Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கருப்பு எறும்பு அல்லது சிவப்பு எறும்பு - இவற்றில் எது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமானது?
எறும்புகள் வீட்டில் இருக்கும் இடங்கள் மற்றும் எறும்புகள் வெளியேறும் திசைகள் போன்றவை எவற்றை குறிக்கின்றன என்பது தெரியுமா? இந்த அனைத்து கேள்விகளுக்குமான விடையைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நம் வாழ்வில் நடக்கும் அல்லது நாம் காணும் விஷயங்கள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. அதில் ஒன்று தான் எறும்புகள். எறும்புகளைக் கொண்டு ஒருவரது வாழ்வில் நடக்கவிருக்கும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை அறிய முடியும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, எறும்புகள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையவை. நாம் நமது வீட்டு இரண்டு வகையான எறும்புகளை காண்போம். அவை கருப்பு எறும்புகள் மற்றும் சிவப்பு எறும்புகள்.

இந்த இரண்டு வகையான எறும்புகளில் எது அதிர்ஷ்டமானது? மேலும் இந்த எறும்புகள் வீட்டில் இருக்கும் இடங்கள் மற்றும் எறும்புகள் வெளியேறும் திசைகள் போன்றவை எவற்றை குறிக்கின்றன என்பது தெரியுமா? இந்த அனைத்து கேள்விகளுக்குமான விடையைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

சிவப்பு எறும்புகள் மற்றும் கருப்பு எறும்புகள்
ஒருவரது வீட்டில் கருப்பு எறும்புகள் அதிகம் இருந்தால், அது நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. அதுவே சிவப்பு எறும்புகள் அதிகம் இருந்தால், அது மோசமான சூழ்நிலையைக் குறிக்கிறது. வீட்டில் சிவப்பு எறும்புகள் அதிகம் இருப்பது, அந்த வீட்டின் கடனை அதிகரிப்பதோடு, பேரழிவின் அறிகுறியாக நம்பப்படுகிறது. இப்போது வீட்டில் எறும்புகள் உள்ள இடம், திசை மற்றும் இயக்கம் எதைக் குறிக்கிறது என்பதை சற்று விரிவாக காண்போம்.

செல்வம் அதிகரிக்கும்
முன்பே கூறியது போல, கருப்பு எறும்புகள் மிகவும் அதிர்ஷ்டமானதாக நம்பப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் கருப்பு நிற எறுப்புகள் சுற்றிக் கொண்டிருந்தால், அது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. அதுவே சிவப்பு நிற எறும்புகள் சுற்றிக் கொண்டிருந்தால், அது துரதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. அதாவது நிதி இழப்பைக் குறிக்கிறது.

அரிசி பாத்திரத்தில் எறும்பு
கருப்பு எறும்புகள் அரிசி பாத்திரத்தில் இருந்து வெளியே வந்தால், அது நீங்கள் விரைவில் பணத்தைப் பெறப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. ஒருவேளை கருப்பு எறும்புகானது தங்கம் வைத்திருக்கும் இடங்களில் தென்பட்டால், உங்களைத் தேடி தங்கம் வரப் போவதைக் குறிக்கிறது.

எறும்புகளின் திசை
ஒருவரது வீட்டில் எறும்புகள் வடக்கில் இருந்து வந்தால், அது மகிழ்ச்சியைக் குறிக்கிறது. அதுவே எறும்புகள் தெற்கில் இருந்து வந்தால், அது நிதி வெற்றியைக் குறிக்கிறது. எறும்புகள் கிழக்கு திசையை நோக்கி சென்றால், அது மோசமான செய்தியை பெறப்போவதைக் குறிக்கிறது மற்றும் மேற்கு பகுதியை நோக்கு எறும்புகள் சென்றால், அது நீங்கள் விரைவில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப் போவதைக் குறிக்கிறது.

துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சிவப்பு எறும்புகள்
உங்கள் வீட்டினுள் சிவப்பு நிற எறும்புகள் சுற்றிக் கொண்டிருந்தால், அவற்றை உடனே வீட்டில் இருந்து அகற்றுங்கள். ஏனெனில் சிவப்பு எறும்புகள் துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஒருவேளை சிவப்பு எறும்புகள் வீட்டில் இருந்து வெளியே செல்வதைக் கண்டால், அது ஒரு நல்ல அறிகுறியாகும்.

கரையான்கள் மற்றும் தேனீக்கள்
சிவப்பு எறும்புகளைத் தவிர, கரையான்களும், தேனீக்களும் துரதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. அதுவும் கரையான்களும், தேனீக்களும் வீட்டில் இருந்தால், அந்த வீட்டின் குடும்ப தலைவர் ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்படுவாராம். எனவே இவை உங்கள் வீட்டில் இருந்தாலும் அப்புறப்படுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
