For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகள் போல் வேடமிட்டு ஜெயிலில் இருந்து தப்பிய திருட்டு கும்பல் தலைவர்... அப்புறம் என்ன நடந்தது?

பிரேசிலிய கும்பல் தலைவர் மாறுவேடமிட்டு தப்பிக்க முயன்ற போது கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, வாருங்கள் அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.

|

ரியோ டி ஜெனிரோ என்ற சிறைச்சாலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய கொள்ளைக்கார கும்பல் தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brazilian Gang Leader Disguised As Teenage Daughter In A Failed Jailbreak Attempt Found Dead

42 வயதைச் சார்ந்த கிளாவினோ டா சில்வா என்ற இவர் ஜெயிலுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிக்கலான சிறைச்சாலை

சிக்கலான சிறைச்சாலை

சிக்கலான சிறைச் சாலையில் இருந்து நமது ஹீரோக்கள் தப்பிக்கும் நிறைய திரைப்படங்களை நாம் பார்த்து உள்ளோம். அதே மாதிரி தான் தப்பிக்க முயன்றுள்ளார் கிளாவினோ டா சில்வா.

பெண் மாறுவேடம்

பெண் மாறுவேடம்

இந்த கொள்ளைக்கார கும்பல் தலைவர் தனது 19 வயது மகளைப் போல மாறுவேடம் போட்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் முகத்திற்கு போட்டிருந்த மாஸ்க் அவரை காட்டி கொடுத்து விட்டது.

MOST READ: மும்பை-புணேவுக்கு வெறும் 30 நிமிடத்துல போற ஹைப்பர்லூப் ரயில் திட்டம்... இதுதாங்க ஃபர்ஸ்ட்

தோல்வி

தோல்வி

இப்படி அவர் தப்பிக்க முயற்சி செய்த இரண்டாவது முயற்சியும் தோல்வியை தழுவியது. அவர் பெண் மாதிரி மாற போட்டிருந்த சிலிக்கான் மாஸ்க், கண்ணாடி, விக், அவர் அணிந்திருந்த ஆடை எல்லாமே அவருக்கு என்னவோ கச்சிதமாக பொருந்தவில்லை. இதனால் அவரால் சிறையில் உள்ள காவலர்களை ஏமாற்ற முடியாமல் போனது.

பிடிபட்டார்

பிடிபட்டார்

ஆனால் போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து விட்டனர். தன்னை பார்க்க வரும் மகள் போல மாறுவேடம் அணிந்து தப்பித்து விடலாம் என்ற அவரது எண்ணம் சீர்குலைந்தது. அவரது மாறுவேடத்தை போலிஸார் களைத்து விட்டனர்.

MOST READ: கலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்? எத்தனைக்கு மேல் சாப்பிடக்கூடாது?

கூடுதல் சிறை தண்டனை

கூடுதல் சிறை தண்டனை

அவரது மகள், அனா கேப்ரியல் லியாண்ட்ரோ டா சில்வா, அவரது தந்தைக்கு தப்பிக்க உதவியதால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.அதே மாதிரி 42 வயதான ஈதன் ஹன்ட் வன்னபே தனிச் சிறைக்கு மாற்றப்பட்டு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தண்டனையுடன் தப்பிக்க முயற்சி செய்ததற்காக 73 ஆண்டுகள் கூடுதல் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தியதற்காக இவர் இந்த தண்டனைகளை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brazilian Gang Leader Disguised As Teenage Daughter In A Failed Jailbreak Attempt Found Dead

The Brazilian gang leader who made headlines with his failed jailbreak from a prison in Rio de Janeiro has been found dead. Clauvino da Silva, 42, appeared to have hanged himself with a sheet in his cell. Brazilian authorities have opened an investigation.
Story first published: Monday, August 12, 2019, 18:08 [IST]
Desktop Bottom Promotion