For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே இந்த அறிகுறிகளை தெரியாமகூட புறக்கணிக்காதீங்க... அவை மோசமான புற்றுநோயாகவும் இருக்கலாம்!

|

ஒரு பெண்ணின் உடல் பிறப்பு முதல் மாதவிடாய் தொடங்கி மாதவிடாய் நிறுத்தம் வரை எண்ணற்ற மாற்றங்களுக்கு உள்ளாகிறது. உடலில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்போது, பெண்கள் பெரும்பாலும் புற்றுநோய் போன்ற கடுமையான சிக்கல்களைத் தூண்டும் சமிக்ஞைகளை புறக்கணிக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, 8.8 மில்லியன் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வியக்க வைக்கும் அதே வேளையில், ஆரம்ப அறிகுறிகளை அறிந்துகொள்வது இந்த நோயின் தீவிரத்தை பெரிய அளவில் தவிர்க்கலாம்.

Cancer Symptoms Women Should not Ignore in Tamil

புற்றுநோயின் தூண்டுதல் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம், அதைத் தெரிந்த பிறகு விரைவில் மருத்துவ உதவியைப் பெற வேண்டும். மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய், எண்டோமெட்ரியல் மற்றும் தோலில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் சில. மற்ற உடல் பாகங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சான்றுகளும் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்

சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள்

சருமத்தில் ஏற்படும் எந்த சிறிய மாற்றமாக இருந்தாலும் சில நாட்களில் மறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. பெரும்பாலும் நாம் நமது தோலில் உள்ள சிறிய புடைப்புகளை நாம் புறக்கணிக்கிறோம், மேலும் அவை காலப்போக்கில் தட்டையாகிவிடும் என்று கருதுகிறோம். இந்த அனுமானத்தின் மீது நம்பிக்கையுடன், நாம் அதனை கவனிப்பதில்லை, இந்த எண்ணம் புற்றுநோய்க்கு போதுமான நேரத்தை அளிக்கிறது. உங்கள் கண் இமைகளில் ஒரு கடினமான புடைப்பு அல்லது மெழுகு போன்ற தோல் ஒரு சில நாட்களுக்குள் சுயமாக குணமடையாமல் இருந்தால், விரைவில் மருத்துவரை அணுகுவது நல்லது. பல சமயங்களில் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும். கணிசமான தாமதத்திற்குப் பிறகு ஒருவர் மருத்துவரைச் சென்றடைவதற்குள், புற்றுநோய் ஏற்கனவே பெரிய அளவில் முன்னேறி விட வாய்ப்புள்ளது.

மசாஜ் செய்வதால் முதுகுவலி நீங்கவில்லை என்றால்

மசாஜ் செய்வதால் முதுகுவலி நீங்கவில்லை என்றால்

முதுகுவலி என்பது பெண்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மாதவிடாய் துவங்கி, மாதவிடாய் நிற்கும் வரை ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு முதுகில் வலி ஏற்படும். மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகள் காரணமாக ஏற்படும் வலி புரிந்து கொள்ளப்பட்டாலும், இடுப்பு மற்றும் முதுகுக்கு அருகில் நீண்ட காலமாக நீடிக்கும் வலிகள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருப்பதால் புறக்கணிக்கக்கூடாது. வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் வலி கணைய புற்றுநோயின் அறிகுறியாகும், முதுகுத்தண்டில் உள்ள கட்டியானது கீழ் முதுகில் பயங்கரமான வலியை ஏற்படுத்தும்.

குடல் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மை

குடல் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மை

இது மலச்சிக்கல் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியுடன் அடிக்கடி குழப்பமடையும் மற்றொரு அறிகுறியாகும். ஒழுங்கற்ற குடல் இயக்கம் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். மாதவிடாய்க்கு முந்தைய காலத்தில் பல பெண்கள் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் குடலில் ஏற்படும் மாற்றங்களை உணருவதால், இந்த அறிகுறி கவனிக்கப்படாமல் இருப்பதற்கான மற்றொரு காரணம். மலத்தின் நிறம் மாறுதல், சோம்பல், எடை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் இது நீண்ட நாட்களுக்கு நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போது சிக்கல்கள்

சிறுநீர் கழிக்கும் போது சிக்கல்கள்

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன, மேலும் இதுவே பெண்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முறையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணம். சிறுநீர் பாதையை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருக்க எப்போதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதே சமயம், குறுகிய இடைவெளியில் தொற்று மீண்டும் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும். தொற்றுநோயைத் தவிர, சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியான சிறுநீரில் இரத்தம் உள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

மார்பகங்களில் மாற்றங்கள்

மார்பகங்களில் மாற்றங்கள்

மார்பக புற்றுநோய் என்பது பெண்களில் பொதுவாக ஏற்படும் மற்றொரு வகை புற்றுநோயாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, அக்குள் அல்லது கழுத்து எலும்பு, மார்பகக்காம்பு, உள்நோக்கிய மார்பகக்காம்புகள், ஆரஞ்சு நிறத்தில் தோற்றமளிக்கும் தோல், மார்பகம் அல்லது மார்பகக்காம்பில் வலி, மார்பகக்காம்பு மற்றும் மார்பகத்தைச் சுற்றியுள்ள தோல் அரிப்பு ஆகியவை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. வழக்கமான சுய பரிசோதனை மிகவும் அவசியம், ஏனெனில் அவை இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும். உங்கள் மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் மேமோகிராம் ஒன்றையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்

மாதவிடாய்க்கு இடையில் இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்

மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் உடலில் இருந்து இரத்தம் அல்லது துர்நாற்றம் வீசுவதை நீங்கள் கண்டால், மருத்துவ உதவியை நாடுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. மாதவிடாய்க்கு முந்தைய வெளியேற்றம், பெண்களிடையே பொதுவானது என்றாலும், எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். இது சாதாரண நிலையில் இருந்தால், உங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை அணுகவும். உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது பெரும்பாலும் கர்ப்பப்பை வாய், யோனி அல்லது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

தொடர் இருமல்

தொடர் இருமல்

தொடர்ச்சியான இருமல் பல நோய்களுடன் தொடர்புடையது மற்றும் புற்றுநோயுடன் அதன் தொடர்பு குறைவாகவே அறியப்படுகிறது. எனவே, அதை நீங்களே கண்டறிவதற்குப் பதிலாக, மருத்துவரிடம் சென்று, உங்கள் மருத்துவ வரலாற்றைக் கொடுத்து, முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீடித்த இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும்.

காதில் வலி

காதில் வலி

தொற்று இல்லாமல் உங்கள் காது வலிக்கிறதா? ஆம். நாக்கு அல்லது டான்சில் அல்லது வாயில் கூட புற்றுநோய் காரணமாக இது நடக்கலாம். எனவே, காது சொட்டுகளைப் பயன்படுத்துவது உங்களுக்கு உதவவில்லை என்றால், மருத்துவரைச் சந்தித்து உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கிறதா என்று சோதிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cancer Symptoms Women Should not Ignore in Tamil

Here are few common signs of cancer every woman should not ignore.
Story first published: Tuesday, January 25, 2022, 11:28 [IST]
Desktop Bottom Promotion