Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
இன்ஜினியரிங் படித்துவிட்டு திரையுலகில் கலக்கிக் கொண்டிருக்கும் தமிழ் பிரபலங்கள்!
நமக்கு எந்த துறையில் உண்மையான ஆர்வம் உள்ளது என்பது போக போகத் தான் தெரியும். அப்படி நம் தமிழ் திரையுலகில் மெனக்கெட்டு இன்ஜினியரிங் முடித்துவிட்டு, தற்போது திரையுலகில் பல பிரபலங்கள் ஜொலிக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் படிப்பு மிகவும் முக்கியமானது. முன்பெல்லாம் பலருக்கும் இன்ஜினியர் ஆக வேண்டுமென்ற ஆசையில், இன்ஜினியரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பார்கள். ஆனால் இக்காலத்தில் இன்ஜினியரிங் படிப்பை படிப்பதற்கு, வீட்டிலேயே இருந்துவிடலாம். அந்த அளவில் இன்ஜினியரிங் படிப்பிற்கு மதிப்பு குறைந்துள்ளது.

பொதுவாக இளம் பருவத்தில் நம்மிடம் யாராவது என்ன படிக்க விரும்புகிறாய் என்று கேட்டால், இன்ஜினியர், டாக்டர் என்று கூறுவோம். ஏனெனில் அந்த வயதில் நமக்கு தெரிந்த அளவில் பெரிய நிலை என்றால் அவை தான். ஆனால் நம் வாழ்க்கை எப்போது மாறும் என்று யாராலும் கூற முடியாது. அதேப் போல் நமக்கு எந்த துறையில் உண்மையான ஆர்வம் உள்ளது என்பதும் போக போகத் தான் தெரியும்.
அப்படித் தான் நம் தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபலங்களின் நிலையும். என்ன புரியவில்லையா? அதாவது மெனக்கெட்டு இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, தற்போது திரையுலகில் பல பிரபலங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.

கார்த்திக் குமார்
1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 இல் பிறந்த நடிகர் கார்த்திக் குமார் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராவார். இவர் திரைப்படங்களில் பல முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு கெமிக்கல் இன்ஜினியரிங் மாணவர்.

சிவகார்த்திகேயன்
1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நட்சத்திரமாக இருந்தார். பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, அடுத்த அடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மேலும் இவர் எம்.பி.ஏ பட்டதாரியும் கூட.

கவுதம் மேனன்
1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தவர் தான் கவுதம் மேனன். இவர் மிகவும் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனரும் கூட. இவர் கேரளாவில் பிறந்தாலும், தமிழ் சினிமாவில் தான் அதிகம் வேலைப் பார்த்துள்ளார். இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர்.

டாப்ஸி பன்னு
ஆடுகளம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் தான் நடிகை டாப்ஸி. இவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். திரையுலகில் காலடியைப் பதிக்கும் முன் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிப் புரிந்துள்ளார் என்றால் பாருங்கள்.

பிரசன்னா வெங்கடேசன்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஓர் முகம் தான் நடிகர் பிரசன்னா. இவர் பிரபல நடிகை ஸ்நேகாவின் கணவரும் கூட. நடிகர் பிரசன்னா ஒரு EEE மாணவர் ஆவார்.

ஆர்யா
1980 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி கேரளாவில் பிறந்தவர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவில் தான் அதிகம் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள கிரிசண்ட் இன்ஜினியரிங் கல்லூரியில், தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.

கார்த்தி சிவக்குமார்
பிரபல நடிகர் சிவக்குமாரின் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி தான், நடிகர் கார்த்தி. இவரது குடும்பமே திரையுலகில் மிகவும் பிரபலமானது. கார்த்தி நடித்த அனைத்து திரைப்படங்களுமே தமிழில் வெற்றியைக் குவித்துள்ளது. இவர் 1977 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி பிறந்தார். இவர் தனது மேல் படிப்பை அமெரிக்காவில் தான் முடித்தார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமின்றி, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படிப்பையும் படித்துள்ளார்.

கணேஷ் வெங்கட்ராமன்
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் தான் கணேஷ் வெங்கட்ராமன். இவரது குடும்பத்தில் கல்வி மிகவும் முக்கியம் என்பதால், இவர் தனது பள்ளியில் மட்டுமின்றி, கல்லூரியிலும் முதல் மாணவராக திகழ்ந்தார். இவர் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்த்துள்ளார். அந்த பணியில் இருந்த போது, இவரை மாடலிங் செய்ய பலர் ஊக்குவித்ததில், இவர் திரையுலகில் நுழைந்துவிட்டார்.

சங்கர் மகாதேவன்
1988 இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரியை முடித்துள்ளார் சங்கர் மகாதேவன். இவர் திரையுலகில் காலடியைப் பதிப்பதற்கு முன், இவர் ஆரக்கிள் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிப் புரிந்துள்ளார்.

மாதவன்
ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக திரையுலகில் ஜொலித்தவர் தான் நடிகர் மாதவன். இவர் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்து முன்னேறியவர். இவர் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை படித்தவர் ஆவார்.

சோனு சூத்
நடிகர் சோனு சூத் அழகான உடல் கட்டமைப்பைக் கொண்டவர். இவர் பல மொழிகளில் நடித்துள்ளார். முக்கியமாக இவர் வில்லன் கதாப்பாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துவார். இவர் ஒரு எலக்ட்ரானிக்கல் இன்ஜினியர் ஆவார்.

கனிகா
நடிகை கனிகா பி.டெக் படிப்பை படித்தவர். இவர் தனது என்ஜினியரிங்கை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் முடித்தார்.



Click it and Unblock the Notifications











