Just In
- 4 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 6 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 11 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 12 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு.. கொத்தனாரின் உச்சக்கட்ட வெறித்தனம்.. மிரண்டுபோன விருதாச்சலம்
- Sports
ரஞ்சி கோப்பையில் புதிய வரலாறு.. 41 முறை சாம்பியன் மும்பை தோல்வி.. 23 ஆண்டுகள் ம.பி அணியின் கனவு கதை
- Movies
400 கோடி கிளப்பில் விக்ரம்...நான்ஸ்டாப் வசூல் வேட்டை..அடிச்சு தூக்கும் லோகி – கமல் காம்போ
- Finance
பணத்தை அச்சடிக்க 5000 கோடி செலவு செய்த ஆர்பிஐ.. பணமதிப்பிழப்புக்கு பின் இதுதான் அதிகம்..!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Business Horoscope 2022: குருவின் அருளால் 2022-ல் இந்த ராசிகளுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்குமாம்..!
2022 ஆம் ஆண்டு வரப்போகிறது. வியாபாரம் செய்யும் பலருக்கு வரவுள்ள புதிய ஆண்டு எந்த மாதிரி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் ஆர்வம் இருக்கும். அதேப் போல் புதிதாக தொழில் தொடங்க நினைப்போருக்கு, இந்த ஆண்டு சாதகமாக இருக்குமா என்ற கேள்வி மனதில் இருக்கும்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், ஜோதிடம் அதற்கு உதவி புரியும். கீழே 2022 ஆம் ஆண்டில் 12 ராசிகளுக்கும் வியாபாரம் எப்படி இருக்கப் போகிறது என கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
2022 ஆம் ஆண்டில் தொழில் செய்யும் மேஷ ராசிக்காரர்களின் வியாபாரம் வேகமாக வளரும். புதிதாக தொழில் தொடங்கினால், நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பல வெற்றியைத் தரும் புதிய யோசனைகள் உங்கள் மனதில் நிறைந்திருக்கும். இக்காலத்தில் வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆண்டின் இறுதியில், நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒப்பந்தமும் செய்யும் போது அவசரப்படாதீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டு புதிய திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு குறைந்த முயற்சியில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் தொழிலுடன் தொடர்புடைய சில செல்வாக்கு மிக்க நபர்களுடன் இணையும் வாய்ப்பையும் பெறுவீர்கள். இது தவிர, உங்கள் தடைப்பட்ட வேலைகளையும் இந்த நேரத்தில் முடிப்பீர்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன் அனுபவம் வாய்ந்த சிலரின் ஆலோசனைகளை எடுத்துக் கொண்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மறுபுறம், பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
2022 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு வணிக ரீதியில் கலவையான முடிவுகளைத் தரும். லாபம் ஈட்ட நீங்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். எவ்வளவு துன்பத்திலும், உங்கள் தைரியம் நிலைத்திருக்கும். அனைத்து சவால்களையும் முழு நேர்மறையுடன் எதிர்கொள்வீர்கள். இந்த வருடம் ஏதேனும் புதிய வேலைகளைத் தொடங்க விரும்பினால், ஆண்டின் நடுப்பகுதி இதற்கு சாதகமாக இருக்கும். அவசரப்பட்டு எதிலும் கையெழுத்து போடாதீர்கள். கூட்டு வணிகம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளியை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடக ராசிக்காரர்களின் வியாபாரம் மெதுவாகவே வளரும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதி அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள், எனவே நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் பெரிய லாபத்தைப் பெற கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், உங்கள் ஒவ்வொரு பிரச்சனையும் எளிதில் தீர்க்கப்படும்.

சிம்மம்
2022 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக முதலீட்டு முடிவுகளை எடுக்கும்போது, நீங்கள் அவசரப்பட வேண்டாம். மேலும், மற்றவர்களின் விருப்பத்தின் பேரில் உங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் வணிகம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் சிறிய பணிகளை கூட முடிக்க நீங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் வணிக விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டில் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், இதற்காக நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு ஆண்டின் முதல் பாதி மிகவும் சிறப்பாக இருக்கும். ஆண்டின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் வியாபாரம் வலுவடையும்.

துலாம்
வியாபாரம் செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு சவாலானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பாதையில் பல தடைகள் இருக்கலாம். இருப்பினும், பாதகமான சூழ்நிலைகளில் கூட, நீங்கள் நிதானத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு கடினமான காலமாக இருக்கும். கூட்டாளருடனான உறவு மோசமடையக்கூடும், இது உங்கள் வணிகத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். கூட்டாண்மையில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க நினைத்தால் அதற்கு இந்த ஆண்டு சரியில்லை. சட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் இருந்தால் நல்லது, இல்லையெனில் லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படும். கடந்த ஆண்டு உங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போனாலும், இந்த ஆண்டு அவற்றை முடிக்க கடினமாக உழைக்கவும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் லாபம் ஈட்ட மிகவும் கடினமாக போராட வேண்டியிருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு வணிக விஷயத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளுக்கு நல்ல பலன்களை பெறுவீர்கள். இருப்பினும் பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் இருந்தால் நல்லது. நீங்கள் கூட்டாக வணிகம் செய்தால், இந்த நேரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும். உங்கள் கூட்டாளருடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும், மேலும் நீங்கள் வியாபாரத்திலும் நல்ல லாபத்தைப் பெறலாம். உங்கள் பாதையில் சில தடைகள் இருந்தாலும், ஒவ்வொரு சவாலையும் மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு உங்களுக்கு சில புதிய வாய்ப்புகளைத் தரலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் 2022 ஆம் ஆண்டு வியாபாரத்தில் கலவையான பலன்களைப் பெறுவார்கள். கடினமாக உழைத்து சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். வருடத்தின் ஆரம்பம் உங்களுக்கு சற்று ஏமாற்றமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். இருப்பினும், எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதீர்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் முக்கியமான முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள், இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் அனுபவமிக்கவர்களிடமிருந்து சில நல்ல ஆலோசனைகளைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நீங்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு இது நல்ல நேரம். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் நிதி பிரச்சனைகளும் இந்த வருடம் தீரும். இருப்பினும், நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் பல குறுகிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் பழைய தொடர்புகளால் நல்ல லாபம் பெறலாம். ஆண்டின் இறுதியில், உங்கள் வணிகம் மிக வேகமாக வளரும். வங்கியில் கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! 2022 ஆம் ஆண்டில் எந்த ஒரு சட்ட விஷயங்களிலும் அலட்சியம் காட்டாதீர்கள். விரைவான லாபம் ஈட்ட குறுக்குவழி வழிகளைத் தவிர்க்கவும். சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது வேலை செய்தால் நீண்ட நாள் பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க விரும்பினால், ஆண்டின் நடுப்பகுதி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நல்ல லாபம் பெறலாம். உங்கள் முக்கியமான வேலையில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், ஆண்டின் இறுதியில் நீங்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் உங்கள் வியாபாரமும் வேகமாக வளர்ச்சி அடையும்.