Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கற்பூரத்தோடு கிராம்பைப் போட்டு எரிங்க.. அப்புறம் நடக்கும் அதிசயங்களைப் பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
பல ஆண்டுகளாக மக்கள் இந்த கிராம்பு கொண்டு பரிகாரங்களை முயற்சித்து வருகின்றனர். மேலும் அவற்றால் வெற்றியையும் கண்டுள்ளனர்.
இந்து மதத்தில் கிராம்பு மிகவும் புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது. கிராம்புகள் உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கிறது என்பதை அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் அந்த கிராம்புகளின் பயன்பாடு ஜோதிடத்தில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, கிராம்புகளைக் கொண்டு மேற்கொள்ளும் பரிகாரங்கள் இடைநிறுத்தப்படுத்த பணிகளையும் வெற்றிகரமாக தொடங்க செய்யும். ஏனெனில், இது ஆற்றலின் கேரியராகக் கருதப்படுகிறது.

உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றி, கனவுகளை நிறைவேற்ற விரும்பினால், கிராம்புகளைக் கொண்டு பரிகாரம் செய்ய முயற்சி செய்யுங்கள். விஞ்ஞான ரீதியாக இதற்கு சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், பல ஆண்டுகளாக மக்கள் இந்த கிராம்பு கொண்டு பரிகாரங்களை முயற்சித்து வருகின்றனர். மேலும் அவற்றால் வெற்றியையும் கண்டுள்ளனர். இப்போது அதிசயங்களைப் புரியும் கிராம்புகள் வைத்து செய்யப்படும் சில பரிகாரங்களைக் காண்போம். அதைப் படித்து நீங்களும் நம்பிக்கையுடன் பின்பற்றி நன்மை பெறுங்கள்.

ராகு-கேது பிரச்சனை நீங்க...
நீங்கள் ராகு-கேதுவால் பிரச்சனைகளை சந்தித்து, உங்களின் ஜாதகத்தில் ராகு-கேதுவின் நிலை சாதகமாக இல்லாவிட்டால், சனிக்கிழமைகளில் கிராம்புகளை தானம் செய்யுங்கள். ஒருவேளை யாரும் கிராம்புகளை எடுக்காவிட்டால், அவற்றை சிவலிங்கத்திற்கு படைக்கலாம். இப்படி தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருக்கமடைந்து, ராகு-கேதுவின் மோசமான விளைவுகளும் முடிவுக்கு வரும்.

சிக்கிய பணம் கிடைக்க...
நீங்கள் யாருக்கேனும் பணம் கொடுத்து அது வராவிட்டால் அல்லது வர வேண்டிய பணம் கைக்கு வர தாமதமானால், அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று இரவு 11 அல்லது 21 கிராம்பை கற்பூரத்துடன் சேர்த்து எரிக்க வேண்டும். அதன் பின் லட்சுமி தேவியை நினைத்து தியானம் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்கும் மற்றும் பணத்தைப் பெறுவதற்கான வழியும் தெளிவாக தெரிய வரும்.

எதிலும் வெற்றி காண...
நீங்கள் இன்டர்வியூ சென்றால் அல்லது ஏதேனும் வேலையாக வெளியே சென்றால், அது வெற்றிகரமான முடிய வேண்டுமென்றால், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், 2 கிராம்பை வாயில் போட்டு செல்லுங்கள் மற்றும் சிலவற்றை பணியிடத்தில் எறிந்துவிடுங்கள். அதன் பின், உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை நினைத்து தியானித்து, வேலை வெற்றிகரமாக முடிய பிராத்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதால், நிச்சயம் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும் என்று கூறப்படுகிறது.

கடின உழைப்பிற்கான பலன் பெற...
நீங்கள் கடினமாக உழைத்தப் பிறகும், அதற்கான பலன் கிடைக்காவிட்டால், செவ்வாய்க்கிழமை அன்று அனுமனுக்கு முன் மல்லிகை எண்ணெயால் விளக்கு போட்டு, அதில் 2 கிராம்பை போடுங்கள். அதன் பின் ஹனுமன் சாலிசாவைப் படித்து, ஆரத்தி காட்டி, அனுமனிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள். இவ்வாறு 21 செவ்வாய்க்கிழமை செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.

செல்வம் பெருக...
தந்த்ரா சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவியை வணங்கும் போது ரோஜா பூக்களுடன் 2 கிராம்புகளையும் வைத்து வணங்குங்கள். தினமும் செய்ய முடியாவிட்டால், வெள்ளிக்கிழமை அன்று செய்யுங்கள். இது தவிர 5 கிராம்புகளை 5 சிப்பியுடன் ஒரு சிவப்பு துணியில் வைத்து கட்டி, பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் செல்வம் வருவதற்கான பாதை திறக்கப்படும்.

வாழ்வில் உள்ள இடையூறுகள் நீங்க...
உங்களின் முடிக்கப்பட்ட வேலை கெட்டுப்போனால் அல்லது நல்ல வேலைக்கு இடையூறு ஏற்பட்டால், ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 அல்லது 4 கிராம்புகளை ஒரு எண்ணெய் விளக்கில் எரித்து பின்னர் வீட்டின் இருண்ட மூலையில் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி போய்விடும். உங்களின் நிறுத்தப்பட்ட பணிகளும் படிப்படியாக நடத்தப்படும்.



Click it and Unblock the Notifications