Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
ஆளுமை எண் என்பது ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் கூட்டி பெறப்படும் ஒற்றை எண்ணாகும். இப்போது ஒருவரின் பிறந்த நாள் மற்றும் அவரது மறைமுகமான குணாதிசயம் என்னவென்பதைக் காண்போம்.
நியூமராலஜி என்பது எண்களின் அறிவியல். இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒருவித ஆற்றல் இருப்பது போது, எண்களுக்கும் ஆற்றல் உண்டு. ஒருவருடன் இணைக்கப்பட்டுள்ள எண்கள் அல்லது எழுத்துக்கள் வெவ்வேறு ஆற்றலைக் கொண்டிருக்கின்றன மற்றும் அவை வாழ்வில் வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சரி, எண்களைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையை மாற்ற முடியுமா என்று பலரும் கேட்கலாம்.

எண்கள் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. எண்களை கூட்டவோ அல்லது கழிக்கவோ செய்வதனால், அது வாழ்வில் விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்த உதவும். முக்கியமாக நியூமராலஜியானது ஒருவரின் மறைமுகமான திறமைகள், வலிமை மற்றும் பலவீனத்தை கண்டறிய உதவுகிறது. நியூமராலஜியில் ஆளுமை எண் மற்றும் விதி எண் என இரண்டு விதமான எண்கள் உள்ளன. இதில் ஆளுமை எண் என்பது ஒருவரின் குணாதிசயங்களைக் குறிக்கிறது. ஆளுமை எண் என்பது ஒருவரின் பிறந்த தேதியை மட்டும் கூட்டி பெறப்படும் ஒற்றை எண்ணாகும். இப்போது ஒருவரின் பிறந்த நாள் மற்றும் அவரது மறைமுகமான குணாதிசயம் என்னவென்பதைக் காண்போம்.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள். இவர்கள் சுதந்திரமானவர்கள், தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருப்பார்கள், உறுதியானவர்கள், படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள்.

எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் உள்ள பலரும் அறியாத குணாதிசயங்கள் என்றால், அது இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள், மென்மையான இதயம் கொண்டவர்கள்.

எண் 3
3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் உள்ள மறைமுகமான குணாதிசயங்கள் என்றால், இவர்கள் ஒழுக்கமானவர்கள், நல்ல ஆலோசகராக இருப்பார்கள், ஊக்கமளிக்கும் நபராக இருப்பர், மிகவும் நம்பிக்கையானவர்களாக இருப்பர்.

எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடம் உள்ள மறைமுகமான குணாதிசயங்கள் என்றால், இவர்கள் எதையும் சிறப்பாக செய்யக்கூடியவர்கள், திட்டமிடுவதில் கில்லாடிகள், கடின உழைப்பாளிகள்.

எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாளராக இருப்பார்கள், அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள், வைராக்கியம் கொண்டவர்கள் மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்கள்.

எண் 6
6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அன்பானவர்கள், அழகானவர்கள், வசீகரமானவர்கள் மற்றும் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பர்.

எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு ரகசியம் என்றால், இவர்கள் எதையும் ஆய்வதில் வல்லவர், விமர்சகர், பகுப்பாய்வு செய்வதில் வல்லவர்.

எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் உள்ள மறைமுகமான குணாதிசயங்கள் என்றால், இவர்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், எதையும் மெதுவாகவே தொடங்குவார்கள், பயமில்லாதவர்கள்.

எண் 9
9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சமூக சேவகர்களாக இருப்பர், குடும்பத்தை அதிகம் நேசிப்பவராக இருப்பர் மற்றும் மிகவும் அடக்கமானவர்கள்.



Click it and Unblock the Notifications