரல் 22-க்கு பிறகு வரும் காலம் அதிக செழிப்பை தரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

மீனம்

2023 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்தில் குரு மீனத்தில் இருந்து மாறுகிறார். ஜனவரி 17 ஆம் தேதி ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. எனவே பணியிடத்தில் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஏப்ரல் வரை குரு உங்களுக்கு உதவுவார். ஏப்ரலுக்கு பின் சில வணிக சிக்கல்களை சந்திக்கலாம். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இருப்பினும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், ஏப்ரல் மாதத்திற்குள் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, November 30, 2022, 12:21 [IST]
Desktop Bottom Promotion