Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சொந்தக்காரர் 1 லட்சம் மொய் செய்யலனு கல்யாணத்தை நிறுத்திய மணமகள்...
விருந்தினர்கள் திருமண பரிசாக தலா 1 லட்சம் செலுத்த மறுத்த பிறகு திருமணத்தை நிறுத்திய மணமகள் பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியர்கள் தங்கள் திருமணங்களுக்கு நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் சூசனின் விலையுயர்ந்த திருமண கோரிக்கைகளைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, இந்திய திருமணங்களைப் பற்றி நீங்கள் மறந்து விடுவீர்கள்.

கனடாவைச் சேர்ந்த சூசன், திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு தனது திருமணத்தை நிறுத்திவிட்டார். ஏனெனில் விருந்தினர்கள் திருமண பரிசாக 1,500 டாலர் (ரூ.1,06,000) கொடுக்க மறுத்துவிட்டனர்.

திருமணம்
தனது பேஸ்புக் பதிவில், தனது நண்பர்களால் தனது பரிசுகளை பண வடிவில் கொடுக்க முடியாது என்று கூறியதற்காக அவர் கோபப்படுகிறார். அவர் கூறுகிறார், "அன்புள்ள நண்பர்களே, திருமணத்தை ரத்து செய்வதாக நான் அறிவிப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. திருமண நாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே ரத்து செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நின்று போனது
துரதிர்ஷ்டவசமாக, [வருங்கால கணவர்] மற்றும் என்னுடைய சமீபத்திய மற்றும் சரிசெய்ய முடியாத சில சிக்கல்களால் பிரிந்து விட்டோம். எங்கள் உறவை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம். அதனால் திருமணம் குறித்த எந்த ஒரு செயல்பாடுகளும் இனி நடைபெறாது."

காரணம் என்ன?
அந்தப் பதிவில் அவர், தானும் தனது வருங்கால கணவரும் இணைந்து தங்கள் திருமணத்திற்காக $ 15k சேமித்து வைத்திருந்ததாகவும், ஒரு திருமணம் சார்ந்த பதிவை வாசித்தபின், அவர்கள் தங்கள் திருமணத்திற்காக $60k செலவு செய்ய முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த காரணத்திற்காக, அவர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து உதவி கேட்டிருக்கிறார்கள். 8 பேர் மட்டுமே பணத்துடன் பதிலளித்த காரணத்தால், சூசன் கோபமடைந்தார்.

என்ன செய்தார்?
தனது கனவு திருமணத்தில் தனக்கு உதவாததற்காக தனது நண்பர்களையும் குடும்பத்தினரையும் குற்றம் சாட்டத் தொடங்கினார் சூசன். அவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஒரு திருமணத்திற்காக அதிக பொருட்செலவு செய்வது என்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் இதனை வலியுறுத்திக் கேட்பதன் மூலம் சூசன் எந்த அளவிற்கு ஆடம்பரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார் என்பது தெரிய வருகிறது.



Click it and Unblock the Notifications











