For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிப் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்?… நம் முன்னோர்கள் அதன் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா

போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.

|

போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும்.

Bhogi Pongal 2022: History, Importance and How It is Celebrated

போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல், மாயிலை தோரணங்கள் கட்டுவது போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். பெரும்பாலும் தமிழகத்தில்தான் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில், போகிப் பண்டிகைக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. போகி பண்டிகையை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அதற்கு பின் இருக்கும் காரணங்களாக நமது முன்னோர்கள் குறிப்பிடுபவை என்ன என்று இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போகிப்பண்டிகை

போகிப்பண்டிகை

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் ஜனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

MOST READ:உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வித்தியாசமா பொங்கல் வாழ்த்து சொல்லனுமா?... அப்ப இத அனுப்புங்க...!

போக்கி மருவி போகியானது

போக்கி மருவி போகியானது

"பழையன கழித்தலும், புதியன புகுதலும்" போகிப் பண்டிகையின் நோக்கமாக கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் வீட்டைவிட்டு அப்புறபடுத்தும் நாளாகக் கருதப்படுகிறது. அழித்துப் போக்கும் இப்பண்டிகையை நம் முன்னோர்கள் "போக்கி' என்று அழைத்தனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி தமிழ் ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.

பழையன கழித்தல்

பழையன கழித்தல்

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். தேவையற்ற குப்பைகளை தீ மூட்டி கொளுத்துவார்கள்.

தீயில் எரிப்பது

தீயில் எரிப்பது

தீயில் வெறும் தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், நம் மனதிலிருக்கும் பழைய கவலைகளையும், ஒழுக்கமற்ற எண்ணம் மற்றும் செயல்களையும், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

MOST READ:நகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

புதியன புகுதல்

புதியன புகுதல்

பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பொங்கல் நாளில் பழைய எண்ணங்கள் முற்றும் அழிந்து புதிய நல்லெண்ணங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது

வீட்டை சுத்தப்படுத்துதல்

வீட்டை சுத்தப்படுத்துதல்

இதையொட்டியே பொங்கலுக்கு முன்பு வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள். மேலும் கிராமபுறங்களில் வீட்டு திண்ணைகளில் சுண்ணாம்பால் பல வண்ண கோலங்களை போட்டுவார்கள். இந்த அழகான கோலங்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தை முதல் வீடு முழுவதும் சுத்தமாகவும், மனம் முழுவதும் சந்தோஷமாக கொண்டாட போகி நாளில் இவ்வாறு செய்யப்படுகிறது. நோய்கிறிமிகள் தாக்கமல் வாழலாம்.

போகி பூஜை

போகி பூஜை

போகிப் பண்டிகையன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம் கட்டியும், தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி தன் குல தெய்வத்தை வணங்குவார்கள்.

MOST READ:தை பொங்கல் ஸ்பெஷல்... தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா?

போகி படையல்

போகி படையல்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்ற காட்டில் விளைந்த தானியங்களை விதவிதாமக சமைத்து படையலிடுவார்கள். மேலும், நிலத்திற்கு ஏராளமான செழிப்பைக் கொடுக்கும் மழைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த படையல் போட்டு வணங்குவார்கள்.

மாசில்லா போகி

மாசில்லா போகி

போகிப் பண்டிகையின்போது, வீட்டில் சில தேவையற்ற பொருட்களை அக்னியில் இட்டு எரிக்கலாம். ஆனால் தற்போது காற்று மாசு அதிகம் உள்ளது. பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு மேலும் அதிகரிக்கும். ஆதலால், பிளாஸ்டிக், டயர்கள் உள்ளிட்டவை எரிக்காமல் புவியையும், சுற்றுச்சூழலையும் காப்போம். மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட அனைவரும் முயற்சி செய்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bhogi Pongal 2022: History, Importance and How It is Celebrated

Here we talking about the bhogi significance and celebrations how bhogi is celebrated.
Desktop Bottom Promotion